கனடாவில் நடந்த கோலாகலத் தமிழர் திருவிழா

 கனடாவில் நடந்த கோலாகலத் தமிழர் திருவிழா

உலகிலேயே கனடாவில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கிறார்கள். தினம் தினம் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன் காரணமாக தமிர்களின் நெருக்கம் உறவு கலாச்சாரங்கள் வளர்ந்துகொண் டிருக்கிறது.

அந்த வகையில் தமிழர்களின் கலாச்சாரம், அதன் பாரம்பரியச் செயல்பாடு கள் மற்றும் சுவையான தமிழ் உணவை அனைவருடனும் பகிர்ந்து கொள் வதன் மூலம் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் அளவில் மிகப்பெரிய அளவில் ‘டொராண்டோ தமிழர் தெரு விழா 2022’வை கடனா தமிழர் பேரவை ஆகஸ்ட் 27 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் 11 மணி வரையும், ஆகஸ்ட் 28ஆம் தேதி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் மெக்னிகோல் அவே மற்றும் பாஸ்மோர் ஏவ் இடையே மார்க்கம் சாலை யில் நடைபெற்றது!

இந்த விழாவில் இந்திய வம்சாவளியினர் சட்ட அமைச்சர் அனிதா ஆனந்த் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். கனடா மேயர், இலங்கை யைச் சேர்ந்த அமைச்சர்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.

அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ளதைப்போலவே பெண்கள் அணிமணிகளான சிறிய அரங்கு காண் போரை வியப்பில் ஆழ்த்தியது. குழந்தைகளுக்காக சிறப்புக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. ரெடிமேட் ஆடைகளுக்கான கடைகளும் பெரிய அளவில் இருந்தது. அதோடு தமிழர்களின் கலாசாரமான உணவுச் சந்தை யும் இடம்பெற்று அருமையான சுவை வாசனை உணர்வை ஏற்படுத்தியது.

இந்தச் சிறப்புமிக்க ‘தமிழ் விழா’ கடந்த ஏழு ஆண்டுகளாக வெற்றிகரமாக இங்கு நடைபெற்று வருகிறது, கிழக்கு டொராண்டோ வரலாற்றில் இது மிகப்பெரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

கனடாவில் உள்ள மொத்த தமிழ் குடும்பமும் இரண்டு நாட்களும் கொண் டாட்டம், கும்மாளம், பொழுதுபோக்கு என ஒன்று சேர்ந்தனர்.

இந்த விழாவில் உள்ளூர் மற்றும் சர்வதேசக் கலைஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தினார்கள். பரதநாட்டியம், தமிழிசை, பாட்டு, நடனம் என அனைத்தையும் ரசிக்கலாம். உலகின் மிகப் பழமையான இசைக்கருவிகளில் ஒன்றான ‘பறை’யை ரசித்து இசைத்தனர்.

சுமார் 19 உணவு விற்பனையாளர்கள் பல்வேறு சுவையான தமிழ் உணவு களை விற்பனை செய்தனர். இனிப்பு மற்றும் காரமான உணவுகள் வரை அனைத்தையும் வகைப்படுத்தப்பட்டு பரபரப்பான விற்பனை ஆனது.. இந்த நிகழ்வில் பல ஐஸ்கிரீம் விற்பனையாளர்களும் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கியூபெக்கின் முன்னாள் பிரதமர், மேயர்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்கள் மற்றும் பல செல்வாக்கு மிக்க பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...