வரலாற்றில் இன்று ( திசம்பர் 01)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

டிசம்பர் 1  கிரிகோரியன் ஆண்டின் 335 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 336 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 30 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1420 – இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி மன்னன் பாரிசை முற்றுகையிட்டான்.
1640 – போர்த்துக்கல் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது. நான்காம் ஜொவாவோ மன்னனானான்.
1768 – அடிமைகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று நோர்வேக்கருகில் மூழ்கியது.
1822 – முதலாம் பீட்டர் பிரேசிலின் பேரரசன் ஆனான்.
1875 – வேல்ஸ் இளவரசர் (இங்கிலாந்தின் ஏழாம் எட்வேர்ட் மன்னர்) கொழும்பு வந்தார்.
1918 – ஐஸ்லாந்து டென்மார்க் முடியாட்சியின் கீழ் சுயாட்சி உரிமை பெற்றது.
1918 – சேர்பிய, குரொவேசிய, சிலவேனிய இராச்சியம் (பின்னர் யூகொஸ்லாவிய இராச்சியம்) அமைக்கப்பட்டது.
1924 – எஸ்தோனியாவில் கம்யூனிசப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
1934 – சோவியத் ஒன்றியத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீட உறுப்பினர் செர்கே கீரொவ் கட்சித் தலைமையகத்தில் வைத்து லியொனீட் நிக்கொலாயெவ் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1958 – பிரான்சிடம் இருந்து மத்திய ஆபிரிக்கக் குடியரசு விடுதலை பெற்றது.
1958 – சிக்காகோவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 92 மாணவர்கள் உட்பட 95 பேர் கொல்லப்பட்டனர்.
1959 – பனிப்போர்: அண்டார்டிக்கா கண்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அக்கண்டத்தை அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
1960 – கொங்கோ அதிபர் பத்திரிசு லுமும்பா இராணுவத் தளபதி மொபுட்டுவினால் கைது செய்யப்பட்டார்.
1961 – இந்தோனீசியாவின் மேற்கு நியூ கினியில் மேற்கு பப்புவா குடியரசு அறிவிக்கப்பட்டது.
1963 – நாகாலாந்து இந்தியாவின் 16வது மாநிலமானது.
1965 – இந்தியாவில் எல்லைக் காவற்படை அமைக்கப்பட்டது.
1971 – இந்திய இராணுவம் காஷ்மீரின் ஒரு பகுதியைப் பிடித்தது.
1973 – பப்புவா நியூ கினி ஆஸ்திரேலியாவிடம் இருந்து சுயாட்சி பெற்றது.
1981 – யூகொஸ்லாவியாவின் விமானம் ஒன்று கோர்சிக்காவில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த 180 பேரும் கொல்லப்பட்டனர்.
1981 – எயிட்ஸ் நோக்கொல்லி அதிகாரபூர்வமாக கண்டறியப்பட்டது.
1982 – முதலாவது செயற்கை இருதயம் யூட்டா பல்கலைக்கழகத்தில் பார்னி கிளார்க் என்பவருக்குப் பொருத்தப்பட்டட்து.
1989 – பனிப்போர்: கம்யூனிஸ்ட் கட்சியின் ஏகபோக அதிகாரத்தை அகற்ற கிழக்கு ஜேர்மனி நாடாளுமன்றம் அதன் அரசியலமைப்பைத் திருத்தியது.
1989 – பிலிப்பீன்ஸ் அதிபர் கொரசோன் அக்கீனோவை பதவியில் இருந்து அகற்ற எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
1991 – பனிப்போர்: உக்ரேன் வாக்காளர்கள் சோவியத்திடம் இருந்து உக்ரேன் முற்றாக வெளியேற வாக்களித்தனர்.
2006 – இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீது கொழும்பில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் அவர் காயமெதுவுமின்றி தப்பினார்.

பிறப்புகள்

1895 – காகா காலேல்கர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1981)

1900 – சாமி சிதம்பரனார், தமிழக இதழாளர், எழுத்தாளர், திராவிட இயக்க செயல்பாட்டாளர் (இ. 1961)

1901 – வை. மு. கோதைநாயகி, தமிழகப் புதின எழுத்தாளர் (இ. 1960)

1918 – யோகி ராம்சுரத்குமார், இந்திய ஆன்மிகத் துறவி (இ. 2001)

1935 – வுடி ஆலன், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்

1949 – பப்லோ எசுகோபர், கொலம்பியாவின் போதைக் கடத்தல் குழுத் தலைவர் (இ. 1993)

1949 – செபஸ்டியான் பினேரா, சிலியின் 35வது அரசுத்தலைவர்

1954 – மேதா பட்கர், இந்திய சமூக ஆர்வலர்

1955 – உதித் நாராயண், இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்

1963 – அர்ஜுன றணதுங்க, இலங்கைத் துடுப்பாட்ட வீரர், அரசியல்வாதி

இறப்புகள்

1825 – முதலாம் அலெக்சாந்தர், உருசியப் பேரரசர் (பி. 1777)

1859 – ஜான் ஆஸ்டின், ஆங்கிலேய சட்ட வல்லுநர், அரசியல் சிந்தனையாளர் (பி. 1790)

1866 – ஜார்ஜ் எவரஸ்ட், உவெல்சிய புவியியலாளர் (பி. 1790)

1916 – சார்லஸ் தெ ஃபூக்கோ, பிரான்சிய மதகுரு (பி. 1858)

1927 – பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி, இந்திய நிருவாகி (பி. 1862)

1947 – ஜி. எச். ஹார்டி, ஆங்கிலேயக் கணிதவியலாளர் (பி. 1877)

1964 – ஜே. பி. எஸ். ஹால்டேன், ஆங்கிலேய-இந்திய உயிரியலாளர் (பி. 1892)

1973 – டேவிட் பென்-குரியன், இசுரேலின் 1வது பிரதமர் (பி. 1886)

1974 – சுசேதா கிருபளானி, உத்தரப் பிரதேச முதலமைச்சர்.(பி. 1908)

1980 – மங்காராம் உதராம் மல்கானி, சிந்தி அறிஞர், விமர்சகர், எழுத்தாளர் (பி. 1896)

1990 – விஜயலட்சுமி பண்டிட், இந்திய அரசியல்வாதி (பி. 1900)

2001 – எல்லிஸ் ஆர். டங்கன், அமெரிக்கத் தமிழ்த் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1909)

2012 – தேவேந்திரலால், இந்திய புவியியற்பியலாளர் (பி. 1929)

2015 – விக்கிரமன், தமிழகப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1928)

2016 – இன்குலாப், தமிழகக் கவிஞர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகையாளர் (பி. 1944)

சிறப்பு நாள்

குடியரசு நாள் (மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு

விடுதலை நாள் (போர்த்துக்கல்)

ஆசிரியர் நாள் (பனாமா)

உலக எயிட்சு நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!