சிகரம் தொட்ட சிவசங்கரி

 சிகரம் தொட்ட சிவசங்கரி

1968இல் சிவசங்கரி எழுதிய ‘அவர்கள் பேசட்டும்’ என்ற சிறுகதையை முதன் முதலாகப் பிரசுரித்து, இவர் எழுத்துப் பயணத்திற்குப் பிள்ளையார்சுழி போட்டு வைத்தது கல்கி வார இதழ். அதன் பிறகு எழுத்துக்காகப் பெரிதாக உழைத்தவர் சிவசங்கரி.

இவரது இரண்டாவது சிறுகதை ‘உனக்குத் தெரியுமா?’ ஒரு குடிகாரனைப் பற்றிய கதை. இது ஆனந்த விகடனில் வெளியானது.

சிவசங்கரி எழுதிய “ஒரு மனிதனின் கதை” என்ற நாவல் ஒரு குடி நோயாளி யைப் பற்றியது. மது கதையாகவும் வெளியாகிப் பேசப்பட்டது. டி.வி. நாடகமாக வும் வெளியாகிப் பேசப்பட்டது. இதன் மூலம் இவர் மிகவும் பிரபல மானார்.

தன் காலத்தில் சிவசங்கரி 150 சிறுகதைகள், 48 குறுநாவல்கள், 36 நாவல்கள் மற் றும் 15 பயணக் கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் எழுதிய‌ ‘அவன்’ என்ற நாவல், ‘சுபா’ என்ற தொலைக்காட்சித் தொடராக உருவாக்கப்பட்டது. இவர் தன்னுடைய‌ சுயசரிதையை “சூர்யவம்சம்” என்ற நூலாக 2019இல் வெளியிட்டுள்ளார். தற்போது குமுதம் சிநேகிதி இதழில் சூரியவம்சம் இரண்டாம் பாகத்தை எழுதி வருகிறார். ராணி வார இதழில் தன் அனுபவங்களை அறிவுரைகளாக கட்டுஐர வடிவில் ‘கொஞ்சம் பேசலாமா?’ என்கிற தலைபில் எழுதி வருகிறார்.

இவர் எழுதிய ‘பாலங்கள்’ மூன்று தலைமுறை காலகட்டங்களை விவரிக்கும் நாவல். இந்த நாவலை எழுதி முடிக்க, பல இடங்களுக்குப் பயணம் செய்து, எடுத்தார். இது ஒரு முக்கோணக் காதல் கதை. முதல் தலைமுறையில் சேகரித்த எல்லா விவரத்தையும் சொல்லிவிட வேண்டும் என்ற ஆசையில் கதையின் சுவாரசியத்தைக் கொன்றுவிடுகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட் டன. 1983ஆம் ஆண்டு இந்த நாவலுக்காக ‘கஸ்தூரி ஸ்ரீநிவாசன் விருதை’ப் பெற்றார் சிவசங்கரி.

ஒரு மனிதனின் கதை, நண்டு மாதிரி சில புத்தகங்கள் ஒரு தலைமுறை பெண் களின் மனதைத் தொட்டன. திரைப்படமாக்கப்பட்ட ‘ஒரு மனிதனின் கதை’யில் வரும் தியாகு பாத்திரம் மறக்க முடியாதது. நண்டும், குட்டி என்ற கதையும் திரைப்படமாகின.

இதைவிட 47 நாட்கள் (1981) நாவலும் திரைப்படமாகியது. இதைத் திரைப்பட மாக்கியவர் இயக்குநர் சிகரம் பாலச்சந்தர். இது பெரிய வெற்றிப்படமாக அமைந் தது. ‘அவன் அவள் அது’ திரைப்படமாகியது இன்னொரு கதை!

குழந்தையில்லாத தம்பதி, வாடகைத்தாய் மூலம் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று முயற்சி எடுப்பதையும், அதனால் ஏற்படும் பிரச்னைகளை யும் கதைக்களனாக வைத்து, ‘ஒரு சிங்கம் முயலாகிறது’ என்ற பெயரில் சிவசங்கரி ஒரு கதை எழுதினார்.

இவர் ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ என்ற செயல்திட்டத்தை 1993இல் இருந்து செய்து வருகிறார்.

குழந்தைகளுக்கான ‘அம்மா சொன்ன கதைகள்” என்ற பேசும் புத்தகத்தை இவர் 1996இல் வெளியிட்டார்.

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, ஜி.டி.நாயுடு மற்றும் ஜி.கே.மூப்பனார் ஆகி யோரின் வாழ்க்கை வரலாற்றையும் நூலாக எழுதியுள்ளார்.

இவர் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, அன்னை தெரசா ஆகிய தலைவர்களுடன் விரிவான நேர்காணல் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.

கதைகள், நாவல்கள் தவிர, இவர் எழுதிய ‘சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப் படுத்துவது?’ என்ற சுயமுன்னேற்ற நூல் எல்லோரையும் மிகவும் கவர்ந்த ஒன்று. சரளமான எழுத்து நடை, தினசரி வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களை உதாரணமாகச் சொல்லி பிரச்னைகளுக்கு விடை சொன்ன விதம் எல்லாம் வாசிக்கும் எவருக்கும் நிச்சயம் பிடிக்கும். 1988ஆம் ஆண்டு எழுதிய இந்தக் கட்டுரைத் தொடருக்காக ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருதைப் பெற் றார் சிவசங்கரி.

ஏழைக்குழந்தைகளின் படிப்பிற்கு இவர் பல உதவிகளைச் செய்து வருகிறார். இவர் ‘அக்னி ட்ரெஸ்ட்’ அமைப்பின் மூலம் பல சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி களை நடத்தினார்.

கண்தானம் பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் பல ஆயிரக்கணக்கான மக்களை இறந்த பின் தன் கண்களை தானம் செய்ய உறுதிமொழி எடுக்க வைத்தது.

இவர் 1942ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் நாள் சென்னையில் பிறந்தார். இவரது தந்தை பெயர் சூர்யநாராயணன். இவரது தாயார் பெயர் ராஜலட்சுமி.

இவர் தன் பள்ளிப் படிப்பை சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் சாரதா வித்யாலயா பள்ளிகளிலும், கல்லூரிப் படிப்பை சென்னையிலுள்ள S.I.E.T. மகளிர் கல்லூரியிலும் படித்தார்.

இவர் 1963 இல் திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் பெயர் சந்திர சேகரன்.

அப்பா, அண்ணன், சிற்றப்பா, அக்கா கணவர் என்று, தன் குடும்ப உறவுகளாலேயே சீரழிக்கப்பட்டு, தாயான இளம்பெண்களைச் சந்தித்து, அவர்களின் வேதனைகளை யும், மனக்குமுறல்கள், கலந்த நிகழ்வுகளைத் தொகுத்து, “உண்மைக் கதைகள்” என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார் சிவசங்கரி. பெண்பிறப்பின் மறுபக்க அவலங்களை, வெளிச்சமிட்டுக்காட்டிய சில தமிழ்நூல்களுள், இதுவும் ஒன்றாக உள்ளது.

இவருடைய வளர்ப்பு மகளாகவும், காரியதரிசியாகவும் இருந்த “லலிதா” என்பவ ரின் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் சுயசரிதையை “சூர்யவம்சம்” என்ற நூலாக வெளியிட்டுள்ளார் சிவசங்கரி. 77 வயதுவரையிலான, சிவசங்கரியின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. லலிதா, 2018ஆம் ஆண்டில், கல்லீரல் மற்றும் இரைப்பை புற்றுநோயால் காலமானார். அவர் மறைவு, சிவசங்கரியைக் கடுமையாகப் பாதித்து, மாரடைப்பிற்கு வழி வகுத்தது. நல்லவேளையாக மீண்டு, குணமாகிவிட்டார்.

தன் தந்தை பெயர் சூரிய நாராயணன் என்ற காரணத்தால், ‘சூரிய நாராயணனால் உதித்த வம்ச மகளின் வரலாறு’ என்ற பொருளில், ‘சூரிய வம்சம்’ என்று, தன் சுயசரிதைக்குப் பெயரிட்டுள்ளார் சிவசங்கரி.

1980 களில், இவருடைய ரசிகர், ரசிகைகள், தங்கள் குழந்தைகளுக்கு, இவருடைய பெயரையே சூட்டிமகிழ்வது, வாடிக்கையாக இருந்தது.

தமிழின் முதல் பேசும்புத்தகத்தை வெளியிட்டவர் சிவசங்கரிதான். நூலின் பெயர் ‘அம்மா சொன்ன கதைகள்’. தன் அம்மா சொன்ன 6 கதைகளை எழுதி, ஓவியர் கோபுலுவின் ஓவியங்களோடு தனிநூலாக வெளியிட்டார். தன் குரலில், இதே நூலை ஒலிநாடாவாகவும் வெளியி்ட்டார் சிவசங்கரி. 1996 ஆம் ஆண்டில், இப் பேசும்புத்தகம் வெளியிடப்பட்டது.

விழுப்புரத்தில் சிவசங்கரி வசித்த, 14 ஆண்டுகளும், அவர் வாழ்வில் பெரிய திருப்புமுனையாக அமைந்தன. விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியலைத் துல்லியமாக அறிந்து, தன் நூல்களில் எழுத, இந்த வசிப்பிடமும், காலகட்டமும் பேருதவியாக இருந்தன.

சிறுகதை, நாவல், புதினம், கட்டுரைகள், பயணநூல்கள், பேட்டிகள் எனப் பல்வேறு வகையான இலக்கிய வடிவங்களிலும் ஈடுபட்டு, ஜொலித்து, வெற்றிகண்ட தமிழ்ப்பெண் எழுத்தாளர் சிவசங்கரி மட்டுமே.

ஜெயலிதா, ஒன்பது வயது சிறுமியாக இருந்தது முதற்கொண்டே, நீண்டகாலங் களாக, சிவசங்கரிக்குப் பள்ளித்தோழியாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

சிவசங்கரி, பரதநாட்டியக்கலைஞரும் ஆவார். இவருடைய முதல் பரதநாட்டிய அரங்கேற்றம், இவருடைய 15ஆம் வயதில் நிகழ்ந்தது.

அன்னை தெரசா, நோபல் பரிசு பெற்ற மறுநாள் விடிகாலையிலேயே, அவருக்கு வாழ்த்துகூறிய முதல் தமிழ் எழுத்தாளர் சிவசங்கரிதான்.

80 ஜோடிகளுக்குத் தன்செலவில், திருமணங்களை நடத்தி வைத்துள்ளார் சிவசங்கரி. 100 ஜோடிகளுக்குத் திருமணம், என்பதைத் தன் வாழ்வியல் இலக் காகக் கொண்டுள்ளார்.

தமிழ் எழுத்துலகில் ஐம்பதாண்டு காலத்திற்கும் மேலாக இயங்கிவந்த சிவசங்க ரிக்கு, ஆரம்பத்தில், எழுத்தாளர் ஆகவேண்டுமென்ற கனவோ, இலட்சியமோ, தூண்டலோ எதுவுமில்லை என்பதைக் கேட்டால், நம்பமுடியாதுதான்; ஆனால் அதுதான் உண்மை. அவர் எழுத்தாளராக மாறியது, தற்செயலான யதார்த்த நிகழ்வே ஆகும்.

தன் செயல்கள் அனைத்திற்கும் உறுதுணையாக இருந்து ஆதரித்த, கணவர் சந்திரசேகரன், 1984ஆம் ஆண்டில் காலமானது, இவருக்கு, கடும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்தது. எனினும், படிப்படியாக அதிலிருந்து மீண்டார்.

சிகரம் தொட்ட‌ சிவசங்கரி என்று இவரைத் துணிந்து பாராட்டலாம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...