பூ விற்ற மும்பை மாணவிக்கு அமெரிக்கப் பல்கலையில் படிக்க வாய்ப்பு

 பூ விற்ற மும்பை மாணவிக்கு அமெரிக்கப் பல்கலையில் படிக்க வாய்ப்பு

மும்பையில் பூ விற்பனை செய்துவந்த மாணவிக்கு அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. படிப்பதற்கான வாய்ப்பு கிடைத் துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் சரிதா மாலி (28). இவரது தந்தை சாலையோரத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார். பள்ளிக்காலத்தில் இருந்தே தந்தைக்கு உதவியாக இருந்த வந்த சரிதா, பூக்களை மாலையாக கட்டிக்கொடுத்து தந்தையுடன் சேர்ந்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் ஒரு குடிசைப் பகுதியில் பிறந்தவர் சரிதா மாலி. வறுமையான சூழல் காரணமாக அவரது குடும்பம் பிழைப்புத் தேடி மும்பைக்கு வந்திருக்கிறது. அவரின் அப்பா பூ விற்பனை செய்து குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்தார்.

இப்படியான சூழலில் தனது 6-ம் வகுப்பிலிருந்து சிக்னலில் நிற்கும் கார்களுக்குப் பின்னால் ஓடி ஓடி தந்தைக்கு உதவியாக பூ விற்று வந்திருக்கிறார் சரிதா மாலி. மும்பை மாநகராட்சிப் பள்ளியில் படிப்பை முடித்த அவர், தனது பகுதியில் உள்ள

குழந்தைகளுக்கு டியூஷன் கற்றுக்கொடுத்து அதன் மூலம் கிடைக்கப்பெற்ற வருவாயைக் கொண்டு கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்திருக்கிறார்.

கே.ஜே சோமய்யா கல்லூரியில் இளங்கலை பயின்றவர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை இந்தி படித்தார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், இந்தியில் முதுகலைப் பட்டம்  பெற்ற சரிதா அதில் எம்.பில். மற்றும் ஆராய்ச்சிப் படிப்பும் படித்து முடித்துள்ளார். இந்த நிலையில்தான் தற்போது சரிதா மாலிக்கு அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை கழகத்தில் பிஎச்.டி படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

சரிதாவுக்கு ஒரு சகோதரி மற்றும் இரு சகோதரர்கள் உள்ளனர். அவர்கள் இன்று, குடிசைப்பகுதிக் குழந்தைகளுக்கு டியூஷன் கற்பித்துக் கொண்டிருக்கின்றனர்.

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறத் தேர்வாகியிருக் கும் சரிதா, “என்னுடைய வாழ்க்கையில் கஷ்டங்களைத்தான் அதிகமாகச் சந்தித்திருக்கிறேன். சிறு வயதிலிருந்தே பூக்களுடன்தான் வாழ்ந்து வருகிறேன். பள்ளி மாணவியாக இருந்தபோதிலிருந்தே  தந்தைக்கு உதவியாகப் பூ வியாபாரம் செய்து வந்தேன். நேரு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் சேர்ந்த பின் விடுமுறையில் வீட்டுக்கு வரும்போது, பூ வியாபாரம் செய்து வந்தேன். என் படிப்புக்குத் தந்தை எந்தத் தடையும் விதிக்கவில்லை. அமெரிக்காவில் படித்து முடித்த பின், குடும்ப முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவேன்.

இன்றைக்கும் சிக்னலில் கார்களுக்குப் பின்னால் ஓடிப் பொருள்கள் விற்கும் குழந்தைகளைப் பார்க்கிறேன். அது எனது குழந்தைப் பருவத்தை நினைவுபடுத்து வதாக இருக்கிறது. இவர்களது எதிர்காலம் என்னவாகும் என்கிற கேள்வியும் பிறந்தது. ஆகவே, குடிசைப் பகுதிகளில் வசிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி கொடுக்க என்னால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு செயல்படவிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் சரிதா மாலி.

கல்விதான் இந்தக் காலத்தில் அனைவரது தகுதியையும் தரத்தையும் உயர்த் தும் ஆயுதம் என்பதை சரிதா மாலி நிரூபித்துள்ளார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...