நடிகர் விஜய் பிறந்தநாளை ( ஜூன் 22) நலத்திட்ட உதவிகள் வழங்கினர்
22-5-2022 அன்று புதுச்சேரி மாநில விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு இடங்களில் ஒன்பது புதிய மக்கள் இயக்கப் பெயர்ப் பலகையை அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி N. ஆனந்து திறந்துவைத்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநிலச் செயலாளர் G.சரவணன் முன்னிலை வகித்தார்.
புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் தொகுதி தலைவர் வசந்த் மேற்பார்வையில் செல்வா மற்றும் மணிகண்டன் ஏற்பாட்டில் இரண்டு புதிய மக்கள் இயக்கப் பெயர்ப் பலகை திறக்கப்பட்டு அரியங்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் என்கிற தட்சணாமூர்த்தி தலைமையில் 200 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட் கள் 500 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி, 300 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள், 20 விவசாயிகளுக்கு உர மூட்டைகளை மற்றும்
300 குடும்பங்களுக்கு ஒரு நபருக்கு 3 கிலோ அரிசி, 100 நபர்களுக்கு பிளாஸ்டிக் வாளி, 300 நபருக்கு பிளாஸ்டிக் குடம் வழங்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக மணவெளி தொகுதி இளைஞர் அணித் தலைவர் வசந்த் மேற்பார்வையில பிரசாத் ஏற்பாட்டில் புதிய பெயர்ப் பலகை திறக்கப்பட்டு 200 பெண்களுக்குப் புடவை, 300 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி, 800 மாணவ மாணவி களுக்கு நோட்புக் பென்சில் பேனா வழங்கப்பட்டது.
மூன்றாம் கட்டமாக, ஏம்பலம் தொகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி ஏற்பாட்டில் புதிய மக்கள் இயக்கப் பெயர்ப்பலகை திறக்கப்பட்டு அப்பகுதியைச் சேர்ந்த 700 ஏழை எளிய மக்களுக்கு சிக்கன் பிரியாணி, 700 பெண்களுக்குப் புடவை, 700 நபர்களுக்கு வேட்டி, 700 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்புக், பேனா, பென்சிலும் வழங்கப்பட்டது.
ஏம்பலம் தொகுதி தலைவர் மணிகண்டன், இளைஞரணி தலைவர் மதன் முன்னிலையில் மணி ஏற்பாட்டில் புதிய மக்கள் இயக்கப் பெயர்ப் பலகை திறக் கப்பட்டு அப்பகுதியைச் சேர்ந்த 350 ஏழை எளிய மக்களுக்கு புடவை, 500 நபர் களுக்கு வெஜிடபிள் பிரியாணி, 400 மாணவ மாணவிகளுக்கு நோட்புக், பேனா, பென்சில ஸ்கேல், ரப்பர் மற்றும் 300 பொது மக்களுக்கு லட்டு வழங்கப்பட்டது.
நான்காம் கட்டமாக, திருபுவனை தொகுதி இளைஞரணி தலைவர் ராஜா மேற் பார்வையில் மணிகண்டன் ஏற்பாட்டில் புதிய மக்கள் இயக்கப் பெயர்ப்பலகை திறக்கப்பட்டு அப்பகுதியைச் சேர்ந்த 200 ஏழை எளிய மக்களுக்குப் புடவை, 250 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்புக், பேனா, பென்சில், 200 பொது மக்களுக்கு மதிய உணவும், தமிழரசன் ஏற்பாட்டில் புதிய மக்கள் இயக்க பெயர்ப்பலகை திறக்கப்பட்டு அப்பகுதியைச் சேர்ந்த 20 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்புக், பேனா, பென்சில், 50 பொது மக்களுக்கு மதிய உணவும், ஜெயக்குமார் ஏற்பாட்டில் புதிய மக்கள் இயக்கப் பெயர்ப் பலகை திறக்கப்பட்டு அப்பகுதியைச் சேர்ந்த 200 பெண்களுக்குப் புடவை, 500 பொதுமக்களுக்கு மதிய உணவு, 250 மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட் புக், உபகரணங்களும் வழங்கப்பட்டது.
அசோக் ஏற்பாட்டில் புதிய மக்கள் இயக்கப் பெயர்ப்பலகை திறக்கப்பட்டு அப்பகுதியைச் சேர்ந்த 100 ஏழை எளிய மக்களுக்கு காய்கறிகள், 200 புடவை, 250 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்புக், பேனா, பென்சில், 250 நபர்களுக்கு பிளாஸ்டிக் பாக்ஸ், 300 பொது மக்களுக்கு மதிய உணவாகப் பிரியாணி வழங்கப்பட்டது.