கோமேதகக் கோட்டை | 6 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

ன்ன வித்யாதரா! இப்படி என்னை அதிசயமாக பார்க்கிறாய்! நான் தான் சித்திரக் குள்ளன்.உன் நட்பை நாடி வந்துள்ளேன்!” என்றான் அந்தக் குள்ளன்.

சித்திரக் குள்ளரே! நான் இதுவரை என் பாட்டி சொன்ன கதைகளில்தான் உம்மைப் போன்ற குள்ளர்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றுதான் நிஜத்தில் பார்க்கிறேன்! அதுதான் கொஞ்சம் பிரமித்துப் போய்விட்டேன். என்றான் வித்யாதரன்.

வித்யாதரா! விந்திய மலைக்காடுகளில் நாங்கள் வாழ்கிறோம். அங்கே இருக்கும் ஓர் குகையில் எங்கள் கூட்டம் இருக்கிறது.”

அப்படியா! மகிழ்ச்சி! தாங்கள் என்னைத் தேடிவந்த காரணம் என்ன?”

வித்யாதரா! நாங்கள் வசிக்கும் விந்திய மலைக்காட்டில் இதுநாள் வரை எந்த ஆபத்தும் இல்லாமல் வாழ்ந்து வந்தோம். இப்போது புதிதாக வந்து சேர்ந்திருக்கும் ஓர் உயிரியால் எங்கள் உயிர்களுக்கு பேராபத்து வந்துவிட்டது.

அப்படி என்ன உயிரி அது?

அது ஒரு மலைப்பாம்பு!

மலைப்பாம்பா?

ஆம், மலைப்பாம்புதான்! பாம்புகளில் மிக பயங்கரமான அது பெரிய உயிரினங்களைக்கூட விழுங்கிவிடும் அபாயகரமான பிராணி அது.

இந்தப் பாம்புகள் நம் நாட்டுக் காடுகளில் உள்ளனவா?

ஆம் வித்யாதரா! இந்த பாம்புகள் விந்திய மலைக்காடுகளில் இப்போது நிறைந்திருக்கிற.

சரி, இத்தனை நாள் இந்த பாம்புகள் உங்களை ஒன்றும் செய்யாமல்தானே இருந்துள்ளது. இப்போது எப்படி ஆபத்து வந்துவிட்டது..?

இத்தனை நாள் இந்தப் பாம்புகள் எங்கள் இருப்பிடத்திற்குவந்து தொந்தரவு செய்தது இல்லை! நாங்களும் அந்தப் பாம்புகள் இருக்குமிடத்திற்குச் சென்றதில்லை. இப்போது அந்த பாம்புக் கூட்டத்தில் இருந்த ஒரு பெரிய பாம்பு எங்கள் குகைக்குள் புகுந்துவிட்டது. எங்கள் இனத்தோரில் சிலரை விழுங்கியும் விட்டது. அந்தப் பாம்பிற்குப் பயந்து எங்கள் கூட்டம்இப்போது குகையை விட்டு வெளியேறி வசிக்க இடமில்லாமல் தவிக்கிறோம். நீதான் வந்து அந்தபெரிய மலைப்பாம்பைக் கொன்று எங்கள் கூட்டத்தைக் காப்பாற்ற வேண்டும்.

மலைப்பாம்புகள்சாதாரணமாக யாரையும் விழுங்கிவிடாது. அதற்கு உணவுத் தேவைப்படுகையில்தான் வேட்டையாடும்என்று கேள்விப் பட்டுள்ளேன். இந்த மலைப்பாம்பு வீணாக உங்கள் குகைக்கு வந்து உருவத்தில்சிறிய உங்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது என்றால் அது மலைப்பாம்பு உருவில் இருக்கும்வேறொரு உயிர்தான் என்று என் மனதிற்குத் தோன்றுகிறது. அப்படியானால் அதை கொல்லுவது கொஞ்சம்சிரமமான விஷயமாக இருக்கும் போலிருக்கிறதே!

வித்யாதரா! இப்படிச் சொல்லி நீயும் எங்களை கைவிட்டுவிட்டால் அப்புறம் எங்களைக் காப்பது யார்? நீதான்எப்படியும் எங்களைக் காத்து ரட்சிக்க வேண்டும். என்றான் சித்திரக்குள்ளன்.

சித்திரக்குள்ளரே! உங்கள் கோரிக்கையை ஏற்கிறேன். உங்களையும் உங்கள் கூட்டத்தையும் அந்த மலைப்பாம்பிடம்இருந்து காப்பாற்றுகிறேன்! இது உறுதி! அதே சமயம் ஓர் எதிரியோடு மோதுகையில் அவனுடையபலம் பலவீனங்களை நன்கு அறிந்து ஆராய்ந்து அதற்கேற்ப வியூகம் வகுத்துப் போரிட வேண்டும். அப்போதுதான் வெற்றி கிடைக்கும். அதைத்தான் நான் யோசித்தேன்.

சித்திரக்குள்ளரே! நீங்கள் வசிக்கும் விந்திய மலைக் குகைகள் இங்கிருந்து சுமார் 300 காத தூரம்இருக்கும். அங்கிருந்து நீங்கள் எப்படி இங்கே வந்து சேர்ந்தீர்கள்.? உங்கள் உருவத்தில்இந்த தூரத்தைக் கடந்துவர பல மாதங்கள் ஆகியிருக்குமே!

இதைக்கேட்டதும்சித்திரக் குள்ளன் ஹாஹாவென சிரித்தான். வித்யாதரா! நாங்கள் உருவத்தில்தான் சிறியவர்கள். எங்களிடம் சில விஷேச சக்திகள் உண்டு. அவற்றில்ஒன்றுதான் பறக்கும் சக்தி. அப்படி பறந்து தான் இங்கே சில நாட்களில் வந்து சேர்ந்தேன்என்றான்.

அட..! தங்களுக்குப்பறக்கும் சக்தி இருப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது! இறைவன் படைப்பில்தான் எத்தனைஎத்தனை ஆச்சர்யங்கள்! சித்திரக் குள்ளரே! நீங்கள் எனக்கு பறந்து வழிகாட்டிக் கொண்டேசெல்லுங்கள்! நான் குதிரையில் பின்தொடர்ந்து வருகின்றேன். அந்த மலைப்பாம்பைக் கொல்லும்வழியை போகும் வழியே சிந்தித்து முடிவெடுப்போம். ஆனால்..!

என்னஆனால்?”

சித்திரக் குள்ளரே! நான் தற்போது இந்த நாட்டின்இளவரசியை மீட்டு வரும் வேலையை ஒத்துக் கொண்டுள்ளேன். அதற்காக இந்த நாட்டின் மன்னர்எனக்கு சில சோதனைகளை வைத்துள்ளார். அதில் ஜெயித்து பின்னர் இளவரசியை மீட்க வேண்டும். உங்களோடு நான் விந்திய மலைக்கு வந்துவிட்டால் அந்தப் பணி பாதிக்கும். அதில் தாமதம்செய்தால் இளவரசியின் உயிருக்கும் பாதகம் ஏற்படக் கூடும். எனவே அந்தப் பணியை செய்து முடித்துவிட்டுஅப்புறம் உங்களை அந்த மலைப்பாம்பிடம் இருந்து மீட்கும் வழியைபார்க்கிறேனே!

வித்யாதரா! உனக்கு இளவரசியின் உயிர்தான் பிரதானமாகத் தெரிகிறது! எங்கள் உயிர்கள் போவது கண்ணில் படவில்லையா? உன்னை நம்பி வந்த எங்களை இப்படி கைவிடலாமா? நீ அந்த அரக்கனை வென்று இளவரசியை காப்பாற்றிவர எத்தனை நாட்கள் ஆகுமோ? அதுவரை அந்த மலைப்பாம்புஎங்கள் இனத்தவர் எத்தனை பேரை விழுங்கிவிடுமோ? எளியோர் எங்களை காக்க முன்வராமல் இளவரசியைகாக்கத் துடிக்கிறாயே!என்று கோபப்பட்டான் குள்ளன்.

சித்திரக்குள்ளரே! நீர் கோபப்படுவதில் நியாயம் இருந்தாலும் இளவரசியை காப்பாற்றுவதாக நான் முன்கூட்டியே வாக்களித்துவிட்டேன். அதற்கான முதல் சவாலிலும் வெற்றி பெற்று விட்டேன். இரண்டாவதுசவாலில் இன்று கலந்து கொள்ளவிருந்த வேளையில்தான் தாங்கள் வந்து உதவி கோரினீர்கள்! நான்உங்களின் இந்த வேண்டுதலை நிராகரிக்கவில்லை! ஏற்றுக்கொண்டுதானே உள்ளேன். தவிர இளவரசியார்என் தந்தையின் பாதுகாப்பில் இருக்கும் போது ராட்சதனால் கடத்தப்பட்டிருக்கிறார். என்தந்தை அதற்கு பொறுப்பாகிறார்.எனவே இளவரசியை மீட்பதுதான் என் முதல் கடமை இதைத் தாங்கள்புரிந்து கொள்ளவேண்டும்.என்றான் வித்யாதரன்.

அதெல்லாம்சரிதான் வித்யாதரா! இளவரசியை மீட்டு வர எத்தனை நாள் ஆகுமோ? அதுவரை என் இனத்தினர் அந்தமலைப்பாம்புக்கு பயந்து தங்க இருப்பிடம் இல்லாமல் பரிதவித்துக் கொண்டு இருக்க வேண்டுமா? மழை, வெயில், காற்று இவை மட்டுமல்லாமல் பல்வேறு விலங்கினங்களும் எங்களுக்கு அச்சுறுத்தலாகஇருக்கிறதே! எத்தனை நாட்களுக்கு இவைகளிடம் இருந்து தப்பித்து நாங்கள் உயிர்வாழ முடியும்? அதை யோசித்துப் பார்த்தாயா?”

அதுவும்சரிதான்! இப்போது நீங்கள் பாதுகாப்பாக வசிக்கஇந்த நாட்டு அரசரிடம் சொல்லி ஒர் மாளிகையை ஏற்பாடு செய்கின்றேன்! அதில் வந்துநீங்கள் தங்கிக் கொள்ளுங்கள்! நான் இளவரசியை மீட்டு வந்தபின்அந்த மலைப்பாம்பை கொன்று உங்களை மீண்டும் குகைக்குஅனுப்பி வைக்கிறேன்!

இல்லைவித்யாதரா! இது சரிபட்டு வராது! நாங்கள் அனைவரும்விந்திய மலையை விட்டு இங்கு இடம்பெயர்ந்து வருவது அத்தனை சுலபம் இல்லை!

ஏன்? நீங்கள் தான் பறக்கும் சக்தி கொண்டிருக்கிறீர்களே!

பறக்கும்சக்தி இருக்கிறதுதான்! ஆனால் நாங்கள் உருவத்தில் சிறியவர்கள். உருவத்தில் பெரிய பருந்து, கழுகு போன்ற பறவையினங்கள் கண்ணில் நாங்கள் பட்டால் தொலைந்து போவோம். விந்திய மலையிலிருந்துநான் ஒருவனாகப் புறப்பட்டுவந்து உங்களை சந்திக்கவில்லை. என்னோடு இன்னும் மூன்று பேர்புறப்பட்டு வந்தனர். அந்த மூன்று பேரும் இப்போது உயிரோடு இல்லை.

ஏன்? என்ன ஆயிற்று?”

பறந்து வருகையில் எத்தனை இடர்ப்பாடுகள் ஆபத்துகள்? வருகின்ற வழியிலே வேடர்கள் இருக்கின்றார்கள். பருந்துகள், கழுகுகள் போன்ற பெரிய பறவைகள்இருக்கின்றன அத்தோடு பெரிய பெரிய விலங்கினங்கள் காலடியில் நாங்கள் சிக்கினால் என்னஆகும்?”

ஆம் இதைநான் உணராது போனேன்! தவிர உங்களை வேறு முன்னால் பறந்து வழிகாட்டச் சொன்னேன்! அது எத்தனைபெரிய தவறு?”

புரிந்துகொண்டால் சரி! இப்போது நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம்!

மன்னரிடம்செல்வோம்! அவரிடம் சொல்வோம்! அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.என்றான் வித்யாதரன்

வித்யாதரன், சித்திரக் குள்ளனை தன் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டு மன்னரை சந்திக்க அரண்மனைக்குப்புறப்பட்டான்.

அரசவையில் நுழைந்த வித்யாதரனை மன்னர் அன்போடு வரவேற்றார். வா வித்யாதரா! என் இரண்டாவது சவாலை ஏற்கத் தயார் ஆகி விட்டாயா?” என்றார்.

அதற்கு நான் எப்போதோ தயார்தான் மன்னா! ஆனால்..!

என்னஆனால்?”

வித்யாதரன் தன் சட்டைப் பைக்குள் கை விட்டான். அங்கேகுள்ளன் இல்லை. மன்னருடன்வித்யாதரன் பேசும்போது அவனுடைய சட்டைப் பையில் இருந்து எட்டிப் பார்த்தக் குள்ளன் தவறிவித்யாதரன் காலடியின் கீழே விழுந்து விட்டான். விழுந்த வேகத்தில் மூர்ச்சையும் அடைந்துவிட்டான்.

பதட்டமடைந்தவித்யாதரன் ஒரு நொடியில் சுதாரித்து கீழே நோக்குகையில் எங்கிருந்தோ பறந்துவந்த பருந்துஒன்றுகுள்ளனைத் தூக்கிக் கொண்டு பறந்தது.

அதிர்ச்சியில்உறைந்து நின்றான் வித்யாதரன்.

–சாகசம் தொடரும்…

ganesh

1 Comment

  • அடடா. இதென்ன புதுச் சிக்கல்.
    வித்யாதரன் குள்ளனைக் காப்பாற்றுவானா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...