தில்லி மாதிரிப் பள்ளியை உருவாக்கிய பெண் எம்.எல்.ஏ.
சில மாதங்களுக்குமுன் தில்லிக்குப் பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் மேற்கு டெல்லியில் வினோத் நகரில் உள்ள அரசு மாதிரி பள்ளியை பார்வை யிட்டார். அப்போது முதல்வர் ஸ்டாலினை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வரவேற்றனர்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அங்குள்ள அரசுப் பள்ளிகளில் டிஜிட்டல் முறை யில் பாடங்கள் எப்படி கற்பிக்கப்படுகிறது, ஏ.சி. வகுப்பறைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன்கூடிய இலவசக் கல்வி எவ்வாறு வழங்கப்படுகிறது என்பது குறித் தும் விளக்கிக் கூறினார்.
டெல்லியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகளில் வாரம் ஒருமுறை மகிழ்ச்சி வகுப்புகள் (Happy Class) அதாவது புத்தகமில்லா வகுப்புகள் குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார். இந்த நாளில் மாணவர்களின் மன அழுத்தங்களைப் போக்கும் வகையில், இசை, யோகா உள்ளிட்டவை கற்பிக்கப்படுகிறது என்பது குறித்தும் விவரிக்கப்பட்டது. இந்த மாதிரிப் பள்ளிகள் தோன்றுவதற்குக் காராணமான தில்லி எம்.எல்.ஏ. யார் தெரியுமா? அவர்தான் அதிஷி மார்லினா சிங்.
இவர் Oxford பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். ஜே.கிருஷ்ணமூர்த்தி ரிஷி வாலி (Rishi valley) பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்தவர்.
தில்லி பல்கலைக்கழகப் பேராசிரியர்களான விஜய் சிங் மற்றும் திரிப்தா வாஹி ஆகியோருக்கு 8 ஜூன் 1981 அன்று பஞ்சாபி ராஜ்புத் குடும்பத்தில் பிறந்தார். மார்க்ஸ் மற்றும் லெனினின் போர்ட்மேண்டோவாக அவரது பெற்றோர்களால் அவருக்கு ‘மார்லினா’ என்று பெயரிடப்பட்டது. அவர் வளர்ந்தவுடன் ‘அதிஷி’ என்பதைத் முன் பெயராகச் சேர்த்துக்கொண்டார். தன் பரம்பரையைப் பெருமை யைக் காட்டிலும் மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் விரும்பினார்.
டெல்லியில் வளர்ந்த பிறகு, புது டெல்லியில் உள்ள ஸ்பிரிங்டேல்ஸ் பள்ளியில் (பூசா ரோடு) உயர்நிலைப் பள்ளியை முடித்த பிறகு, அதிஷி 2001இல் டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்றில் பட்டம் பெற்றார். 2003இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தார். செவனிங் உதவித் தொகையில் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார். 2005இல் ரோட்ஸ் அறிஞராக ஆக்ஸ் போர்டில் உள்ள மாக்டலன் கல்லூரிக்குச் சென்றார்.
ஆந்திராவில் உள்ள ரிஷி பள்ளத்தாக்குப் பள்ளியில் ஆதிஷி மார்லினா சில காலம் கற்பித்தார். அவர் சாம்பவானா இன்ஸ்டிடியூட் ஆஃப் பப்ளிக் பாலிசி என்ற சேவை அமைப்பிலும் பணியாற்றியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகளால் கவரப்பட்டு அக்கட்சியில் 2013ல் சேர்ந்தார் அதிஷி மார்லினா சிங்..
ஜனவரி 2013ல், அதிஷி ஆம்ஆத்மிக்கான கொள்கை வகுப்பில் ஈடுபட்டார். அது அந்த இயக்கத்தில் வேகத்தைக் கூட்டியது.
2015ஆம் ஆண்டு மத்தியப்பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் நடைபெற்ற ஜல் சத்தியாகிரகத்தில் அதிஷி மார்லேனா சிங் தீவிரமாக ஈடுபட்டார். ஆம் ஆத்மி தலைவர் மற்றும் ஆர்வலர் அலோக் அகர்வாலின் பிரச்சாரத்தை முன்னின்று நடத்திய வரலாற்றுப் போராட்டங்களின்போதும், அத்துடன் சட்டப் போராட்டத் தின்போதும் ஆதரவளித்தார் அதிஷி.
பிறகு 2019 மக்களவைத் தேர்தலுக்கான கிழக்கு டெல்லிக்கான மக்களவைப் பொறுப்பாளராக அதிஷி நியமிக்கப்பட்டார். 2019 மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக கிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் போட்டி யிட்டார். அவர் பா.ஜ.க. வேட்பாளர் கவுதம் கம்பீரிடம் 4.77 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
டெல்லி NCT (National Capital Territory) அரசின் முதன்மையான மொஹல்லா சபா திட்டத்திற்கும் அதிஷி தலைமை தாங்கினார். இது ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் ஆட்சியைப் பரவலாக்குவதற்கான முயற்சி. இது ஆம் ஆத்மி கட்சி அதிகாரத்திற்கு வருவதற்குமுன் கொடுத்த முக்கிய வாக்குறுதி யாக இருந்தது. இந்தத் திட்டத்தை 2016ஆம் ஆண்டு டெல்லி லெப்டினன்ட் கவர்னர் நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2020 தேர்தலுக்குப் பிறகு, அவர் ஆம் ஆத்மி கட்சியின் கோவா பிரிவுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
2020ல் நடந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட் பாளரான தரம்பீர் சிங்கை 11,422 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். தற்போது தெற்கு டெல்லியின் கல்காஜி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.
அதன்பின் அவர் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவுடன் இணைந்து பாழடைந்த நிலையில் உள்ள டெல்லி அரசுப் பள்ளிகளைச் சீரமைத்து தனியார் பள்ளிகளின் அளவுக்குக் கொண்டுவந்தார். இவர்தான் மகிழ்ச்சியைப் பாடத்திட் டத்தில் கொண்டுவந்து மாணவர்களை மகிழ்ச்சியாக ஆக்கியது. இதைக் கல்வி ஆலோசகர் என்ற முறையில் அவர் செய்து வந்தார்.
டெல்லியில் பா.ஜ.க. ஆளும் கட்சியாக இல்லாத காரணத்தாலும் ஆம்ஆத்மி இந்த மாதிரி மகிழ்ச்சியான திட்டங்கள் கொண்டு வந்ததாலும், மக்களின் மகிழ்ச்சியை மனதில்கொண்டு பா.ஜ.க. அரசு இவரைப் பணி செய்யவிடாமல் தடுத்தது. அதன் பின் இவர் கடந்த தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றுள்ளார். இவருடைய உழைப்பினால் 8000 பள்ளி வகுப்பறைகள் தில்லியில் உருவாக்கப் பட்டுள்ளன. தில்லி யில் உள்ள அரசுப் பள்ளிகள் ப்ரொஜெக்டர், கணினி மற்றும் கல்வி உபகரணங்களுடன் சர்வதேசத் தரத்தில் உள்ளன. இதனை மனதில் கொண்டுதான் தமிழக முதலவர் ஸ்டாலின் அதிஷி மார்லினா சிங்கைச் சந்தித்து தமிழ்நாட்டு பள்ளிக் கல்வியில் சீர்திருத்தம் செய்வதற்கு ஆலோசனை கேட்டார்.