உலக உயர் ரத்த அழுத்த தினம் சிறப்புக் கட்டுரை
உயர் ரத்த அழுத்தத்தால் உலகம் முழுவதும் கோடிக்கணக் கான பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள்பட்ட நோயாகத் தொடரும் இந்தப் பிரச்சினை வந்தால் ஆயுள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மாறு பட்ட உணவுப் பழக்கவழக்கங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு உடல்நிலை யில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின் றனர். இதனைச் சரியான சமயத்தில் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கா விட்டால், இறப்புக்கும் வழிவகுக்கும்.
உலக சுகாதார அமைப்பானது, உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்பு கள் மற்றும் சிகிச்சை முறைகள் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்காக, ஒரு உலகளாவிய விழிப் புணர்வு பிரச்சாரத்தை 2005-ல் தொடங் கியது. அத்துடன், ஒவ் வொரு ஆண்டும் மே 17-ம் தேதி உலக உயர் ரத்த அழுத்த தினமாக அனுசரிக்க முடிவு செய்து அறிவித்தது.
இந்த நாளில் உலக நாடுகள் அனைத்தும், அரசாங்கங்கள், தொழில் முறை சமுதாயங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களுடன் கூட்டுசேர்ந்து பொதுப் பேரணிகள் மூலம் உயர் ரத்த அழுத்த விழிப்புணர்வை ஊக்குவித்து வருகின்றன. இணையதளம் மற்றும் தொலைக் காட்சி போன்ற வெகுஜன ஊடகத்திலும் விழிப்புணர்வு பிரச் சாரங்கள் இடம்பெறுகின்றன.
சராசரியாக மனிதனின் ரத்த அழுத்தத்தின் அளவு 120-80 இருக் கும். இந்த அளவு உடல் பருமனாக இருப்பவர்களுக்குச் சற்று அதிகமாக இருக்கும். ஒல்லியாக இருப்பவர்களுக்குச் சற்று குறைவாக இருக்கும். உடல் எடையைப் பொறுத்து ரத்த அழுத் தம் மாறுபடும். பொதுவாக 130-90க்கு மேல் இருந்தால் உயர் ரத்த அழுத்தம் உள்ளது எனலாம். 125-85க்கு மேல் இருந்தாலே உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. ரத்த அழுத்தம் வருவதற்குக் காரணம் மரபுவழி ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு போன்றவையாலும் வரலாம். முக்கிய மாக மனஅழுத்தம் இருந்தால் ரத்த அழுத்தம் வரும்.
கடல் அலையைப் போல ரத்த அழுத்தம் காலையிலிருந்து மாலை வரை மாறுபட்டுக்கொண்டே இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் எடுத்துப் பார்க்கும் பரிசோதனைகள்தான் துல்லியமாக இருக்கும். எனவே ரத்த அழுத்தப் பரிசோதனை செய்பவர்கள் காலையில் வெறும் வயிற்றில் பரிசோதியுங்கள்.
குறிப்பாக தமிழக அரசு எடுத்துள்ள சர்வேபடி நகர்ப்புறங்களில் வசிப் பவர்களுக்கு 33 சதவிகிதம் பேருக்கும் கிராமப்புறங்களில் 2 சதவிகிதம் பேருக்கும் ரத்த அழுத்தம் இருப்பது தெரியவந் துள்ளது.
ரத்த அழுத்தம் வருவதற்கு முக்கிய காரணம் உடலில் இருக் கும் உப்புச் சத்துதான். நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உப்புக்கும் ரத்த அழுத்தத் திற்கும் நேரடித் தொடர் உண்டு.
அதோடு பேக்கரி உணவுகளான சிப்ஸ், பிரெட் மற்றும் உப்பு அதிகமாக உள்ள ஊறுகாய் போன்ற உணவுப் பொருட்களும் ரத்த அழுத்தம் உருவாகக் காரணமாகிறது.
மேலும் வேலை பளு, கோபம், எரிச்சல், மனஅழுத்தம், புகைப் பழக்கம் போன்றவற்றையும் ரத்த அழுத்த மாறுபாட்டிற்கான காரணங்கள்.
குறிப்பாக ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உடல் எடையைக் குறைப்பது மிக அவசியம். பழங்கள், காய்கறிகள், கீரைகள், நவதானியங்கள் போன்ற வற்றை அதிகம் துணை உணவுகளாக உட்கொள்வது நல்லது.
உயர் ரத்த அழுத்தம் கண்டவர்கள் காலை, மாலை இருவேளையும் யோகா, உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. மனதை சந்தோஷமான நிலையில் வைத்திருப்பது நல்லது.
உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் தினந்தோறும் மாத்திரை உட்கொள்வது அவசியம். இல்லையென்றால் ரத்த அழுத்தத் தால் சிறுநீரகம், கண், இதயம், நரம்பு மண்டலங்கள் பாதிக்கக் கூடும்.
குறைந்த விலையிலேயே ரத்த அழுத்தம் பரிசோதிக்கும் கருவிகள் விலைக்குக் கிடைக்கின்றன. அதை வீட்டில் வாங்கி வைத்து அடிக்கடி பரிசசோதித்துப் பார்த்து உயர் ரத்த அழுத் தத்தை சீராக வைத்துக்கொண்டு உடல்நலத்தை பேணுவோம்.