நல்லொழுக்கம் போதிக்கும் புனித ரமலான்

 நல்லொழுக்கம் போதிக்கும் புனித ரமலான்

கொரோனா காரணமாக அரசு கடந்த ஆண்டுகள் சிறப்புத் தொழுகைக்கு அனுமதி யளிக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ள தால் தமிழகம் முழுவதும் பள்ளி வாசல்கள் அலங்கரிப்பட்டுள்ளன.

சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட ஐக்கிய அமீரக நாடு களில் ரம்ஜான் கொண்டாடிய மறுநாள்தான் இந்தியாவில் ரம்ஜான் கொண்டா டப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியாவில் சிறப்புத் தொழுகைகளுடன் இன்று ரம்ஜான் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இஸ்லாமிய நாட்காட்டியின்படி ரமலான் மாதமானது இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான புனித மாதமாகும். இந்த மாதத்தின்போதுதான் இறைத் தூதரான முகமது நபி அவா்களின் மீது இறைவன் அல்லாஹ் அவா்களால் புனித குர்ஆன் இறக்கி வைக்கப்பட்டது என்று இஸ்லாமிய புராணங்கள் தெரிவிக்கின்றன.

ரம்ஜான், ரமலான் பண்டிகை என்று மக்களால் அழைக்கப்படும் இந்தப் பண்டி கையை ஈதுல் ஃபித்ர் என்றும் கூறப்படுகிறது.

நோன்பு என்பது கிழக்கு வெளுத்ததில் இருந்து சூரியன் மறையும் வரை உண்ணுதல், பருகுதல் உள்பட நோன்பை முடிக்கும் காரியங்களை விட்டு ஒருவர் தன்னைத் தடுத்துக் கொள்வதாகும். அதாவது அதிகாலை 4 மணி அளவில் இருந்து மாலை 6.30 மணி வரை உண்ணாமலும், பருகாமலும் இருப்பார்கள்.

புனித ரமலான் மாதத்தையொட்டி இரவில் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார் கள். இந்தப் புனித மாதத்தில் முஸ்லிம்கள் தர்மம் எனும் ஜகாத்தில் ஈடுபடு வார்கள். மேலும் திருக்குர்ஆன் ஓதுதல், பிரார்த்தனை செய்தல் உள்ளிட்ட பல் வேறு வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். 29 அல்லது 30 நாட்கள் நோன்பு முடிவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

தமிழ் நாட்காட்டி சூரியனின் இயக்கத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

இஸ்லாமின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது ஒரு கடமையாகும்.

ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் பின்னிரவில் உணவருந்திவிட்டு சூரியன் மறைவு வரை நோன்பு மேற்கொள்ளப்படும். 30வது நாளில் பிறை தெரிந் ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

ரமலான் என அழைக்கப்படும் நோன்பு காலம் முஸ்லிம்களின் வசந்த காலம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு ரமலானின் மகத்துவத்தில் நன்மைகள் பொதிந்து கிடக்கின்றன. முஸ்லிம்களின் மாதங்களான 12 மாதங்களில் ரமலான் மாதத்திற்குத்தான் சிறப்புத் தன்மைகள் பல உள்ளதாக முஸ்லிம் சான்றோர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

மேலும் நோன்பு திறத்தலை இப்தார் என்று அழைக்கின்றனர். நோன்பு திறக்கும் போது சரியான நேரத்தில் அதாவது சூரியன் அஸ்தமன நேரத்தை கணக்கில் கொண்டு நோன்பு திறக்க வேண்டும். ஊர்விட்டு ஊர் செல்லும் பயணிகள், நோயாளிகளைத் தவிர அனைவருக்கும் நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது.

மாதவிடாய் காலங்களைத் தவிர மற்ற நாட்களில் பெண்கள் நோன்பு இருப்பது கடமையாகும். நோன்பு இருக்கும் நேரத்தில் ஐங்காலத் தொழுகையை நிறை வேற்ற வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும்.

நோன்பு இருப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி ஆளவேண்டும். புறம் பேசுதல், பொய் சொல்லுதல், பிறருக்குத் துன்பம் விளைவித்தல், பிறர் மணம் புண்படுமாறு பேசுதல் கூடாது.

நோன்பு இருக்கும் நேரத்தில் தவறான வார்த்தைகளையோ, தவறான செயல் களையோ பயன்படுத்தினால் நோன்பு முறிந்துவிடும்.

நோன்பு இருப்பதன் மூலம் உடலின் அனைத்து பாகங்களும் ஓய்வெடுக் கின்றன. குறிப்பாக, குடல் எனப்படும் வயிற்றின் முக்கிய உறுப்புகள், ஒரு மாதம் ஓய்வு பெறுவதன் மூலம் பலவிதமான நோய்களிலிருந்து மனிதன் காக்கப்படுகின்றான்.

வருடம் ஒன்றின் 365 நாட்களும் உணவு அரைபொருள் நிலையமாகத் திகழும் மனிதனின் உடல், நோன்பு எனப்படும் 30 நாள் விரதத்தால், ஓய்வு பெறுகிறது. இதன் மூலம் உடல் புத்துணர்வு பெறுகிறது. ரமலான் மாதத்தில் குர்ஆன் ஓதுபவர்களுக்கு அதிகமான நன்மைகள் கிடைக்கும் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை.

ரமலானின் சிறப்புகள்

1. இந்த மாதத்தில் தானம், தர்மம் அதிக அளவில் செய்ய வேண்டும்.

2. இல்லாதோருக்கு இருப்போர் உதவ வேண்டும்.

3. நோன்பிருக்கும் காலங்களில் நன்மைகள் செய்து தீமைகளை விலக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

4. நோன்பு திறப்பதற்குத் தண்ணீர் அல்லது பேரிச்சம் பழத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

5. ரமலான் மாதம் நன்மையை மட்டும் போதிக்கவில்லை. ஒற்றுமையையும் போதிக்கிறது.

6. ரம்ஜான் நாளன்று நோன்பு இருப்பது கூடாது. 30 நாட்களில் விட்ட நோன்பு களை ரம்ஜான் பெருநாளுக்குப் பின்னர் வரும் முதல் 6 நாட்களில் மீண்டும் இருந்து கொள்ளலாம்.

நாம் செய்யும் நன்மை, தீமைகள் நம் இறப்பிற்குப் பிறகு நம்மை வந்து சேரும். அதனால் அல்லாஹ்வின் கட்டளைப்படி நாம் திருக்குர்ஆன்படி வாழ்ந்தால், நம்மிடையே மறுமலர்ச்சியை உருவாக்கி, ஆரோக்கியமான நல்ல சமுதாயத்தை உருவாக்கிவிடலாம் என்பது ஆழமான நம்பிக்கை.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...