அட்சய திருதியை வரலாறும் வணங்கவேண்டிய தெய்வங்களும்
அட்சய திருதியை இந்துக்கள் வழிப்படும் புனித நாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறையை அட்சய திருதியை என அழைக்கிறோம். சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு 3-வது நாள் அட்சய திருதியை.
3-ஆம் எண்ணுக்கு அதிபதி குரு. இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதி பலிக்கிறார். எனவே குருவுக்குப் பொன்னன் என்ற பெயரும் உண்டு. இத னால்தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பாகிறது.
மே 3-ம் தேதி காலை 5.18 மணிக்குத் தொடங்கும் அட்சய திருதியை, மே 4-ம் தேதி காலை 7:32 மணி வரையில் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த வருடம் அட்சய திருதியை அன்று காலை 5:49 மணி முதல் மதியம் 12:13 முகூர்த்த நேரமாகக் குறித்துள்ளனர். அட்சய திருதியை அன்று வேண்டிய கடவுளை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படு கிறது
அட்சய திருதியை அன்று அரிசி, கல் உப்பு, மஞ்சள் வாங்கினாலும் நல் லதுதான். இதைச் செய்வதன் மூலம் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
அட்சய திருதியை அன்று பொருள் வாங்குவதைவிட மற்றவர்களுக்குத் தானம் செய்வது மிகவும் சிறந்தது. அட்சய திருதியையின் முக்கிய நோக் கமே எந்தப் பொருளாக இருந்தாலும் அதை தானம் செய்வதுதான் சிறந்தது என்று ஆன்றோர் கூறுகிறார்கள். ஆனால் அது இப்போது செல்வத் தைச் சேர்க்கும் ஒரு நாளாகக் கொண்டாடப்படுகிறது.
தானம் செய்ய சிறந்த நாள் அட்சய திருதியை
அன்னதானம் செய்தல்
திருப்தி என்பது சாப்பிடும்போது மட்டுமே ஏற்படும். வறுமையில் வாடும் பலருக்கும் ஒருவேளை உணவுகூட கனவாக இருக்கிறது. வசதியற்றவர் களுக்கு, யாசகர்களுக்கு உங்களால் இயன்ற அளவு அன்னதானம் வழங்க லாம். வீட்டில் உணவு தயாரித்துக் கொடுக்கலாம். அல்லது சமைக்கும் பொருட்களாகக் கொடுக்கலாம். அட்சய திருதியை அன்று வயிறு நிறைய சுவையான உணவை அளிக்கும்போது, நவகிரகங்களின் ஆசி கிடைக்கும். உங்கள் வீட்டில் என்றென்றும் செல்வம் நிலைத்திருக்க உதவும்.
குங்குமம் மற்றும் சந்தனம்
மங்கலப் பொருளான குங்குமம் மற்றும் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை அட்சய திரிதியை அன்று தானம் செய்வது, சுபிட்சத்தை ஏற்படுத்தும். கோவிலில் அல்லது பெண்களுக்கு வெற்றிலை பாக்கில் குங்குமம் மற்றும் சந்தானம் வழங்கலாம். குங்குமம் வழங்குவது சுக்கிரனின் அம்சம் என்ப தால், வீட்டில் மகிழ்ச்சியும், வளமும் பெருகும். இதனால், உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். குங்குமம் மற்றும் சந்தனத்தை வழங்குவது ஜோதிட ரீதியாக ராகு மற்றும் கேது கிரகங்களின் தாக்கத்தையும் குறைக் கும்.
வஸ்திர தானம் தரலாம்
பொதுவாகவே, சில விசேஷங்களுக்கு உறவுப் பெண்கள், அக்கம்பக்கத் தில் இருக்கும் பெண்கள், பெண் குழந்தைகள் ஆகியவர்களுக்கு இயன்ற வகை யில் ஆடைகளை வழங்கி ஆசிர்வாதம் பெறுவது வழக்கம். அதை அட்சய திருதியை அன்று செய்யலாம்.
அட்சயதிருதியை சிறப்புகள் :
1. பிரம்மன் தனது சிருஷ்டித் தொழிலைத் தொடங்கியது இந்த நாளில் தான்.
2. பிரளயம் முடிந்து, வெள்ளத்தில் மிதந்து வந்த கும்பத்தை உடைத்து, சிருஷ்டி மீண்டும் தொடங்க சிவ பெருமான் அருளிய தினம்.
3. திருமகள் திருமாலின் இதயத்தில் குடிகொண்ட தினம். அதனால்தான், இன்றைய தினத்தில் லட்சுமி தேவியை மட்டும் வணங்காமல் பெரு மாளையும் சேர்த்து வணங்க வேண்டும் என்பர்.
4. வனவாசம் சென்ற பஞ்ச பாண்டவர்கள் தவம் இருந்து சூரிய பகவானி டம் அட்சய பாத்திரம் பெற்ற தினம்.
5. பெருமாளுக்கே கடன் கொடுத்த குபேரன், லட்சுமி தேவியை வணங்கி, செல்வத்தைப் பெற்ற தினம். இன்றைய தினத்தில் லட்சுமி பூஜை, குபேர பூஜையைச் செய்ய ஐஸ்வர்யம் பெருகும். இயலாதவர்கள், ஓம் ஐஸ்வ ரேஸ்வராய நம: என்று கூறினாலே போதும் என்கிறார் திருமூலர்.
6. பாற்கடலைக் கடைந்தபோது ரத்தினங்கள், ஐராவதம், கல்பதரு, காம தேனு, சந்திரன், மகாலட்சுமி ஆகியோர் தோன்றினர். இப்படி அலைமகள் அவதரித்த தினம் அட்சயதிரிதியை.
7. பிட்சாடனரான ஈஸ்வரன், ஸ்ரீஅன்னபூரணியிடம் பிட்சை பெற்றது இந்த நாளில்தான்.
8. கௌரவ சபையில் திரௌபதியின் மானம் காக்க ஸ்ரீகிருஷ்ணர் துகில் தந்து அருளியது போன்ற புராணச் சம்பவங்கள் நிகழ்ந்ததும் இந்தத் தினத் தில்தான்.
9. பரசுராமர் அவதரித்ததும் அட்சய திரிதியையில்தான். இந்த நாளில் பரசு ராமர் வழிபாடு நன்மை தரும்.
10. குபேரனுக்கு சம்பத்து கிடைத்து செல்வங்களின் அதிபதியாகியது இந்த அட்சய திருதியை நன்னாளில்தான்.
தெய்வத்தை வணங்கும் பூஜை முறை
பூஜை அறையை அலங்கரித்து, ஒரு மனைப் பலகையில் வாழையிலை இட்டு, அதில் பச்சரிசியைப் பரப்பி, கலசம் வைக்க வேண்டும். அருகே ஒரு பாத்திரத்தில் நெல் இருந்தால் நிறைத்து வையுங்கள். ஶ்ரீலட்சுமி நாராய ணர் படம் அல்லது திருப்பதி ஏழுமலையானின் படம் இருந்தால், அதை யும் பிரதானமாக வைத்து மலர் சாத்தி சந்தனம், குங்குமம் இட்டு வையுங் கள். பிறகு மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து, நீங்கள் அன்று சிறிதளவேனும் அரிசி, உப்பு, பருப்பு முதலிய வற்றை வாங்கிக் கலசத்தின் முன்பாக வைத்து வணங்க வேண்டும்.
பிறகு கையில் அட்சதை எடுத்துக்கொண்டு ஒரு மலரையும் அதோடு சேர்த்துக் கைகூப்பி அன்னை மகாலட்சுமி அந்தக் கலசத்தில் எழுந்தருள வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு அட்சதையையும் மலரையும் கலசத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு இஷ்டதெய்வம், குல தெய் வம் ஆகியோரையும் வணங்கி தூபதீப ஆராதனை செய்யவேண்டும்.
அன்னை மகாலட்சுமியைப் போற்றும் 108 போற்றிகளையோ அஷ்டோத் திரமோ சொல்லி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இன்று பால் பாயசம் செய்து நிவேதனம் செய்வது சிறப்பு. நிவேதனத்துக்குப் பின் கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்யலாம்.
கலச பூஜை செய்யும் வழக்கம் இல்லாதவர்கள் வெண்ணிற மலர்களை யும் மஞ்சள் நிற மலர்களையும் வாங்கி சுவாமி படத்துக்குச் சாத்தி வழி படலாம். அர்ச்சனை, போற்றிகளைச் சொல்லி வழிபடுவதும் சிறப்பு.
தங்கம் வாங்க இந்த ஐந்து விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம்.
தங்கத்தின் தூய்மை (காரட்)
தங்கத்தை நகையாக வாங்கும்பொழுது, 18 காரட், 22 காரட் என்று தங்கத் தின் தூய்மையைப் பொறுத்து ஒரு கிராம் தங்கத்தின் விலை மாறும். ஆனால் நீங்கள் தங்க நாணயமாக வாங்கும்பொழுது 100% தூய்மையான தங்கமான 24 காரட் தங்க நாணயத்தை வாங்கலாம். 24 கேரட் தங்கம் என்பது நகைகள் செய்வதற்கு உகந்ததல்ல என்பதால் அதில் கொஞ்சம் செம்பு சேர்க்கப்பட்டு 22 காரட் கோல்ட் நகைகளாகச் செய்யப்படும். ஆனால் நாணயங்களைப் பொறுத்தவரை 24 காரட் தங்கத்தில் கிடைக்கும். எனவே, தங்கத்தின் காரட் எவ்வளவு என்பதை இறுதி செய்து நாணயங்களை வாங்குங்கள்.
ஹால்மார்க் சின்னம்
இந்தியத் தரச் சான்றிதழ் அடிப்படையில் ஒரு தங்கம் எந்த அளவுக்குக் கலப்பில்லாதது என்பதை ஹால் மார்க் சின்னம்தான் உறுதி செய்யும். நீங்கள் வாங்கும் தங்கம் BIS சான்றளிக்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய அதில் ஹால்மார்க் சின்னம் இருக்கிறதா என்று பாருங்கள்.
தங்கத்தின் எடை
தங்கம் பொதுவாகவே கிராம் கணக்கில் தான் எடை போடப்பட்டு விலை என்ன என்பது நிர்ணயம் செய்யப்படுகிறது. எனவே நீங்கள் தங்க நாணயம் வாங்கும்போது எந்த எடையில் அல்லது டினாமினேஷனில் வாங்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்வது மிகவும் அவசியம். பொதுவாகவே தங்க நாணயங்கள் ஒரு கிராம், ஐந்து கிராம் மற்றும் பத்து கிராம்கள் வரை கிடைக்கும். ஒரு சில இடங்களில் அரை கிராம் முதல் 50 கிராம் வரை கூட தங்க நாணயம் கிடைக்கும்.
தங்கக் காசுகளுக்குச் செய்கூலி குறைவு
தங்க நாணயங்களை வாங்கும்பொழுது உங்களுக்குச் செய்கூலி சேதாரம் ஆகியவை மிகக் குறைந்த அளவில்தான் சேர்க்கப்படும். எனவே நீங்கள் 10 கிராம் தங்கத்தை நகையாக வாங்கினால் செலுத்த வேண்டிய தொகை யைவிட, 10 கிராம் தங்க நாணயத்துக்குக் குறைவான தொகை தான் செலுத்து வீர்கள். எனவே, உங்களுக்கு நகையாக வாங்கவேண்டிய அவசி யம் இல்லை என்றால் நீங்கள் முதலீடாகத் தங்கத்தை, தங்க நாணயங் களாக வாங்கி வைத்துக்கொள்ளலாம்.
தங்க நாணயங்களை விற்பது
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளபடி நீங்கள் வங்கியிலிருந்து தங்க நாணயங் களை வாங்கினால் அதே வங்கிக்கு மீண்டும் உங்களால் அதை விற்பனை செய்ய முடியாது. எனவே நீங்கள் தங்கம் விலை ஏறும் வரை காத்திருந்து விற்பதற்காகத் தங்க நாணயங்களில் முதலீடு செய்தால், நீங்கள் வாங்கும் தங்க நாணயங்களை ஆன்லைன் தளங்களிலோ அல்லது நகைக் கடை களில் விற்பனை செய்ய முடியும்.
தங்கத்தை தங்கப் பத்திரமாகவும் வாங்கலாம்
இந்தியர்கள் பெரும்பாலும் தங்கத்தை நகைகளாக வாங்க மட்டுமே விருப் பப்படுவார்கள். ஆனால் டிஜிட்டல், பத்திரம் போன்ற வகையிலும் தங்கத்தை வாங்கலாம். ஆனால் டிஜிட்டல், பத்திரம் போன்ற வகையிலும் தங்கத்தை வாங்கலாம். தங்கத்தை நகைகளாக வாங்குவதைவிட டிஜிட்டல் அல்லது பத்திர வடிவில் வாங்கும்போது அது பாதுகாப்பாக இருக்கும். யாரா லும் திருட முடியாது எனக் கூறப்படுகிறது. ஆபரணத் தங்கம் போலவே பத்திரம் அல்லது டிஜிட்டல் வடிவில் வாங்கும் தங்கத்தை யும் எளிதாக விற்க முடியும்.
தங்க நகைகளைப் போன்று இதையும் தேவையானபோது வங்கிகளில் அடகு வைத்துப் பணம் பெற்றுக்கொள்ள முடியும். தங்கப் பத்திரத்தை விற்க வேண்டும் என்றால் அந்த நாளில் தங்கம் என்ன விலையோ அதே விலைக்கு விற்றுப் பணமாகவும் பெறலாம். ஏழரை ஆண்டுகளுக்குப் பிறகு பத்திரம் முதிர்வடையும்.
தங்கத்தை மியூச்சல் ஃபண்டுகள் மூலமாகவும் வாங்கலாம். அதுவும் மொத்தமாகப் பணம் செலுத்தாமல் SIP முறையில் குறைந்தது 1000 ரூபாய் முதல் வாங்கலாம். டிஜிட்டல் மூலம் தங்கம் வாங்கும்போது பேடிஎம் உள்ளிட்ட சில வாலட் சேவை நிறுவனங்கள் ஒரு ரூபாய்க்குக்கூட தங்கத்தை வாங்கும் சேவைகளை வழங்குகின்றன.
12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்களும் செய்ய வேண்டிய தானங்களும்
மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தைத் தரும்.
ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும்.
மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித் தரும்.
கடகம்: நீர்மோர் தானம் செய்வது நன்மை தரும். வீட்டிற்கு வெண்ணெய் மற்றும் வெண்ணெய்ப் பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித் தரும்.
சிம்மம்: மிளகுப் பொங்கல் தானம் செய்வது நன்மை தரும். கோதுமை மற் றும் கோதுமை பலகாரங்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத் தித் தரும்.
கன்னி: தக்காளிச் சாதம் தானம் செய்வது நன்மை தரும். பெண்களுக்குத் தேவையான அணிகலன்கள், ஆடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தி தரும்.
துலாம்: பேரிச்சம்பழம் தானம் செய்வது நன்மை தரும். முந்திரி, திராட்சை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித் தரும்.
விருச்சிகம்: பழரசம் தானம் செய்வது நன்மை தரும். வெள்ளரி மற்றும் தர்ப்பூசணி பழங்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும்.
தனுசு: பானகம் தானம் செய்வது நன்மை தரும். வெல்லம் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித் தரும்.
மகரம்: நிலக்கடலை மற்றும் கிழங்குகள் தானம் செய்வது நன்மை தரும். உப்பு வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித் தரும்.
கும்பம்: இளநீர் மற்றும் கனிகள் தானம் செய்வது நன்மை தரும். அரிசி வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித் தரும்.
மீனம்: இனிப்புகள் தானம் செய்வது நன்மை தரும். மோர் மற்றும் பால் பொருள்கள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித் தரும்.