திருக்குறளுக்கு மரியதை செய்யும் தமிழ் ஆசிரியைகள்

 திருக்குறளுக்கு மரியதை செய்யும் தமிழ் ஆசிரியைகள்

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை சீதளாதேவி, 33. இவர், திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து, 45 வெற்றிலைகளில் 1,330 திருக்குறளையும் எழுதி சாதனை படைத்தார்.

அதைத் தொடந்து சாக்பீஸ், மூங்கில் கிளிப், மண்பாண்டம் போன்றவற்றில் திருக்குறளை எழுதி ‘ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ல் சாதனை படைத்தார்.

தற்போது இதே கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலுக்கு சென்று, அங்கே அனுமதி பெற்று காட் டன் சேலையில் 1,330 திருக்குறளையும் எழுதிஉள்ளார்.

திருக்குறள் எழுதப்பட்ட இந்த சேலையை காரைக்குடியில் உள்ள தமி ழன்னை கோவிலுக்கு சீர் செய்யும் பொருட்டு அளிக்க உள்ளார்.

ஆசிரியை சீதளாதேவி கூறியதாவது: “திருக்குறளை தேசிய நூலாக அறி விக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருவள்ளுவர் பிறந்த தாகக் கூறப்படும் மயிலாப்பூரில் இருந்து திருக்குறளை காட்டன் சேலை யில் எழுதி, தமிழன்னைக்கு சீதனமாக வழங்க எண்ணினேன். இந்தச் சேலையை காரைக்குடியில் உள்ள தமிழன்னை கோவிலுக்கு வழங்க உள்ளேன்” என்று அவர் கூறினார்.

மேற்கண்ட ஆசிரியர் சீதளாதேவியைப் போலவே ஆரணியைச் சேர்ந்த ஆசிரியை த.உமாராணியும் திருக்குறளில் சாதனை செய்திருக்கிறார். அதைப் பற்றிப் பார்ப்போம்.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக்கோரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் அக்னி பெண்கள் தமிழ்ச் சங்கம் இணைந்து ஆரணி யில் கடந்த மாதம் இணைய வழியில் உலக சாதனை நிகழ்ச்சியை நடத்தி யிருக்கிறது.

அந்த நிகழ்ச்சியில் ஆரணி ச.வி. நகரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி யில் ஆசிரியையாகப் பணிபுரியும் முனைவர் த.உமாராணி திருக்குறள் மீது மாணவர்களுக்குப் பற்று ஏற்படும்படியும் வித்தியாசமாக வும் இருக்க வேண்டும் என்பதற்காகவும் பீன்ஸ் விதையில் 1330 திருக் குறள்களை எழுதி உலக சாதனை படைத்திருக்கிறார்.  

12.3.2022 அன்று மாலை 6.00 மணிக்குத் தொடங்கி மறுநாள் 13.3.2022 அன்று மாலை 4.30 மணி வரை 22.30 மணி நேரம் 1330 திருக்குறள்கள் எழுதியதை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் நடுவர்கள் முன்னிலையில் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.   

த.உமாராணி

ஆசிரியர் த.உமாராணியிடம் பேசினோம்.

பீன்ஸ் விதையில் திருக்குறள் எழுதக் காரணம் என்ன?

“மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துக் கருத்துகளையும் உள்ள டக்கியது திருக்குறள். அதைப் பிறர் அறிய வேண்டும். அதுவும் வித்தியாச மான முறையில் அறியவேண்டும் என்ற சிந்தனை எனக்கு எப்போதும் உண்டு.

திருக்குறளை தேசிய நூலாக மத்திய அறிவு அறிவிக்கவேண்டும் என்று பல் வேறு அமைப்புகள் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. அதன் தாக்கத் தால்தான் நான் ஆர்வமாக பீன்ஸ் விதைகளில் திருக்குறள் எழுதி னேன்.

இதன் மூலம் சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?

எனக்குள் எப்போதும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்  நிறுவனர் செ.வெங்கடேசன் அவர்களின் வழிகாட்டுதலால்  பீன்ஸ் விதைகளில் 1330 திருக்குறள்களை எழுதி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் புத்தகத்தில் இடம் பிடித்தேன்” என்றார் உமாராணி.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...