ஆன்லைன் ரம்மி சூதாட்டம் தொடரும் உயிர் பலி
ஆன்லைன் ரம்மியால் கேபிள் ஆபரேட்டர் தற்கொலை, ஆன்லைன் ரம்மி விளையாடிய வங்கி ஊழியர் குடும்பத்துடன் தற்கொலை, போரூர் விக்னேஸ்வரா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பிரபு (39), ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ரூ.35 லட்சம் வரை பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை என தினம் தினம் ஆன் லைன் ரம்மியில் தற்கொலை என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 10த்துக்கும் மேற்பட்டவர்கள் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் உயிரிழந்துள்ளனர் என்பது பெரும் சோகம். இதற்கு தமிழக அரசு உடனடியோக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குரல்கள் எழுந்திருக் கின்றன.
ஆன்லைனில் ரம்மி விளையாட்டு விளையாட்டுத்தனமாக ஆரம்பித்தவர் கள் அதற்கு அடிமையாகிவிடுகிறார்கள். ஆன்லைன் ரம்மி விளையாட ஏகப்பட்ட தளங்களும் செயலிகளும் கொட்டிக் கிடக்கின்றன.
தற்போது அது கேம் என்கிற போர்வையில் ஆன்லைன் ரம்மி என்ற பெய ரில் அழைக்கப்படும் இந்தச் சூதாட்ட விளையாட்டை SKILL BASED GAMES என்று அந்த நிறுவனங்கள் கூறுகின்றன.
பொதுவாக இதுபோன்ற விளையாட்டுகள் RANDOM NUMBER GENERATOR கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. RANDOM NUMBER என்பது கணினி வன்பொருள் மூலமாகவோ அல்லது மென்பொருள் அல்காரிதம் மூலமாகவோ தன்னிச்சையாகச் செயல்பட்டு வரம்பற்ற எண்களில் இருந்து சில குறிப்பிட்ட எண்களை உருவாக்கி அதனைப் பயனாளர்களுக் குக் கொடுக்கும்.
இந்த வகை தொழில்நுட்பம் மாணவர்களின் தேர்வு எண்களை உருவாக் குவதில் கூட பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆன்லைன் ரம்மி விளையாட் டில் பயன்படுத்தப்படும் RANDOM NUMBER இரண்டு வகையாகப் பிரிக்கப் படுகிறது. அதில் ஒன்று போலி மற்றொன்று உண்மை.
போலி ரேண்டம் நம்பர் முன்பே கணக்கிடப்பட்டதாக இருக்கும். இந்த ரேண்டம் நம்பர் மூலம் உருவாக்கப்பட்ட விளையாட்டுகளில் வெற்றி யாளர்கள் யார் என்பது முன்பே நிர்ணயிக்கப்பட்ட பிறகுதான் விளை யாட்டே தொடங்கும். ஆனால் அவற்றைக் கட்டுப்படுத்தலாம் என்கின் றனர்.
அதேபோல் உண்மை ரேண்டம் நம்பர் என்பது முற்றிலும் கணித சூத்திரம் என்றும் அல்காரிதம் மூலம் கிடைக்கும் எண்கள். இதனை முன்பே கணக் கிட முடியாது. இதைப் பயன்படுத்தி விளையாட்டுகளை உருவாக்குவதற் கான பொருட்செலவு அதிகம்.
இந்த இருவகைப்படியே ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் உருவாக்கப் படுகின்றன. இதில் எது உண்மையான ரேண்டம் நம்பர் என்பதை சாதாரண பயனாளர்களால் அறிந்துகொள்ள முடியாது.
இது முறையாகச் செயல்படுகின்றதா என்பதைக் கண்காணிக்கத்தான் ஆன்லைன் ரம்மி பெடரேஷன் என்ற அமைப்பு உள்ளது. ஆனால் அவற் றில் முன்னணி ரம்மி விளையாட்டு நிறுவனங்களால்தான் முக்கிய பொறுப்பில் உள்ளது.
ரம்மி ஆன்லைன் கேம் நிறுவனங்கள் இரண்டு வகையாகப் பிரிக்கப்படு கின்றன. சிறு நிறுவனங்கள் இணையத்தில் கிடைக்கும் இலவச அல்லது குறைந்த தொகையின் மூலம் கிடைக்கும் ரம்மி விளையாட்டை உருவாக் குவதற்கான கோடிங்ஸ் பெற்று அதன் மூலம் செயலியை உருவாக்கி பயனாளர்களின் விவரங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் பணத்தை ஈட்டுகின்றனர்.
மற்றொன்று பெருநிறுவனங்கள் இந்த மாதிரியான விளையாட்டுகளை உருவாக்குவதற்காகவே செயல்படும் நிறுவனங்கள். இந்த வகை நிறுவ னங்கள் நுணுக்கமான தொழில்நுட்ப வேலைப்பாடுகளுடன் பயனாளர்கள் தன்வசப்படுத்தத் தேவையான அனைத்து யுக்திகளையும் மறைமுகமாக கையாளுகின்றன.
இந்த விளையாட்டை பிரபலப்படுத்த அதிக விளம்பரத் தொகையை யூடியுப் மூலம், தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் கொண்டுசேர்க்கிறது. பயனாளர் ஒருவர் ஆன்லைன் ரம்மியை விளையாட ஆரம்பிக்கும்போது பயனாளர்களை ஈர்க்கவும் அவர்களைத் தன்வசப்படுத்தவும் அவர்களை வெற்றியாளர்களாக முன்னிலைப்படுத்த போலி ரேண்டம் நம்பர்களைப் பயன்படுத்துகின்றன.
அடுத்ததாகப் பயனாளர் அடுத்த விளையாட்டை எவ்வளவு நேரத்தில் விளையாடுகிறார், எவ்வளவு நேரம் விளையாடுகிறார் என்பதை அடிப் படையாக வைத்து தீவிரத்தைக் கணக்கிடப்படுகிறது.
குறிப்பாக, சொல்ல வேண்டுமென்றால் விளையாடும் நபர் நமது விளை யாட்டுக்கு அடிமையாகிவிட்டார் என்பதைப் புரிந்துகொள்ளும். அதன் பிறகு தொடர்ந்து ஆறு விளையாட்டில் தோற்றால் ஒரு விளையாட்டில் வெற்றி பெறுவார்.
பிறகு இரண்டு விளையாட்டில் வெற்றி பெற்றால் அடுத்த நான்கு விளையாட்டில் தோல்வி அடைவார். இப்படியாகத் தங்களின் பணத்தை முழுவதுமாக ஆன்லைன் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துவிட்டு கூடுதலாகக் கடன் பெற்றும் விளையாடும் நிலைக்குத் தள்ளப்படுகின் றனர். இதில் சோகம் என்னவென்றால் கடன் பிரச்னை, உளவியல் பிரச்னை என இரண்டிலும் சிக்குகிறவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதுதான்.
இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளை அரசு ரத்து செய்தாலும் VPN போன்ற பல்வேறு செயலிகளை வைத்து மனித உயிர்களைப் பறிக்கின் றனர். இதைத் தடுக்க மனஆலோசனையே தீர்வாக அமையும் என கூறுகின்றனர் மருத்துவர்கள். ஆனால் சட்டப்படி ஆன்லைன் ரம்மி சூதாட் டத்தை அரசு தடுத்தால்தான் உயிர்பலியைத் தடுக்கமுடியும்.
உயிர்களை பலி வாங்கும் இதுபோன்ற விளையாட்டுகளைத் தொழில் நுட்பரீதியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் அமர்ந்தவுடன் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்யப்படும் என அறிவித்தார். இன்னும் தடை செய்வதற்கான எந்த அறிவிப்பும் வரவில்லை என்பது வருந்தத்தக்க செய்தி.