சாதனை படைக்கும் உலகக் குத்துச்சண்டை வீரர் பாலி சதிஷ்வர்

 சாதனை படைக்கும் உலகக் குத்துச்சண்டை வீரர் பாலி சதிஷ்வர்

தொழில்முறை குத்துச்சண்டை வீரரும் எம்.எம்.ஏ. சண்டை வீரரும் கிக் பாக்ஸிங் வீரரும் தற்காப்புக்கலை பயிற்சியாளருமான பாலி சதீஷ்வர் ஒரு உலக சாதனையாளர். நடிகர் மற்றும் தற்காப்புக்கலை பயிற்சியாளர் புரூஸ் லீ பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நொடியில் 9 குத்துக்கள் (Punches) விட்டு உலக சாதனை நிகழ்த்தினார். அதை பாலி சதீஸ்வர் ஒரு நொடியில் 13 குத்துக்கள் விட்டு அந்தச் சாதனையை முறியடித்து உலக சாதனையை நிகழ்த்தினார். அதே சாதனையை ஒரு நொடியில் 16 குத்துக்கள் விட்டு பாலி சதிஷ்வர் சாதனையை அவரே முறியடித்து மீண்டும் உலக சாதனையை நிகழ்த்தினார்.

கடந்த மாதம் நடைபெற்ற தொழில்முறை குத்துச்சண்டை போட்டி வரலாற்றிலேயே சென்னையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் நடை பெற்ற சோம்பியன்ஷிப் சர்வதேச தொழில்முறை போட்டியில் பாலி சதிஷ்வர்  இலங்கை வீரரை வீழ்த்தி உலக சேம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

சிலர் பயிற்சியாளர்களாக மட்டுமே உள்ளனர். பாலி சதிஷ்வர் பயிற்சியாள ராக மட்டுமின்றி தொழிற்முறை குத்துச்சண்டை வீரராகவும் சாதனையாள ராகவும் விளங்குகிறார். ஆபத்தான இந்த விளையாட்டினால் அவர் உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டிருந்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற தினமும் 10 மணிநேரம் கடுமையான பயிற்சி யில் ஈடுபட்டு வருகிறார். வறிய நிலையில் இருந்தாலும் சத்தான உணவு கள் உட்கொள்ளும் நிலை இல்லாமல் இருந்தாலும் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் வெற்றிக் கோப்பைப் பெற்றுத்தர உலக அளவில் சாதனை படைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

அடுத்த மாதம் சென்னையில் முதன்முறையாக உலக கிக் பாக்ஸிங் பெடரேஷன் மூலம் நடைபெறும் உலக கிக் பாக்ஸிங் கே1 போட்டியில் தலைசிறந்த நேபாள் நாட்டின் குத்துச்சண்டை வீரரை எதிர்த்து போட்டியிட இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து சென்னையில் முதன்முறையாக சர்வதேச எம்.எம்.ஏ. குத்துச்சண்டை வேர்ல்டு சேம்பியன்ஷிப் போட்டியில் உலகின் தலை சிறந்த வீரரான ஆப்கானிஸ்தான் வீரரை எதிர்த்து பாலி சதிஷ்வர் போட்டியிட இருக்கிறார்.

அடுத்து அமெரிக்காவில் நடைபெறும் தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் அமெரிக்காவின் தலைசிறந்த குத்துச்சண்டை வீரர்களை எதிர்த்து முதன்முறையாக தமிழகத்திலிருந்து பாலி சதிஷ்வர் இந்திய ராணுவ வீரரான அபிலேஷ் யாதவுடன் இணைந்து போட்டியிட இருக்கிறார். அதற்காக தினமும் 10 மணி நேரமும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் பாலி சதிஷ்வர்.

பாலி சதிஷ்வர் குத்துச்சண்டை வீரராக மட்டுமன்றி இந்தியாவில் பெரிய சண்டைப் பயிற்சிக்கான உள்விளையாட்டு அரங்கு சென்னையில் தொடங்கி நடத்திவருகிறார். இதில் எல்லாவிதமான சண்டைப் பயிற்சி களையும் ஏழை எளிய மாணவர்களுக்குக் கற்றுத் தந்த வருகிறார். இன்னும 5 ஆண்டுகளில் பல சிறந்த குத்துச்சண்டை வீரர்களை தமிழகத்துக்கு உரு வாக்கித் தரவேண்டும் என்கிற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார் பாலி சதிஷ்வர்.

சமீபத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் சுகாதாரத்துறை அமைச்சர் மாண்பு மிகு மா.சுப்பிரமணியன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. பிரபாகர் ராஜா அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்..

தி.மு.க விருகை பகுதி செயலாளர் மற்றும் சென்னை மாமன்ற உறுப்பினர் உயர்திரு. ராஜா அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றோம்.

மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் திரு காரப்பாக்கம் கணபதி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...