தஞ்சையில் தேர்த் திருவிழா தீ விபத்து சோகம்

 தஞ்சையில் தேர்த் திருவிழா                    தீ விபத்து சோகம்

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் அப்பர் சதயவிழா தேரோட்டத்தின் போது மின்சாரம் தாக்கி ஏற்பட்ட விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்; 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர் என்கிற செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்பர் பெருமானுக்கு திங்களூர், திருப்புகழூர், திருப்பூந்துருத்தி என தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் விழா நடக்கிறது. அப்பர் பங்குனி மாதத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்ததாக கூறப்படுகிறது. அப்பெருமானார் முக்தி பெற்ற தினமான சித்திரை சதய நட்சத்திரத்தில் அப்பர் குருபூஜை நடைபெறுகிறது.

தத் தலங்களில் விழா சிறப்பாக கொண்டாடுகிறது. ஆனால் இதற்கு எவ்வித தொடர்பும் இல்லாத ஒரு பகுதிதான் தஞ்சை அருகே உள்ள களிமேடு என்ற கிராமம். இங்கு 93 ஆண்டுகளாகத் தொடர்ந்து சித்திரை சதய நாளில் அப்பர் சுவாமிக்கு குரு பூஜை விழா நடந்து வருகிறது.

தஞ்சையிலிருந்து மேற்கே பூதலூர் செல்லும் சாலையில் 5 கிமீ தொலைவில் மேலவெளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம்தான் களிமேடு. இங்குதான் மூன்று நாட்கள் அப்பர் சதய விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. களிமேடு கிராமத்திலுள்ள குளத்தின் வடகரையில் அப்பர் மடம் அமைந்துள்ளது. இம்மடம் 90 ஆண்டுகளுக்கு முன்பு உயிர்க்கொலை பாவம் எனக் கருதிய ஊர்ப் பெரிய வர்களால் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இம்மடத்தில் தஞ்சை பாணி ஓவியத்தில் அமைந்த அழகிய அப்பர் பெருமான் ஓவியம் உள்ளது. 300 ஆண்டுகள் பழமையான ஓவியம் என்று கூறப்படுகிறது. குருபூஜை நாளன்று மலர்களைக் கொண்டு அலங்கரித்து, அப்பர் ஓவியம் தாங்கிய திருத்தேர் வீதி உலா வரும். அப்பொழுது ஒவ்வொரு வீட்டிலும் பூஜை நடத்தி மக்கள் வழிபாடு நடத்துவர். சில ஆண்டுகளாக அப்பர் உருவச்சிலை வைக்கப்பட்டு ஊர்வலம் நடந்து வருகிறது.

தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் அப்பர்சாமி மடம் அமைந்துள்ளது. அப்பர் முக்தி பெற்ற தினமான சித்திரை சதய நட்சத்திரத்தில் அப்பர் குருபூஜை ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்கள் நடைபெறும்.

அப்பர்சாமி சித்திரை சதய விழா ஆண்டுதோறும் நடைபெறும். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகத் தேர் திருவிழா நடைபெறவில்லை. இதனால் இந்த ஆண்டு விமர்சியையாகத் திருவிழா தொடங்கியது. சிறிய அளவிலான தேரை பொதுமக்கள் இழுத்துச் சென்றனர்.

தேர் நிலைக்கு வரும் சிறிது நேரத்திற்கு முன்பு தான் இப்படி ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. நிலை நிறுத்தும்போது எதிர்பாராதவிதமாக தேரின் மேல்பகுதி மேலே சென்ற உயர் மின்அழுத்த கம்பி மீது உரசியதில் தேர் எரிய தொடங்கியது. சட்டென்று தேரில் அமர்ந்திருந்தவர்கள், முன்பு நின்றவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் உடல் கருகி 11 பேர் இறந்து விட்டனர். 10-க்கும் மேற்பட்டோர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் துயரச் சம்பவத்தால் அந்தக் கிராமமே கண்ணீர் சிந்தியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

15 அடி உயரம் கொண்ட தேர் செல்லும் பாதையின் ஓரத்திலும், குறுக்கிலும் மின் கம்பிகள் செல்கின்றன. மின் கம்பிகள் தாழ்வாக செல்லும் இடங்களில் மின்சாரக் கம்பியைத் தூக்கிப் பிடித்து தேர் செல்வதற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேரோட்டம் முடிந்து திரும்பும் போது எதிர்பாராதவிதமாக தேரின் உச்சி மின்சாரக் கம்பியில் பட்டு தீப்பிடித்து எரிந்துள்ளது.

இம்முறை கொரோனா பரவல் குறைந்ததால் திருவிழா கோலாகலமாக தொடங் கியது. நேற்று மங்கள இசையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நள்ளிரவில் தொடங்கியது. பொது வாக தேரோட்டம் காலை அல்லது மாலையில் நடைபெறும். ஆனால் இங்கு நள்ளிரவில் தொடங்கி அதிகாலை வரை நடப்பது வழக்கம்.

அதன்படி நள்ளிரவு 12 மணிக்குத் தேர்த் திருவிழா தொடங்கியது. பல்வேறு வீதிகளின் வழியாகச் சென்று நிலைக்கு வரும்போது தான் துயர சம்பவம் நடந்துள்ளது. தேரின் உச்சிப்பகுதி மேலே சென்ற மின்கம்பி மீது உரசியதில் தேர் தீ பிடித்து எரியத் தொடங்கியது. அடுத்த நொடியே மின்சாரம் பாய்ந்து 11 பேர் உடல் கருகி இறந்தனர். 17-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

கோலாகலமாக தொடங்கிய திருவிழா சோகத்தில் முடிந்தது அனைவரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தி உள்ளது.

இதுகுறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர் திருவிழா விபத்தில் 11 பேர் உயிரிழந்த துயர செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த விபத்தில் காயமடைந்துள்ள 15 பேருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத் திற்கு உத்தரவிட்டுள்ளேன். விபத்து நடந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சை தேர்த் திருவிழா விபத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

எந்தவொரு திருவிழாவாக இருந்தாலும் முதற்கட்டமாக முறையான அனுமதி யைக் காவல் துறை, தீயணைப்புத் துறையிடம் பெறவேண்டும். ஆனால் இந்த அப்பர் கோவில் திருவிழா மற்றும் தேரோட்டம் நடத்துவது தொடர்பாக விழாக் குழுவினர் மற்றும் நிர்வாகத்தினர் எந்தவொரு அனுமதியும் பெறவில்லை. இதுகுறித்து தஞ்சை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அதிகாரி (பொறுப்பு) பானுப்பிரியா கூறியதாவது:-

தேர் புறப்பட்ட இடமானது மிகவும் குறுகிய தெருவாகும். அங்கிருந்து வந்து பிரதான சாலையில் இணையும் இடத்தில்தான் இந்த மின் விபத்து நடந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் தேரோட்டம் நடை பெறவில்லை. இந்த ஆண்டு நடைபெற்றதால் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்துகொண்டுள்ளனர்.

அதேபோல் தேரில் அலங்கார பொருட்கள் அதிக அளவில் பொருத்தப்பட்டு இருந்துள்ளது. குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் தேரின் மேல் பகுதி செல்லும்போது மின்சார எச்சரிக்கை இருந்திருக்க வேண்டும். ஆனால் யாரும் அதனை கவனத் தில் கொள்ளவில்லை.

அத்துடன் குறுகிய தெருவில் இருந்து பிரதான சாலைக்குத் தேர் திரும்பியபோது தேருக்கு முன்னால் தள்ளுவண்டியில் வைத்துக்கொண்டு செல்லப்பட்ட ஜென ரேட்டரில் பழுது ஏற்பட்டு புகை கிளம்பியுள்ளது. அதுவே பெரும் விபத்துக்குக் காரணமாகி விட்டது.

அதே சமயம் தேரின் மேல்பகுதி உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் அலங்காரப் பொருட்களில் உடனே தீப்பற்றி, அடுத்த விநாடி தேரின் அனைத்துப் பகுதிகளிலும் மின்சாரம் பாய்ந்துள்ளது. ஒரு சிலர் சுதாரித்துக்கொண்டு தேரில் இருந்து குதித்துள்ளனர். அவர்கள் காயங்களுடன் தப்பினர்.

மேலும் தேரை வடம்பிடித்து இழுத்து வந்தவர்களுக்கு அப்பகுதியினர் வேண்டு தலாக, கால்களில் தண்ணீரை ஊற்றியுள்ளனர். இது மின்சாரம் அவர்களின் உடலில் பரவியதற்கு முக்கிய காரணமாகும். விபத்து குறித்து எங்களுக்கு அதிகாலை 3.10 மணிக்கு தகவல் வந்தது.

அடுத்த 5 நிமிடத்தில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தேரில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வந்தோம். ஆனால் அதற்கு முன்னதாகவே 10 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துவிட்டனர்.

தஞ்சை தேர்விழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தின் தஞ்சாவூரில் நடந்த அசம்பாவிதம் மிகுந்த வேதனையளிக்கிறது. படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள். விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங் கப்படும்.

விபத்தில் காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டுள்ள 15 பேருக்கும் சிறப்பான மருத்துவம் அளித்து, அவர்களின் உயிர்களைக் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...