செஞ்சி டி.எஸ்.பி. பிரியதர்ஷினி வெளியிட்ட அறிவியல் ஆய்வறிக்கை
மத்தியப்பிரதேச மாநிலம், போபால் நகரில் இந்திய காவல் துறை அறி வியல் மாநாடு நடைபெற்றது. அதில் தமிழகத்திலிருந்து ஒரே ஓர் ஆய்வ றிக்கை மட்டுமே ஏற்கப்பட்டது. அந்த அறிக்கையை சமர்ப்பித்தவர் தமிழ கத்தைச் சேர்ந்த டி.எஸ்.பி., பிரியதர்ஷினி. அது ஒருவர் கருவிழி மூலம் குற்றவாளியைக் கண்டறியும் ஆய்வு அறிக்கை ஏற்கப்பட்டது..
குற்றவாளியின் தனி மனித உரிமை பாதிக்காமல், அவரது கருவிழி அசை வதை வைத்து உண்மையைக் கண்டறிவதற்கான வழிமுறைகள் குறித்த ஆய்வறிக்கையை, செஞ்சி டி.எஸ்.பி., சமர்ப்பித்துள்ளார்.
மத்தியபிரதேச மாநிலம், போபால் நகரில் இந்திய காவல் துறை அறி வியல் மாநாடு 22-4-2022 அன்று தொடங்கியது. சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘இந்திய காவல் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும்’ என, உறுதி அளித்தார். இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் குற்றங்களைத் தடுக்கும் தொழில்நுட்பங்கள் குறித்த ஆய்வறிக்கை மாநாட்டில் சமர்ப்பிக்கப் பட்டது.
தமிழகத்தில் இருந்து ஒரே ஓர் ஆய்வறிக்கை மட்டுமே ஏற்கப்பட்டது. அதுவும், செஞ்சி டி.எஸ்.பி., பிரியதர்ஷினி, 27, சமர்ப்பித்த அறிக்கைதான் அது. இவர் 2019ல் தமிழகக் காவல் துறையில் டி.எஸ்.பி.,யாகப் பணியில் சேர்ந்தவர். இவரது தந்தை ஆறுமுகசாமி மதுரை போக்குவரத்து துணை கமிஷனராக உள்ளார்.
மாநாட்டில் கலந்துகொண்ட பற்றி பிரியதர்ஷினி கூறியதாவது: “போலீஸ் விசாரணையின்போது தனி மனித சுதந்திரம், உரிமை பாதிக்கக் கூடாது என, இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் வலியுறுத்துகின்றன. குற்றவாளி களை கையாளுவதில் சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது. அதற்கேற்ப இந்தியாவில் போதிய தொழில்நுட்பங்கள் இல்லை. டி.என்.ஏ., சோதனையைத் தாண்டி அடுத்தக்கட்ட தொழில்நுட்பத்திற்கு இன்னும் நாம் செல்ல வேண்டியுள்ளது.
ஆதார் அட்டை பதிவு செய்யும்போது, கருவிழி பதிவு செய்வது அறிமுக மானது. இதனை அடிப்படையாகக் கொண்டு, குற்றவாளியின் தனி மனித உரிமை பாதிக்காமல் அவரது கருவிழி அசைவதை வைத்து உண்மை யைக் கண்டறிவதற்கான தொழில்நுட்பம் குறித்து ஆய்வறிக்கை தயாரித்து சமர்ப்பித்ததோடு, அது குறித்து மாநாட்டில் பேசினேன். தற் போது, இவ்வசதியை அமெரிக்காவின் நியூயார்க் போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்” என்றார் பிரியதர்ஷினி.