திருநங்கைக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய பெற்றோர்

 திருநங்கைக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய பெற்றோர்

பெற்றோரே வெறுத்து ஒதுக்குவது சகஜம். ஆனால் விருத்தாச்சலம், இந்திரா நகரில் ஒரு பெற்றோர், தன் மகனான இருந்து நிஷா என்கிற 21 வயது திருநங்கை யாக உருமாறியவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தியுள்ளனர். அதுவும் வீட்டில் உற்றார், உறவினர்களை அழைத்து மஞ்சள் நீராட்டு விழா நடத்தியுள்ளனர். இதனால் அந்தப் பெற்றோருக்கு ஊர் மக்கள் மட்டுமல்லா மல், கேள்விப்பட்ட அனைவருமே பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

திருநங்கை நிஷாவிடம் பேசினோம். “பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். பதினான்கு, பதினைந்து வயதுக்குமேல்தான் எனக்குள் சில மாற்றங்கள் தெரிந் தன. எவ்விதக் குழப்பமும் நான் அடையவில்லை. எப்படியோ நாட்கள் ஓடிக் கொண்டே இருந்தன. பின்னர்தான் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தேன். எனக்குத் திருநங்கைகள் பலரும் வழிகாட்டி உதவினார் கள். திருநங்கைகளுக்குள் ஒரு வழக்கம் இருந்து வருகிறது. அவர்கள் அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஒரு ஆண்டு முடியும்போது, அதே நாளில் அதனை ஒரு விழாவாகத் திருநங்கைகள் மட்டுமே கொண்டாடுவார்கள்.

அதுபற்றி என் அம்மா, அப்பாவிடம் தெரிவித்தேன். அவர்கள் நமது உற்றார், உறவினர்களை வரவழைத்து பூப்புனித நீராட்டு விழாவாகவே கொண்டாடிவிட லாம் என்றனர். மஞ்சள் சாந்து பூசி பூப்புனித நீராட்டு விழாவைச் சிறப் பாக நடத்தினார்கள். எனக்கு சந்தோசமாக இருந்தது” என்றார்.      

அதுபற்றி நிஷாவின் தாய் அமுதாவிடம் பேசினோம். “இறைவனின் படைப் பில் உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொண்டு இந்த வாழ்வினைக் கடந்து செல் வதுதான் உண்மையான இறை பக்தியாகும். இதற்காக கசப்போ, வெறுப்போ எங்கள் மகள் மீது காட்டவில்லை. ஆண், பெண், மூன்றாம் பாலினமாக இருந் தாலும் பாசம் மாறப்போவதில்லை. மகனாகப் பிறந்து மகளாக மாறியவளை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். அதனை வெளிப்படுத்தும் விதமாகத்தான் இந்த மஞ்சள் நீராட்டு விழாவை முழு திருப்தியுடன் நடத்தினோம்” என்றார் அமுதா.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...