ஹிட்லர் ஏன் யூதர்களை வெறுத்தார்? அழித்தார்?
ஹிட்லர் ஏன் யூதர்களை வெறுத்தார்? அழித்தார்? அதற்கான உண்மையான காரணம் என்ன?
யூதர்களின் வாழ்வியல் முறையை முதலில் பார்க்க வேண்டும். யூதர்கள் மற்ற இனத்தவருடன் கலக்க மாட்டார்கள். உலகில் மிக உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் கொண்டவர்கள். பிற இனத்தவரின் கலப்பை தம் இனத்தில் ஏற்றுக்கொள்வது இல்லை. உதாரணமாf. இங்கே சில சாதியை சொல்ல லாம்.
மிக புத்திசாலிகள் யூதர்கள். அவர்களின் கல்வி, திறமை மிக மேம்பட்டது. உலகில் அதிகமாய் நோபல் பரிசு வாங்கிய இனம் என்றால் அது யூத இனம் தான்.
தம் கைகளில் கறை படாமல், அடுத்தவரின் உழைப்பின் மூலம் பெரும் பணத்தைச் சம்பாதிக்கும் திறன் பெற்றவர்கள். எந்தத் துறையிலும் தம் அறிவாற்றலால் ஆதிக்கம் செலுத்துபவர்கள்.
மேல்மட்டத்தில் இருக்கும் ஒரு யூதன் சடசடவென தன் ஆட்களை மேலே கொண்டுவருவான். தன் இனத்தவன் யாராக இருந்தாலும் உடனே உதவும் குணம் கொண்டவர்கள்.
ஒரு ஊரில் முதலில் ஒரு யூத குடும்பம் குடியேறும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தன் இனத்தைச் சேர்ந்த குடியேற்றத்தை ஏற்படுத்தி அங்கு பெரும் காலனியை உருவாக்கி, அந்த ஊரின் முக்கிய அதிகாரத்தில் தன்னை நிலைநிறுத்தி கொள்வர்.
ஹிட்லர் சிறுவனாக இருக்கும்பொழுது, மேன்மக்கள் அனைவருமே யூதர் களாகத் தெரிந்தனர். யூதர்கள் தன் இனத்தைத் தவிர மற்றவர்களைத் தீண்டதகாதவர்களாகவே பார்த்தனர். உயர்மட்ட அரசியலிலும், உலக அரசியலிலும் யூதர்களே கோலோச்சி இருந்தனர்.
வியாபாரம், அரசின் உயர் பதவி, தனியார் நிறுவனங்கள் அத்தனையிலும் யூதர்கள்.
ஏழைகளை உறிஞ்சி யூத இனம் கொழுத்து வாழ்வதாக ஹிட்லர் நம்பினார்.
அவர்களின் வாழ்வியல் முறையை வெறுத்தார். அவர்கள் தம் அறிவாற்ற லால் மிக எளிதாக வேகமாக முன்னேறி உயரிய இடத்திற்குச் செல்வதை வெறுத்தார்.
முதலாம் உலகப்போரில் ஜெர்மனி தோற்றுப் போனதற்கு யூதர்கள்தான் காரணம் என்று ஹிட்லர் யூதர்களை வெறுத்தார்.
இப்போது நம்மையே எடுத்துக்கொள்ளுவேம். நம் எதிரே சில ஜாதியைச் சேர்ந்தவர்கள் கையில் கறை படாமல், சேறு படாமல் பல உயர் பதவி களிலும், மேன்மையான வாழ்விலும் வாழவில்லையா? அதைப் பார்க்கும் போது ஒரு கோபம் உருவாகும். அந்தக் கோபம்தான் ஹிட்லரிடம் இருந்தது. ஆனால் அதை நாம் நியாயப்படுத்தவில்லை.
நமக்குத் தெரிந்த ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்கள் வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கிறார்கள். அச் சாதிச் சங்கங்கள் எல்லாவற்றையும் செய்து அவர்களை முன்னேற்றுகிறது. (முன்னாடி அவர்கள் பெறும் கஷ்டப்பட்டு இருக்கலாம்.)
இப்படி ஜெர்மனியரின் வாழ்வில் குதிரையேறிக் கொண்டிருந்த யூதர்கள் மீது பெரும் வெறுப்பு வந்தது ஹிட்லருக்கு.
அவர்களை ஒழித்தால் நாடு நலன்பெறும் என்ற தத்துவத்தை நம்பினார். யூதர்களின் மீது ஏற்பட்ட வெறுப்பை போன்று கம்யூனிஸ்ட் மேலும் உண்டு.
சாமானியன் வெறுப்பு எதுவும் செய்யாது. ஆனால் ஆட்சியாளனின் வெறுப்பு பல அழிவை உண்டாக்கும்.
1933ல் ஹிட்லர் தலைதூக்கத் தொடங்கினார். நாஜிக் கொள்கையை வலுப் பெறச் செய்தார். அதனால் அப்பகுதிகளில் இருந்த யூதர்களின் நிலை கவலைக்கிடமாக மாறியது. பொருளாதார மந்தநிலை, போர் ஆகியவற் றால் அச்சமுற்ற யூதர்கள் ஐரோப்பிய கண்டத்தில் இருந்து பாலஸ்தீன், அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் ஆகிய நாடுகளை நோக்கிப் புலம் பெயரத் தொடங்கினர்.
இரண்டாம் உலகப்போர் 1939ல் ஆரம்பித்து 1941 முடிந்தது. அந்தக் காலத் தில் அடால்ப் ஹிட்லர் ஏறத்தாழ ஐரோப்பியாவின் அனைத்து நாடுகளை யும் கைப்பற்றியிருந்தார். அதில் முக்கியமாக யூதர்கள் அதிக அளவில் வசித்த பகுதிகளான போலந்து மற்றும் பிரான்சும் ஹிட்லரின் கட்டுப்பாட் டின் கீழ் வந்தது. 1941ல் ஹிட்லர் அனைத்து யூத மக்களையும் அழிக்க வேண்டும் என்று எண்ணத் தொடங்கினார்.
அடோல்ப் ஹிட்லர் ஆறு மில்லியன் யூத மக்களைக் கொன்றார். இது பெரும் இன அழிப்பு என்று வரலாற்று அறிஞர்களால் கூறப்படுகிறது. ஹிட்லர் மூன்று மில்லியன் மக்களை வதை முகாம்களில் நச்சு வாயு செலுத்திக் கொன்றார். அதில் ஆஸ்விஷ்டிஷ் வதை முகாமில் மட்டும் ஒரு மில்லியன் யூத மக்களைக் கொன்றிருந்தார்.
1949 உலக போர் முடிவுற்ற பிறகு உலகம் முழுவதும் இருந்த யூதர்களை அழைத்து, இஸ்ரேல் என்னும் ஒரு புதிய யூதர்களுக்கான நாட்டை உருவாக்கினர். தற்போது இஸ்ரேல் ஒரு குடியரசு நாடாகும். அதில் எட்டு மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். அதில் 6 மில்லியன் மக்கள் யூதர்கள் ஆவர்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் மிகப் பெருமளவில் யூதர்கள் வசித்து வருகின்றனர். இங்கு மட்டுமல்லாது யூத மக்கள் பெரும்பான்மை இனமாக பிரான்ஸ், அர்ஜென்டினா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்களில் வசித்து வருகின்றனர்.
பெரிய யூதப் படுகொலை (Holocaust) என்பது இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் ஜெர்மனியில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கப் பயன்படும் ஆங்கிலச் சொல் லான ஹாலோகோஸ்ட் (Holocaust) என்பதற்கு இணையாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது, இதனை சோகா என்றும் குறிப்பர். இது அக்காலத்தில் ஜெர்மனி யில் ஆட்சியில் இருந்த, அடொல்ஃப் ஹிட்லரின் தலைமையிலான தேசிய சோசலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சியின் (நாஸி) இன அழிப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக கீழ் இடம்பெற்றது.
யூதர்கள் தவிர வேறு பிற இனத்தவர்களும், பிரிவினரும் கூடப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களுள், ஜிப்சிகள், சோவியத் ஒன்றியத்தவர் மற்றும் சோவியத் போர் கைதிகள், பொதுவுடமைவாதிகள், போல் இனத்தவர், பிற சிலாவிய மக்கள், ஊனமுற்றோர், தன்னினச் சேர்க்கையாளர், அரசியல் எதிரிகள், மாறுபட்ட சமயக்கருத்துக் கொண்டவர்கள், யூஹோவா சாட்சி யாளர் என்போரும் அடங்குவர்.
உக்ரைன் – ரஷ்யா போரை இப்போது நினைத்துப் பாருங்கள். என்னவாகு மென்று.