கோத்தபய நாட்டை விட்டு  ஓடு! -இலங்கை மாணவர்கள் போராட்டம்
1 min read

கோத்தபய நாட்டை விட்டு ஓடு! -இலங்கை மாணவர்கள் போராட்டம்

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஸவை நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரி வவுனியா பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப் பட்டது.

நேற்று (05.04.2022) காலை வவுனியா, மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகாவித்தியால யத் திற்கு முன்பாக ஆரம்பித்த ஆர்ப்பாட்ட பேரணியானது கண்டி வீதியை அடைந்து, ஹொரவப்பொத்தானை வீதியூடாக பஜார் வீதி சென்று பழைய பேரூந்து நிலையத்தை அடைந் தது.
இதன்போது மணிக்கூட்டு கோபுர சந்தி மற்றும் பழைய பேருந்து நிலையம் என்பவற்றுக்கு முன் னால் வீதியை மறித்தும் மாணவர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ‘கோத்தபய நாட்டை விட்டு வெளியேறு, கோத்தபய வீட்டுக்குச் செல்லுங் கள்- நாட்டை சீரழிக்காதே, பொருளாதார நெருக் கடிக்கு வழிவகுக்காதே, அணுகுண்டு இல்லாமல் நாட்டை அழிக்காதே, கோத்தபய வீட்டுக்கும்- நாட்டுக்கும் கேடு, சத்தம் போடாமல் அமெரிக் காவுக்கு ஓடு’ என எழுத்தப்பட்ட சுலோக அட் டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.
பொலிசார் பாதுகாப்பு மற்றும் கண்ணகாணிப்பு நடைவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். 600 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் அமைதியான முறையில் சுமார் 3 மணித்தியாலயம் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து இருந்ததுடன் பின்னர் அமைதியாக கலைந்து சென்றனர்.

இலங்கையிலிருந்து…

பத்திரிகையாளர் ரத்ன காந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *