விலைவாசி குறைய ஒரு யோசனை | வெங்கடேஷ்வர மாரி ராஜா

 விலைவாசி குறைய ஒரு யோசனை | வெங்கடேஷ்வர மாரி ராஜா

காமராஜர் மாதிரி ஒரு cm, pm வேணும் ன்னு நினைச்சா அதுக்கு மக்கள் தான் தயாராகணும்.

கட்சிகள் தேர்தல் செலவு செஞ்சா திரும்ப எடுக்க நினைக்கிறது தப்பில்லை. அதனால் தான் விலைவாசி. மக்களே தேர்தல் செலவு செய்யணும். எப்பிடி. உங்க வீட்ல இருக்குற நாலு பேர்ல ஒருத்தர தலைவரா தேர்ந்தெடுங்க.

அப்பாவோ அம்மாவோ மகனோ மகளோ. அந்த தலைவர் கைல தலைக்கு ஒருரூவா குடுங்க. நாலு ரூவா ஆச்சா. தேர்தல் சின்னம் நட்சத்திரம்.இதே மாதிரி தெருவில் பத்து வீடுகளில் (டோர் நம்பர் ஒன் to டென்) பத்து தலைவர் இருப்பாங்க இல்லையா. அந்த பத்து பேரும் வீட்டு வாசல்லயே தெருவிலேயோ உங்க பத்து வீட்டு வாசல் வராந்தா போர்ட்டிக்கோ எங்கேயாவது ஒண்ணா உக்காந்து ஒரு அஞ்சு நிமிஷம் பேசி உங்களுக்குள் யாராவது ஒருத்தர தலைவரா தேர்ந்தெடுங்க.

அவர் கைல அந்த பத்து பேரும் வச்சிருக்கிற 10×4=40 ரூபாய குடுங்க. தெருவில் ஒரு ரூபாய குடுங்க. தெருவில் ஒரு அம்பது வீடு இருந்தா அஞ்சு தலைவர்.100 ன்னா பத்து தலைவர் இருப்பாங்க இல்லையா. அந்த அஞ்சு தலைவரும் அந்த தெரு முனையில் ஒன்று கூடுங்க கிழக்கு அல்லது தெற்கு முனை. அங்கும் இதே மாதிரி.5×40=200 ரூபாய்.

ஒரு நகர் இதே மாதிரி ஐந்திலிருந்து பத்து தெரு இருக்கலாம். அந்த ஐந்து அல்லது பத்து தெரு தலைவர்களும் அந்த நகர் பிள்ளையார் கோயில்ல ஒண்ணு கூடுங்க. பிள்ளையார் கோயில் இல்லாத நகர் கிடையாது. இல்லேன்னா அம்மன் கோயில் இல்லேன்னா சர்ச்சு இல்லேன்னா மசூதி. அங்கே வாசலில் ஒண்ணு கூடி இதே மாதிரி பண்ணுங்க. அங்கே 1000 லிருந்து 5000 வசூல் ஆகும்.

அப்புறம் வட்டம் ஐம்பதாயிரம் வசூல் ஆகும். அப்புறம் சட்ட மன்றத்தொகுதி. ஐந்து லட்சம் வசூலாகும். அந்த ஐந்து லட்சம் யார் கையில் வருகிறதோ அவரே வேட்பாளர். பாராளுமன்ற தொகுதி என்றால் முப்பது முப்பத்தைந்து லட்சம் வசூலாகும். அங்கே அவரே வேட்பாளர். வேட்புமனு தாக்கல் செய்வார். ஐம்பதாயிரமோ அறுபதாயிரமோ டெபாசிட். எல்லாம் மக்கள் பணம்.

இப்போதெல்லாம் தேர்தல் ஆணையம் பேனர் சுவர் விளம்பரம் வாகனம் போன்ற பல விஷயங்கள் தடை பண்ணிருக்கு. So செலவு இல்லை. நட்சத்திரம் சின்னம் எல்லா மதத்துக்கும் பொது பிறை நட்சத்திரம் இஸ்லாமிய சம்பந்தம் உண்டு.

இயேசு வின் பிறப்பை நட்சத்திரம் அறிவித்ததால் கிறித்துவருக்கும் பொது. அஸ்வினி பரணி ரோஹிணி என இந்துவுக்கும் பொது. மத ஒற்றுமை நல்லிணக்கம் பெருகும்.

வேறு விளம்பரம் போன்ற எதுவும் தேவை இல்லை. போலியோ சொட்டு மருந்து விளம்பரம் போல் சாதாரண விளம்பரம் போதும். தேர்தல் செலவு போக மீதியை சட்ட மன்ற உறுப்பினர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் நல நிதியில் சேர்த்து விடலாம்.

அதுவும் திரும்பவும் மக்களுக்கே கிடைத்துவிடும். சொந்த காசு என அந்த வேட்பாளர் நான்கே ரூபாய் தான் அவர் வீட்டு காசை செலவு செய்திருப்பார் அதையும் அவரிடம் திருப்பி கொடுத்து விடுங்கள். சிம்பிள். இப்போ ஒரு காமராஜர் ரெடி. இப்படி 234 காமராஜர்கள் இருந்தால் அவர்களுக்கு வேறென்ன செலவு.

ஆட்டோமேட்டிக்கா விலைவாசி குறையும்.mp க்களும் இதே மாதிரி வந்தால் சென்ட்ரல் லேயும் விலைவாசி குறையும்.நம்ம நாடு சுதந்திரம் அடையும்போது இந்திய பண மதிப்பும் அமெரிக்க டாலரும் ஒரு ரூபாய்க்கு ஒரு டாலர் தான். ஆனால் இப்போ எண்பது ரூபாய் கொடுத்தாதான் ஒரு டாலர். So திருந்த வேண்டியது மக்கள் தான்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...