தினந்தோறும் என்ன மூலிகைத் தேநீர் குடிக்கலாம்?

 தினந்தோறும் என்ன மூலிகைத் தேநீர் குடிக்கலாம்?

திங்கட்கிழமை
வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்க ரண்டி, கொதிக்க வைதுக்குடித்தல் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது.

செவ்வாய்க்கிழமை
கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக் குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும்.
புதன்கிழமை
தூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம் மூன்றையும் சமஅளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக் குடித்தால் சளி சேராது, இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும்.

வியாழக்கிழமை
சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்துப் பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக் கரண்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக் குடித்தால் ஜீரணம் நன்றாக ஆகும். வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.
வெள்ளிக்கிழமை
வெந்தயம், தனியா சமஅளவு சேர்த்து வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்க ரண்டி போட்டு பனங்கற்கண்டு, சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக் குடித்தால் பித்தநீர் வெளியேறிவிடும்.

சனிக்கிழமை
முருங்கைக்கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடித்தால், உடலுக்கு இரும்புச்சத்து கிடைக்கும்.


ஞாயிற்றுக்கிழமை
சுக்கு மல்லி காபி குடிக்கலாம். இப்படி பழகிக் கொண்டால் எந்த வியாதியும் வராது, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...