தொழிலில் நேர்மை பணியில் உண்மை

தொழிலில் நேர்மை இந்தக் காலத்தில் தேடவேண்டியிருக்கிறது. ஆனால் காரைக்குடியில் முடி திருத்தும் கடையில் வேலை பார்க்கும் ஒருவர் தன் பணியை நேர்மையாக நடத்துகிறார். தான் செய்யும் ஒரு வேலைக்கும், அடுத்த வேலைக்கும் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறோம்? ஒரு நாளில் எவ்வளவு நேரம் ஓய்வாக இருக்கிறோம் என கணக்கிட்டு வேலை பார்க்கும் சலூன்காரர் சிதம்பரம் என்னை ஆச்சரியத்தில் அசத்தினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஸ்ரீராம் நகரில் சலூன் கடையில் வேலை பார்ப்பவர்தான் சிதம்பரம். சமீபகாலமாக அந்தக் கடைக்கு வாடிக்கையாளராகச் சென்று வருகின்றேன்.


இந்த முறை செல்லும்பொழுது ஒரு நோட்டில் வாடிக்கையாளர்கள் எவ்வளவு பணம் கொடுத்துள்ளார்கள் என்பதை எழுதினார். பணம் தானே எழுதுகிறார் என்று நான் நினைத்தேன். பிறகு கேட்டேன். “நீங்கள் தானே கடையை நடத்துகிறீர்கள்? பின்பு ஏன் பணத்தை நோட்டு போட்டு எழுது கிறீர்கள்”.
அதற்கு சிதம்பரம் சொன்ன பதில்தான் என்னை ஆச்சரியத்தில் அசத்தியது. “நான் சம்பளத்திற்குத்தான் இந்தக் கடையில் வேலை பார்க்கிறேன். எனது முதலாளி இரண்டு கடைகள் வைத்துள்ளார். அதனால் என்னை இந்தக் கடையில் தொழிலாளி போல் நடத்தாமல் சக நண்பராக நடத்தும் அவ ருக்கு நேர்மையாக நடக்க வேண்டும் என்கிற நோக்கில் எத்தனை நபர்கள் வந்தாலும் அந்தக் கணக்கை நோட்டில் குறித்து விடுவேன்.
அது போக ஒரு வேலை முடிந்து அடுத்த வேலை ஆரம்பித்து அந்த வேலை முடிவதற்கு எவ்வளவு நேரம் ஆகிறது என்பதையும் நானே நோட்டில் குறித்து கொள்வேன். என்னுடைய கை சரியான வேகத்தில் செயல்படு கிறதா அல்லது ஒரு வேலை பார்த்தவுடன் மெதுவாக ஆகிவிடுகிறதா என்பது போன்று நானே அறிந்து கொள்வேன்.
சில நபர்கள் வரும்பொழுது மிக எளிதாகப் பாதி முடியை கட் செய்தால் போதும் என்று கூறிவிட்டு சென்று விடுவார்கள். அது போக ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் நான் வாங்கும் சம்பளத்திற்கு ஓய்வாக இருக்கிறேன், எவ்வளவு நேரம் வேலை பார்க்கிறேன் என்கிற தகவலையும் நோட்டில் குறிப்பதன் மூலம் நான் அறிந்து கொள்வேன். எனது முதலாளியும் என்னை முழுவதுமாக நம்பி இந்தக் கடையை ஒப்படைத்திருக்கிறார். அதற்கு சரியாக நடக்கவேண்டுமல்லவா?
14 வயது முதல் சவரத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றேன். இப்பொழுது எனக்கு வயது 34. எனது அனுபவத்தில் எனது பணியை நானே நேசிக் கின்றேன்.” என்று கூறி என்னை வியப்பில் ஆழ்த்தினார்.
நண்பர்களே, எத்தனையோ இடங்களுக்கு நாம் செல்கின்றோம். நம்முடைய பணியில் எவ்வளவு நேரம் வேலை பார்த்தோம் என்பதை சலூன் கடையில் பணியாற்றுபவர் குறித்து எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், புதிய அனுபவத்தையும் ஏற்படுத்தியது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள் வோம் என்கிற நோக்கில்தான் இந்தத் தகவலை இங்கே குறிப்பிடுகின்றேன்.

தனது முதலாளிக்கு நேர்மையானவராகவும், தனது மனசாட்சிக்கு நேர்மை யானவராகவும் செயல்பட வேண்டும் என்கிற நோக்கில் செயல்படும் சிதம் பரத்தின் செயல்பாடு பாராட்டுக்குரியது. அன்னாருக்கு வாழ்த்து தெரிவிக்க மொபைல் எண் : 99412 24289
-எம்.எஸ்.லெட்சுமணன்,