அமெரிக்கா – ரஷியா பகைக்கு பிற நாடுகள் பலியாகலாமா?
உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட கட்டங்கள்
அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் போர் மோதல் காலகாலமாக நடந்து வந்து கொண்டிருக்கிறது. சிரியாவில் தொடங்கி, வியட்நாமில் நடந்தது. இப்போது உக்ரைனில் எனத் தொடர்கிறது. இந்த நேரத்தில் இரண்டாம் உலகப்போருக்குக் காரணமான வியட்நாமில் நடந்த போரைப் பற்றிப் பார்ப்போம்.
வடக்கு வியட்நாமுக்கும், அமெரிக்காவின் ஆதரவைப் பெற்ற தெற்கு வியட் நாமுக்கும் இடையே 1955 முதல் 1975 வரை வியட்நாம் போர் நீடித்தது. வியட்நாம் போரில் 8,744,000 அமெரிக்க வீரர்கள் பங்கேற்றனர். இதில் சுமார் 58 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 13 லட்சம் போர் வீரர்களும், 10 லட்சம் பொது மக்களும் வியட்நாம் போரில் உயிரிழந்தனர்.
ஆஸ்திரேலியா, தென்கொரியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளும் இப் போரில் தெற்கு வியட்நாமுக்கு ஆதரவாக ராணுவத்தை அனுப்பின. இப் போரில் வடக்கு வியட்நாமுக்கு சோவியத் யூனியன் ஆதரவு அளித்தது. வியட்நாம் போரைக் கண்டித்து அமெரிக்காவிலேயே போராட்டங்கள் நடந்துள்ளன.
இப்போரில் வடக்கு வியட்நாம் படைகள் ஏகே 47 வகை துப்பாக்கி களையும், தெற்கு வியட்நாம் மற்றும் அமெரிக்கப் படைகள் எம்-16 ரைபிள் களையும் அதிகமாகப் பயன்படுத்தின.
1963-ம் ஆண்டில் வியட்நாம் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் கென்னடி விரும்பியுள்ளார். ஆனால் அதைச் செயல்படுத்துவதற்குள் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். நிக்சன் அமெரிக்க அதிபரான பிறகு, வியட்நாமிலிருந்து அமெரிக்கப் படைகள் பின்வாங்கின.
1975-ம் ஆண்டில் தெற்கு வியட்நாமின் தலைநகரான சாய்கானை வடக்கு வியட் நாம் வீரர்கள் கைப்பற்றினர். இதன்மூலம் இரண்டு நாடுகளையும் இணைத்தனர். இந்தப் போரில் அமெரிக்கா செய்த கொடுமைகள் அளப்பரி யன. தன்னை ஒரு வல்லரசாக, உலகப் பொலிஸாகக் காட்டிக்கொண்டு, இவர்கள் செய்த அநியாயங்களை நினைவுக்குக் கொண்டுவரும்போது, எமக்கு நெஞ்சு வலிக்கின்றது.
ஒருங்கிணைந்த வியட்நாம் ஒன்றே தீர்வு என மக்களின் மனதைத் தயார் செய்தார் புரட்சியாளர் ஹோ சி மின். (இவர் நினைவாகத்தான் பழைய தலைநகரமாகிய சாய்க்கோன், அயல்மாகாணமான ‘கியாடின்’ உடன் இணைக் கப்பட்டு, ஹோ சி மின் நகரம் எனப் பெயரிடப்பட்டது. மே1, 1975)
வியட்நாமுடன் சோவியத் ஒன்றியம், சீனா மற்றும் கம்யூனிஸ நாடுகள் இணைய, மேற்குலக நாடுகளுக்கு எதிராக முழு வியட்நாமும் போரிட் டது. இங்கேதான் அமெரிக்கா வெறித்தனமாகப் பல அட்டூழியங்களைச் செய்தது.
4 லட்சம் டன் எடை கொண்ட, நேபாம் என்ற கொத்துக் குண்டுகளை வானி லிருந்து வீசியது. காடுகளிலிருந்து வியட்நாம் வீரர்கள் கெரில்லா தாக்கு தல்கள் நடத்துவதை முறியடிக்க, காட்டு மரங்களின் இலைகளை உதிர்க்க திட்டம் தீட்டியது.
80 மில்லியன் லிட்டர் வேதி மருந்தை, வானிலிருந்து, காடு, வயல்வெளி கள் என்று எல்லா இடங்களிலும் தெளித்தார்கள். ஒரு கணக்கின்படி, வியட்நாமின் மொத்த நிலப்பரப்பில் 86 சதவிகித இடங்களில் இரண்டு முறைக்கு மேலும், 11 சதவிகித இடங்களில் பத்து முறைக்கு மேலும், ரசாயன மருந்தை தெளித் திருக்கிறார்கள் இந்தப் போர் வெறியர்கள்.
நீர், நிலம், காற்று, காடு, ஆகாயம் என்று அனைத்திலும் நஞ்சு கலக் கப்பட்டது. Agent Orange என்று அழைக்கப்பட்ட ரசாயன மருந்தின் தாக்கம், இன்றுவரை வியட்நாமியர்களைத் தொடர்வது, அநியாயத்தில் அநியா யம். வியட்நாமின் ஒரு சிறு தீவில் பல மில்லியன் லிட்டர் அளவில் கொட்டியிருக்கிறார்கள். இந்த நச்சுச் செறிவான ரசாயனக் கலவையை நாம் தெளிக்கவே இல்லை என்று இன்றுவரை அமெரிக்கா சொல்லிக் கொண்டிருக்கின்றது.
இந்தப் போர் 4 மில்லியன் வியட்நாமியர்களையும், 58,000 அமெரிக்கர் களின் உயிர்களையும் பலிவாங்கியுள்ளது.
இத்தனை அநியாயங்கள் செய்தும், வென்றது வியடநாம்தான். ஏகாபத்திய நாடுகளின் ஆதிக்கத்திற்கு முடிவுரை கட்டப்பட்டது இந்த ஹோ சி மின் நகரில்தான்! இரண்டாம் உலக மகாயுத்தத்தில் வியட்நாம் இத்தனை பெரிய அழிவைச் சந்தித்தபோதிலும், அமெரிக்காவைப் புறமுதுகிட்டு ஓடச் செய்த போர்த் திறமை இன்றும் பெரிதாகப் பேசப்படுகின்றது.
மேற்கத்தைய நாடுகளின் செல்லப் பிள்ளையாக மாறி, தெற்கு வியட்நா மின் பிரதமர் (Ngo Dinh Diem) மேற்குலக நாடுகளுடன் சேர்ந்து கொண்டார் என்பது இன்னொரு வேடிக்கையான தகவல். கம்யூனிஸத்தை வெறுத்த தெற்கு வியட்நாமியர்களும், மேற்குலக நாடுகளுடன் இணைந்து கொண் டார்கள்.
1954இல் ஜெனிவா மாநாட்டின் மூலம், வடக்கு வியட்நாம், தெற்கு வியட் நாமென நாடு கூறுபோடப்பட்டது. இடதுசாரி ஆதரவாளர்களும் எதிர்ப் பாளர்களும் தங்களுக்குள் சண்டையிட்டு, உள்நாட்டு கலவரங்கள் வெடித் ததால் தான், ஜெனீவா இந்த முடிவை எடுத்தது.