ஆர்.ஆர்.ஆர். திரை விமர்சனம்
‘பாகுபலி’ என்கிற பிரம்மாண்ட வெற்றிப் படைப்பை தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் ஆர்.ஆர்.ஆர் (இரத்தம் ரணம் ரௌத்திரம்). ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நாயகர்களாக நடித்த இந்தப் படத்தில் ஆலியா பட் நாயகியாக நடித்திருக்கிறார். கீரவாணி இசையமைத்திருக் கிறார்.
1920-களில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய இரண்டு வீரர்களின் வாழ்க்கை கதையை முழுக்க முழுக்க தனது கற்பனையால் சுவாரஸ்யம் கலந்து பிரம்மாண்டமாக நம் கண்களுக்கு விருந்தளித்திருக்கிறார் இயக்கு நர் ராஜமௌலி.
‘அல்லுரி சீதாராம ராஜு’ கதாபாத்திரத்தில் ராம்சரணும் ‘கொமரம் பீம்’ கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் போட்டிப் போட்டு நடித்து ரசிகர் களைப் பரவசப் படுத்தியுள்ளனர்.
முதல் பாதி முழுக்க ஜூனியர் என்.டி.ஆர். கதாபாத்திரத்திற்கு முக்கியத் துவம் கொடுத்தும் இரண்டாம் பாதி முழுக்க ராம்சரண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தும் இரண்டு தரப்பு ரசிகர்களையும் திருப்திப் படுத்தும் வகையில் டபுள் மாஸாக காட்சிகளை தந்திருக்கிறார் இயக்குநர் ராஜமௌலி.
இரண்டாம் பாதி பிளாஷ்பேக் காட்சியில் வரும் அஜய் தேவ்கனும் தனது கதா பாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார்.
நாயகி ஆலியா பட், சமுத்திரக்கனி, ஸ்ரேயா போன்றோரின் கதாபாத்திரங் கள் யாவும் முக்கியத்துவம் இன்றி மற்ற கதாபாத்திரங்களைப் போலவே காட்சி ஓட்டத்திற்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளனர்.
சிலிர்க்க வைக்கும் ஆக்சன் காட்சிகள், பட்டையை கிளப்பும் பாடல்கள், பரவசமூட்டும் நடன காட்சிகள், விறுவிறுப் பான திரைக்கதை என ஆரம்பம் முதல் இறுதி வரை துளிகூட சலிப்பு ஏற்படுத்தாத வகையில் ஒரு அட்ட காசமான படைப்பைத் தந்திருக்கிறார் இயக்குநர்.
‘பாகுபலி’ போலவே இந்தப் படத்திலும் ஆக்சன் காட்சிகள் நம்பகத் தன்மைக்கு அப்பாற்பட்டதை போல இருந்தாலும் லாஜிக் மறந்து நாம் ரசிக் கும் வகையில் ஸ்டண்ட் கலைஞர்கள் அனைவரும் அருமையான பங்களிப்பை தந்துள்ளனர்.
படத்தில் இடம்பெற்ற செட் அமைப்புகள், உபயோகிக்கப்பட்ட வாகனங்கள், வெளி நா ட்டு துணை நடிகர்கள் போன்ற விஷயங்கள் அனைத்தும் சிறப்பாக அமையப் பெற்று பீரியட் பிலிம் பார்க்கும் உணர்வை நமக்குத் தருகிறது.
இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் மற்றும் இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோரின் உழைப்பு அளப்பரியது. அந்தளவுக்கு ஒவ்வொரு காட்சியையும் அருமையாக மெருகேற்றி இவர்கள் மீண்டுமொரு முறை திரையில் முத்திரை பதித்துள்ளார்கள்.
இந்த ஆண்டின் சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களின் வரிசையில் கண்டிப் பாக ஒரு இடமுண்டு.
10 நொடிகள் கூட பொறுமை இல்லாமல் வேகமாக சுழலும் இன்றைய தலைமுறையினரை கிட்டத்தட்ட 3 மணிநேரம் திரையரங்கின் இருக்கை யில் கட்டிப் போட்டு அவர்களை ரசிக்க வைத்து ஒரு மாயவித்தையை திரையில் காட்டியிருக் கிறார் இயக்குநர் ராஜமௌலி.
மொத்தத்தில் ஆர்.ஆர்.ஆர் (RRR) இயக்குநர் ராஜமௌலி அவர்களின் மற்று மொரு வெற்றிப் படைப்பு.