ஆரஞ்சு தோலில் வைட்டமின் சி

 ஆரஞ்சு தோலில் வைட்டமின் சி

பெண்களுக்கு முகத்தில் ஆங்காங்கு சிறு சிறு உரோமங்கள் வளர்வது இயற்கையான ஒன்று தான். குறிப்பாக கன்னங்கள், உதட்டின் மேல் புறம் மற்றும் நெற்றிக்களில் அதிகம் முடி வளரும். முகத்தில் உள்ள ரோமங்கள் அதிக அளவில் வெளியில் தெரிவதால், இதை நீக்குவதற்காக சிலர் செயற்கையான கிரீம்களை வாங்கி உபயோகிப்பார்கள்.

ஆனால், அவை முழுமையான தீர்வை நமக்கு தராது. ஆங்காங்கு முடி மீண்டும் வளர தொடங்கும். எனவே இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி முகத்தில் உள்ள முடிகளை நீக்குவது என்பது குறித்து சில இயற்கையான ப்ளீச்சிங் முறைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

ஆரஞ்சு தோல்.

நன்மைகள் :

ஆரஞ்சு தோலில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது.

இதை நமது முகத்தில் உபயோகிக்கும் பொழுது முகத்திலுள்ள அழுக்குகள் நீங்க உதவுவதுடன், முகத்திலுள்ள உரோமங்களை அகற்றவும் இது உதவும்.

உபயோகிக்கும் முறை :

ஆரஞ்சு பழத்தின் தோலை வெயிலில் உலர வைத்து எடுத்து கொள்ளவும். பின் இதனை பொடி செய்து, பாலில் கலந்து முகத்தில் தடவ வேண்டும்.

இடைப்பட்ட காலம் :

இதனை வாரத்திற்கு இரண்டு முறை உபயோகிக்கலாம்.

எலுமிச்சை சாறு.

நன்மைகள் :

எலுமிச்சை சாறு முகத்தி ப்ளீச் செய்ய பெரிதும் உதவுகிறது. இதை அடிக்கடி முகத்தில் தடவி வரும் பொழுது முகத்திலுள்ள உரோமங்களின் கருப்பு நிறத்தை மங்கச் செய்யும்.

உபயோகிக்கும் முறை :

இரவு நேரம் தூங்க செல்வதற்கு முன்பு இந்த எலுமிச்சை சாற்றை முகத்தில் தடவி விடவும்.

இடைப்பட்ட காலம்:

இதை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை உபயோகிக்கலாம்.

கடலை மாவு.

நன்மைகள் :

கடலை மாவு பொலிவிழந்த சருமத்தை பொலிவாக்க உதவுவதுடன், முகத்திலுள்ள உரோமங்கள் மற்றும் பருக்களை நீக்கவும் உதவுகிறது.

உபயோகிக்கும் முறை :

கடலை மாவுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து, ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்தில் தடவ வேண்டும்.

இடைப்பட்ட காலம் :

இதை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முகத்தில் பயன்படுத்தலாம்.

தயிர்.

நன்மைகள் :

தயிரை முகத்தில் உபயோகிப்பதன் மூலமாக முகம் பிரகாசமாக மாற உதவுகிறது, மேலும் முகத்திலுள்ள உரோமங்களை நீக்கவும் இது உதவுகிறது.

உபயோகிக்கும் முறை :

கையில் சிறிதளவு தயிரை எடுத்து முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின் சில நிமிடங்கள் ஊற வைத்து கழுவி விட வேண்டும்.

இடைப்பட்ட காலம் :

இதை தினமும் காலையில் எழுந்ததும் உபயோகிக்கலாம்.

உருளைக்கிழங்கு.

நன்மைகள் :

உருளைக்கிழங்கு சாற்றை முகத்தில் தடவி வரும் பொழுது முகத்திலுள்ள உரோமங்கள் நாளடைவில் உதிர ஆரம்பிக்கும்.

உபயோகிக்கும் முறை :

உருளைக்கிழங்கை சாறு எடுத்து அதனுடன் தக்காளி சாற்றை கலந்து முகத்தில் தடவி விட வேண்டும்.

இடைப்பட்ட காலம் :

இதை வாரம் இரண்டு முறை முகத்தில் பயன்படுத்தலாம்.

பப்பாளி

நன்மைகள் :

பப்பாளி சாறை முகத்தில் பயன்படுத்தும் பொழுது முகத்திலுள்ள அழுக்குகள் நீங்கி முகம் பிரகாசமடைய உதவுகிறது. மேலும், முகத்திலுள்ள உரோமங்கள் நீங்கவும் இது உதவுகிறது.

உபயோகிக்கும் முறை :

பப்பாளி சாற்றை பாலுடன் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து விட்டு, சிறிது நேரம் உலர விட வேண்டும்.

இடைப்பட்ட காலம் :
இதை தினமும் கூட முகத்தில் பயன்படுத்தலாம்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...