வாகினி – 5 | மோ. ரவிந்தர்

 வாகினி – 5 | மோ. ரவிந்தர்

கும்பகோணத்தில் வசிக்கும் தனது அண்ணன் ஜீவரத்தினத்தின் ஒரு மகளான தாமரையை, தனது மகன் கபிலனுக்கு எப்படியாவது திருமணம் முடித்துவிடவேண்டும் என்று இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறாள், ரேகா.

கணவர் இறந்து பதிமூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, தமிழ் ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டு இருந்த இவள், சென்ற வருடம் தான் பணியிலிருந்து முழுஓய்வு பெற்றாள். கணவர் இல்லை என்றாலும், தனது உற்றார் உறவினர்கள் துணையின்றித் தனது மகனை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வந்து விட்டாள்.

தன் மகனுக்குத் திருமணமானால் அவன் வாழ்வதற்கு ஏற்றார்போல், மாடி வீடு ஒன்றை, பார்த்து பார்த்து கட்டிக்கொண்டிருக்கிறாள்.

முதல் தளம் முடிவடைந்து, இரண்டாவது தளம் வேலை ஏறுவதற்கு இரண்டு வேலை ஆட்களை வைத்துக் கொம்பினால் சாரம் அமைத்துக்கொண்டிருந்தனர். புதிதாகக் கட்டிக்கொண்டிருந்த வீடு, சுட்ட செங்களினாலும் சிமெண்டாலும் அலங்காரமாகக் காணப்பட்டது. அந்தக் கட்டிடத்தின் எதிரிலேயே மணல் குவியல் குவியலாகக் கொட்டி வைக்கப்பட்டிருந்தது.

மறுபுறம், சிமெண்ட் மூட்டைகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு இடமே பெறும் சகதியாகக் காணப்பட்டது.

அதையேல்லம் சுத்தம் செய்வதற்காக, ரேகா கையில் துடப்பத்தை வைத்துக்கொண்டு கீழே விழுந்து கிடந்த சணல் கயிரை எல்லாம் கையால் எடுத்துக்கொண்டிருந்தாள்.

இவள் மகன் கபிலனோ, பட்டப்படிப்பை முடித்துவிட்டு தாயை போலவே ஆசிரியர் வேலைக்காக ஒரு வாருடமாகக் காத்துக் கொண்டிருக்கிறான். தான் ஒரு ஆண்மகனாக இருந்தாலும், இவனையும் காதல் என்ற வியாதி தொற்றிக் கொள்ளாமல் இருக்குமா?.

அனுபவம் கற்றுத்தரும் பாடத்தை விட எந்தக் கொம்பனாலும் ஒரு பாடத்தைக் கற்று தர முடியாது, இப்படிப்பட்ட பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால். அதற்கு முன் காதலில் என்னும் பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லவா !.

அதற்காகவே, கபிலன் கண்ணாடி முன் நின்று தனது முகத்திற்குப் பவுடர் அடித்து, முடியை திருத்தி இரண்டொரு முறை அழகாக்கி கலைத்து விட்டுக் கொண்டிருந்தான்.

அந்தக் கண்ணாடி முன் காதல் மொழியைப் பேசவும் செய்தான்.

‘ஏய்… கண்ணாடியே, என்னைப் பார்த்து எதற்காக இப்படிச் சிரிக்கிறாய்? இந்த வீட்டிற்குள் ஒரு புது வசந்தம் ஒன்று வரப்போகிறது. அவள், என் வசந்தத்தின் வாசல். இந்த உலகின் புதிய பேரழகி. என்ன, இதுவரை உலகம் பார்க்காதா பேரழிகிய என்பாய்?. ஆமாம்!, அப்பேர்ப்பட்ட பேரழகிதான் அவள்?, சொல்கிறேன் கேள்.’

இமயத்தில் விழும் பனித்துளி

அவள் முல்லைப்பற்களில் குடிக்கொள்ளத் தவம் செய்யும் !

வேட்டைக்குச் செல்லும் வேங்கையும்

அவளின் நடையைக் கண்டு மயங்கி விழும் !

அவள் கூந்தல் கூட ஒரு நைல் நதி போல் ஒரு பெறும் பயணம் செய்யும் !

தங்க தாமரை தடாகத்தில் பூத்த மலர் போல்,

அவள் விரலும் ஒரு கவி சொல்லும் !

குளிர்கால மேகங்கள் வான் நிலவுடன் போர்செய்து,

அவள் அங்க திருமேனிக்கு ஆடையாய் மாறி அழகு புரியும் !

பெறும் கவிஞரும் ஒரு கவிதை வடிக்கலாம்,

அவளின் அழகை கண்ட புதிய மொழி தெரிந்திருந்தால் !

ஏய் கண்ணாடியே !, இப்பேர்ப்பட்ட அழகியை காண்பதற்குத் தான், நான் இப்போது போய்க்கொண்டு இருக்கிறேன்.

நான் அங்குச் செல்லும் பொழுது எனக்குக் கொஞ்சமாவது அழகு வேண்டாமா?” என்று உன் அருகே நின்று என்னைச் சீர்படுத்திக் கொண்டிருக்கிறேன். என்று கண்ணாடியிடம் கூறிக்கொண்டே தன்னை அழகு படுத்திக் கொண்டிருந்தான், கபிலன்.

வெளியே அவனது தாய் ரேகா, அவனுக்காக ஒரு கனவு கண்டுக்கொண்டிருந்தாள்.

“என்ன பாண்டியா வேலைக்கு நீ சீக்கிரமா வந்துட்ட இன்னும், உன்னோட நண்பன காணும்” என்றாள்.

“ஆமா அக்கா, நேத்திக்கே வேலை அதிகம் இல்லையா? அதன் தூங்கிட்டு இருப்பான். நான் இங்கவரும் போது அவங்க அம்மாகிட்டையே சொல்லிட்டுதான் வந்தேன். அவன எழுப்ப சொல்லி, எப்ப வரான்னு தெரியலே…?” என்று சோக கீதம் படினான் பாண்டியன்.

“குடிக்க மோர் கொண்டு வரட்டுமா பாண்டியன்”

“மாயாண்டிக்கும் எனக்கும் சேர்த்து எடுத்துட்டு வாக்கா.” என்று சாரம் அமைத்துக் கொண்டே கூறினான் பாண்டியன்.

அவனுக்குப் பக்கத்திலேயே மாயாண்டி சாரம் கட்டிக்கொண்டிருந்தான்.

ரேகா, கையில் வைத்திருந்த துடப்பத்தைக் கீழே போட்டுவிட்டு இருவருக்கும் மோர் எடுத்துவர வீட்டிற்குள் சென்றாள்.

அங்கு அவள் மகன் கண்ணாடி முன் நின்று சிரித்துக்கொண்டிருப்பாதை கண்டு.

“என்னடா, காலையிலேயே கண்ணாடி கண்ணாடி முன்னாடி நின்னுட்டு பல்ல காட்டி சிரிச்சிட்டு இருக்க?”

உடனே அவன் யார் என்று திரும்பி பார்த்தான் கபிலன்.

“அது ஒன்றுமில்லம்மா.. பட்டாபிராம்ல வேலை ஒன்று இருக்குன்னு என்னோட பிரண்டு சொன்னான், அதான் கிளம்பிட்டு இருக்கம்மா”

“ஆமா… எப்ப பார்த்தாலும் அந்தப் பட்டாபிராமலேயே சுத்திக்கிட்டு இருக்கன்னு எல்லாரும் சொல்லிட்டு இருக்காங்களே, என்ன விஷயம்?”

அவனது முகம் சற்று மாறியது.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல, உனக்கு யாரும்மா சொன்னது” என்றான்.

“யாரு சொன்ன என்ன, இது உண்மையா பொய்யா?

“உண்மையும் இல்லை, பொய்யும் இல்லை, நான் வேலை விஷயமா வெளியே போறேன் காசு இருந்த கொடு” என்று தன்னைச் சுதாரித்துக் கொண்டான்.

“இங்க பாருடா, உனக்காகத் தேவையானது எல்லாமே இங்கேயே இருக்கு, அத விட்டுட்டு புதுசா ஒன்ன செஞ்சேன்னு வச்சிக்க, இந்த வீட்டிற்க்கு நீ வாரிசாவே இருக்கமாட்ட பாத்துக்க” என்று கூறிக்கொண்டு, இடுப்புப் பையில் இருந்து இரண்டு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் கொடுத்தாள், ரேகா.

“ஏம்மா, அடுத்தவங்க ஏதாவது சொன்னா அதை அப்படியே விடுவியா” என்று கூறிவிட்டு.

“எனக்கு நேரமாகுது நான் கிளம்புறேன்” என்று வெளியே இருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தான், கபிலன்.

ரேகா, அவனையே திரும்பிப் பார்த்துக் கொண்டே வெளியே வேலை செய்து கொண்டிருந்த இருவருக்கும் சமையலறையிலிருந்து மோர் எடுத்து வந்தாள்.

“என்னப்பா, பாண்டியா இன்னும் கோதண்டனை காணலையே அவன் இன்னுமா தூங்கிட்டு இருப்பான்.”

“தெரியல அக்கா…?” என்றான், பாண்டியன்.

இவர்கள் இருவரும், பேசிக் கொண்டிருந்த நேரத்தில் கோதண்டன் அவனின் வீட்டு வாசலிலிருந்து கயிற்றுக்கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான்.

அவனின் அம்மா பர்வதம்மா, அவனை எழுப்புவதற்காகப் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தார்.

“டேய் கோதண்டா, பாண்டியன் வேலைக்கு வரச்சொல்லிட்டுப் போனான், சீக்கிரம் எழுந்து போடா” என்று கூறிக்கொண்டே வாசலில் இருந்த சமையல் பாத்திரத்தை சுத்தம் செய்து வீட்டிற்குள் எடுத்து சென்று கொண்டிருந்தாள், பர்வதம்மா.

அவன் விழிப்பதாகத் தெரியவில்லை? புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான், அப்போது, ஆகாய மேகங்களும் ஆண்டுப் பல தவம் செய்யும் மரம், செடிகள் எல்லாம் பின்னால் செல்ல.

ஆயிரம் மனிதர்களைப் சுமந்து செல்லும் ரயில் வண்டி பெறும் சத்தத்துடன் ஆவடி பாதையில் வந்து கொண்டிருந்தது. வண்டியின் சத்தம் அந்தக் குடியிருப்புப் பகுதியில் பெரிதாக ஒலிக்கத் தொடங்கியது.

இந்தப் பெறும் சத்தத்தைக் கேட்ட கோதண்டனுக்குச் சற்று விழிப்பு வந்தது. அவன், எழுந்து அரைத் தூக்கத்துடன் மேலே பார்த்தான். சூரியன், சுட்டெரித்துக் கொண்டிருந்தது.

கோதண்டராமன் மூளையில் தென்பட்டது இந்த நேரம் 10 மணி இருக்கும் என்று.

அடடா ரொம்ப நேரமா தூங்கிட்டேன்னு தெரியுது, பாண்டியன் வேற எனக்காகக் காத்துட்டு இருப்பானே. நான் சீக்கிரமா கிளம்பி ஆகணும், இல்லைன்னு வச்சுக்க இன்னையோட என்னோட ஜோலிய முடிச்சிடுவான் பாவிப் பையா” என்று நினைத்துக் கொண்டே வாசல் முன்பகுதியில் வாளியில் தண்ணீரை எடுத்து அவசர அவசரமாக முகத்தைப் கழுவிக்கொண்டு.

“யம்மா…காபி கொடும்மா” என்று வீட்டிற்குள் குரல் கொடுத்தான், கோதண்டன்.

உள்ளே இருந்த பர்வதம்மா குரல் கொடுத்தாள்.

“ஏன்டா கோதண்டா கட்டிலுக்குப் பக்கத்திலேயே காபி வச்சி ரொம்ப நேரத்திற்கு மேல ஆகுது, அத எடுத்து குடி”

தாய் கூறியதைப் போல், கட்டிலின் பக்கத்தில் காப்பிச் சூடு இல்லாமல் ஆடிக்கொண்டிருந்தது. அதை எடுத்து அவசர அவசரமாகக் குடித்துமுடித்து ரேகா வீட்டிற்கு நடையைக் கட்டினான், கோதண்டன்.

அங்கு இவனை இருவரும் ஆவலுடன் எதிர் பார்த்துக் காத்து கிடந்தனர்.

இவர்களுக்கு, இவனை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருப்பதற்கு ஒரே ஒரு காரணம் தான். கோதண்டன் என்னதான் ஒரு பெரும் குடிக்காரனாக இருந்தாலும் வேலை என்று வந்துவிட்டால். செய்யும் வேலையைச் சிந்தாமல் சிதராமல் வேகமாகச் செய்யக் கூடியவன்.

இதனாலேயே, பாண்டியனும் கோதண்டம் பல காலமாக நல்ல நண்பர்களாகப் பழகி வருகிறார்கள்.

“வாடா சாமியாரே…., என்னடா நைட் ரொம்பத் தூக்கமா ?”

“ஆமாண்டா !”

“நைட் எல்லாம் அந்த ஒன்பதாவது நம்பர் கடையிலேயே இருந்தான்னு தெரியுது?”

“அதெல்லாம் ஒன்னுமில்லடா, நேத்தி வேலை அதிக இல்லையா அதான் கொஞ்சம் அசதியில் தூங்கிட்டேன்…” என்றான்.

“நான் என்ன சொன்னாலும் நீ கேட்கவா போற, சரி போய் வேலைய பாரு” என்றான், பாண்டியன்.

சரி என்று எண்ணிக்கொண்டு தன் வேலையைச் செய்வதற்காகக் கீழே இருந்த சணல் கயிரை எல்லாம் எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு சாரம் அமைப்பதற்காகக் கட்டிடத்தின் மேலே ஏறிக் கொண்டிருந்தான், கோதண்டன்.

< நான்காவது பகுதி | ஆறாவது பகுதி >

கமலகண்ணன்

18 Comments

 • Super bro story very very interesting keep it up god bless you

 • வேட்டைக்கு இமயத்தில் விழும் பனித்துளி

  அவள் முல்லைப்பற்களில் குடிக்கொள்ளத் தவம் செய்யும் !

  வேட்டைக்குச் செல்லும் வேங்கையும்

  அவளின் நடையைக் கண்டு மயங்கி விழும் !

  அவள் கூந்தல் கூட ஒரு நைல் நதி போல் ஒரு பெறும் பயணம் செய்யும் !

  தங்க தாமரை தடாகத்தில் பூத்த மலர் போல்,

  அவள் விரலும் ஒரு கவி சொல்லும் !

  குளிர்கால மேகங்கள் வான் நிலவுடன் போர்செய்து,

  அவள் அங்க திருமேனிக்கு ஆடையாய் மாறி அழகு புரியும் !
  கவிதை வரிகள் அருமை…

 • Very interesting. Keep doing. All the best

 • நன்றி

 • Nice story bro vazhka pallandu

 • சிறப்பு நண்பா…கதை நன்றாக நகர்கிறது….வாகினி வெற்றி நடை போடுவாள்.

 • Super

 • அருமையான வாழ்க்கை

 • arumai

 • நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...