வாகினி – 3 | மோ. ரவிந்தர்

 வாகினி – 3 | மோ. ரவிந்தர்

ல வருடங்களாக வீடு திறக்கப்படாமல் இருந்ததால்,

வீட்டிற்குள் வவ்வால், சிலந்தி எனப் பல்வேறு பச்சிகள் அந்த வீட்டுக்குச் சொந்தம் கொண்டாடின. இவள் திடீரென்று உள்ளே வர அவை அனைத்தும் அலறியடித்துக்கொண்டு வெளியே பறந்து ஓடின.

 

வீடு முழுவதும் சிலந்தி கட்டிய உமிழ் நூலால் ஆன சிலந்தி வலையில் கைதியாகி இருந்தது, பிற்பகல் வேளை என்பதால் உடைந்த கூரையின் வாழியாக வெளிச்சம் திட்டுத்திட்டாக வீட்டுக்குள் விழுந்து கொண்டிருந்தது. வாகினி, சிலந்தி கட்டியிருந்த வலையை எல்லாம் தனது கையினாலேயே விலக்கிக்கொண்டே அந்த வீட்டிற்குள் எதையோ தேடி முன்னேறினாள்.

அவள் கண்ணில் தென்பட்டதெல்லாம் பழைய துணிமணிகளும், பழைய பண்ட பாத்திரங்கள் மட்டுமே.

‘அன்றைய தினத்தில் என்தாய் இறந்து அலங்கோலம் கண்ட வீடு இன்றும் அதன் வாசத்தை மறக்காமல் அப்படியே இருக்கிறது’ என்று நினைத்துக் கொண்டு.

வீட்டின் சுற்றும் முற்றும் தேடி பார்த்தாள், பெரிதாக எதுவும் அவள் கண்ணுக்குத் தென்படவில்லை, அவளுடைய தாய் கஸ்தூரி கடைசி நிமிடம் வரை தன் மடியில் வைத்து அரவணித்த இரும்பு கட்டில் மட்டும் தென்பட்டது. அதன் மீது சில துணிமணிகளும் சிதறிக் கிடந்தது. அந்தக் கட்டிலை ஒட்டியே இருந்த ஜன்னல் ஓரத்தில், மண்ணெண்ணெய் விளக்கு ஒன்று கிழே விழுந்து கிடைந்தது.

அதன் அருகில் அவள் நீண்ட நேரமாகத் தேடிய, அந்த ஒரு பொருள் அவளுடைய கண்களுக்குத் தென்பட்டது. அவள் அதைக் கண்டால் மனதில் ஒரு வேதனை, காலம் தந்த காயம், கடவுள் தந்த வரம், கண் இமையின் வழியாகச் சிறு துளிகளாகக் கண்ணீர் வெளியேறியது.

அந்த டைரி இருந்த இடத்திற்குச் சென்று வேகமாகச் சென்றாள்.

நரகத்தின் வாசல் அவளை அழைத்தது, நெருப்பைக் கையில் எடுப்பதைப்போல் தனது இரு கரங்களால் தொட்டு அந்த டைரியை எடுத்தாள், அந்த ஒரு நொடி அவளைத் தீயாய் சுட்டது. அந்த டைரியின் அடர்த்தி அவளின் காயத்தை மேலும் மேலும் அதிகரித்தது, நீண்டகாலமாக ஒரே இடத்தில் இருந்த டைரி மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது. இருந்தும், அதை எடுத்து தனது மார்போடு அனைத்து பெரும் கண்ணீரோடு முத்தமிட்டாள்.

ஏதோ பெரும் கனத்துடன் அதைப் பிரித்துப் பார்த்தாள். தன்னையறியாமல் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாகப் பெருக்கெடுத்து ஓடியது, வினாடி நேரத்தில் நிலைக்குழந்த சிலையாக மாறினாள், வாகினி.

‘அம்மா. அம்மா.. என் கையாளயா உனக்கு இந்தப் பெரும் தண்டனை?, உலகத்துல செய்யாத தப்பாமா நீ பெருசா செஞ்சிட்டே, மனித மிருகங்களுக்கு இறையாக மாறிவிட்டாய் அவ்வளவுதானே.

அம்மா… இது ஒன்றும் பாவம் அல்ல, கடவுள் படைத்த அனைத்தும் பொதுவென்று கூறிவிட்டு, கண்ணில் படாமல் பதுக்கி வாழும் மனிதர்கள் மத்தியில் வறுமையில் பிறந்தது நம் குற்றமா?. இந்த வறுமையை ஏழைகள் மீது திணித்தது யார் குற்றம்?, இது மனிதனின் குற்றமா இல்லை கடவுளின் குற்றமா?. சில வக்ர புத்திக் கொண்ட ஆண்கள் செய்யும் தவறுக்குத் தண்டனை கொடுப்பது யார்?. உன்னை வாங்க உன் வறுமையைப் பயன்படுத்திக்கொண்டனர் அந்தப் பாவிகள்?.

அவர்களுக்கு யார் தண்டனை கொடுப்பது? உன்னைப் பாவத்தில் தள்ளிவிட்டு, அந்த மனித மிருகங்கள் தப்பித்துக் கொண்டன. உன்னை ஆசைக்காட்டி வேசி என்று பெயர் வைத்த மிருகங்கள் இப்போது எங்கே?

நீ மட்டும் அன்று உன் ஆசையை நிறுத்தியிருந்தால் நாங்கள் இன்று நிர்கதியாய் நின்றிருபோமா? அனாதை என்ற பட்டமும் தான் எங்களுக்குக் கிடைத்திருக்குமா?’ என்று சோகம் மிச்சத்தையும் அந்த டைரியில் கண்ணீராய் சிந்திக் கொண்டிருந்தாள், வாகினி.

அந்த நேரம், வீட்டுக்குள் வந்த ஊர் மக்களின் கூட்டம் வாகினியை பார்வையினாலேயே தொலைத்தது. பெண் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் இருந்தவள் என்றாலும், வாகினி சிறைக்குச் சென்றவள் என்ற பார்வையினாலே பார்த்தனர் சிலர்.

தாய் தகப்பனை இழந்தவள் என்ற பரிதாப பார்வையும், இரண்டு பிள்ளைகளையும் ஏற்றுக்கொண்டு இனி இந்த உலகில் எப்படி வாழப் போகிறாலோ என்ற பார்வையும், சிலரது பார்வையும் இருந்தது.

ஆனாலும், அவர்களின் உள்ளங்கள் மட்டும் வாகினியை அன்புடன் வரவேற்றது.

“யாரோ ஒரு பொண்ணு வனிதா வீட்டு வாசற்கதவ ஒடைக்கிறாங்கன்னு இந்தப் பசங்க வந்து சொன்னாங்க, நீதானம்மா” என்றாள், ஒருத்தி.

“நீங்க எல்லாம் இப்படியே குடி இருந்தா எப்படி? எல்லாரும் பிள்ளைக்குக் கொஞ்சம் காத்த விடுங்கம்மா…” என்று இன்னொருவர் குரல் கொடுத்தார்.

“இந்த ஊர்மக்கள் எல்லோரும் உனக்காகத் தாம்மா ஒன்னு சேர்ந்து நாம்ம குல தெய்வ சாமிக்கு பொங்க வச்சி போட்டுட்டு வந்தோம்.” என்று கூறிக்கொண்டே வாகினியின் நெற்றியில் விபூதியை வைத்தாள், பெயர் தெரியாத இன்னொருத்தி.

நெடுநாள் பிறகு இந்த மனிதர்களின் பாசம் அவளை அரவணைத்தது. அங்கே கூடியிருந்த மக்களில் நரை விழுந்த ஒரு கிழவி வாகினியின் முன்வந்து குரல் கொடுத்தாள்.

“அம்மா, நீ எதையும் இனிமே யோசிக்காத இறைவன் கொடுத்த வரம் அது, நீயா ஒதிங்கி இருந்தாலும் அது உன்னைச் சும்மா விட்டு இருக்காது, இன்னையோட எல்லாம் தொல்லையும் ஒழியட்டும். சொல்லப்போனா நீ உங்கம்மாவுக்கு நல்லது தான் செஞ்சிருக்க. அவ போய்ச் சேர்ந்துட்டா இனிமே இத பத்தி எதையும் நினைக்காம.

அதோ… அழுதுட்டு நிக்கிற உன்னோட தம்பி, தங்கைய பாரு… அவங்க வாழ்க்கையைப் பத்தி கொஞ்சம் யோசி” என்று தம்பி தங்கை இருவரையும் சுட்டிக்காட்டினார், மூதாட்டி.

அப்போதுதான் தம்பி, தங்கையின் நினைவு வாகினிக்கு வந்தது.

உடனே தனது கண்ணீரை எல்லாம் துடைத்துக்கொண்டு, அந்தக் கூட்டத்தை எல்லாம் பார்வையினாலே விலக்கிவிட்டு அவர்கள் இருவரையும் தேடினாள், வாகினி.

ஒரு மூலையில் தம்பி பாபுவும், தங்கை வனிதாவும், வாகினியை பார்த்த இன்பத்தில் அழுதுக்கொண்டிருந்தனர்.

தங்கை வனிதா, குமரிபருவம் கொண்ட பெண்ணாகவும், பாபு பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு தேர்வின் முடிவுக்காகக் காத்திருந்தான். இருவரும் அழுவதைக் கண்ட ஊர் மக்கள் அனைவரும் வாகினி இருந்த இடத்திற்குப் போகுமாறு இருவரையும் வர்பூர்த்தினர்.

நாகரீகம் தோன்றிய பிறகு உலகத்தில் மனிதர்கள் பேசிய முதல் பொழியான மௌன மொழியை மூவரின் உதடுகள் பேசின.

தம்பி, தங்கை இருவரும் வாகினி வந்த மகிழ்ச்சியில் விம்மி விம்மி அழுதுக்கொண்டே வாகினியை கட்டி தழுவிக்கொண்டனர்.

இத்தனை வருடங்களாக இருவரையும் பிரிந்து வாழ்ந்த வாழ்க்கையை எண்ணி இருவர் மீது பாசத்தைக் கண்ணீரில் பொழிந்தாள். வனிதாவின் கண்ணத்தில் வழிந்த கண்ணீரும் தனது கண்ணீரோடு சேர்த்து உச்சிதனை முகந்தாள், வாகினி.

வாகினி, வீட்டுக்கு வந்த செய்தியைக் கேட்டு அவளின் தாய் கஸ்தூரியின் அம்மா பரவசம். வாகினியை பார்ப்பதற்காகக் கூன் விழுந்த உடலும், சிக்கு எடுக்காத நரைமுடி, கசக்கி கட்டதா உடையுடன், உடலில் வேர்வை சொட்ட சொட்ட வெளியேற கையில் கைக்கோலுடன் பேரன் பேத்திகள் இருந்த இடத்திற்குத் தள்ளாடித் தள்ளாடி வந்து தனது கைக்கோலை கீழே தவறவிட்டாள்.

“என்ன பெத்த ராசாத்தி, எங்க சுயநலத்துக்காக உன்னையும் உங்க ஆத்தாலையும் சீரழிச்சி அனாதயா நீக்க வச்ச பாவி என்னை மன்னித்துவிடு…” என்று கண்ணீருடன் வாகினி கால்களைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்தார்.

பாட்டி கீழே விழுந்ததைக் கண்டு, மூவரும் கண்ணீருடன் கைக்கொடுத்து தூக்கி எழுப்பினர். இத்தனை நிகழ்ச்சியும் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த வாகினியின் தாய்மாமன் கோதண்டனும், அவனின் மனைவி விமலாவும், மௌனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்கள் இருவரின் பக்கத்தில் இத்தனை காலமாக வனிதாவையும், பாபுவையும் பாதுகாத்து வளர்த்த அத்தை மரகதமும், ஆனந்த கண்ணீருடன் ஒரு ஓரத்தில் நின்று மூவரையும் ரசித்துக்கொண்டிருந்தாள்.

மூவரும், தாய் தந்தை பாசத்திற்காக ஏங்கியதால். பாசம் என்னும் படகில் கண்ணீர் என்னும் கடலில் மூழ்கிக் கொண்டு இருந்தனர்.

வாகினியின் கண்ணீர் துளிகள் இவருவரின் தோல் மீது விழுந்ததே தவிர, அவள் கண்கள் மட்டும் வீட்டில் இருந்த அந்தக் கட்டில் மீதும் கடந்து வந்த வாழ்க்கை மீதும் விழுந்து பயணிக்கத் தொடங்கின.

தொடரும்…

< இரண்டாவது பகுதி  | நான்காவது பகுதி>

கமலகண்ணன்

14 Comments

  • அருமை நண்பரே… வாழ்த்துக்கள்

    • மிக்க நன்றி ஐயா தங்களுடைய பாராட்டுக்களுக்கு

  • அருமையான கதை நகர்வு .

    • மிக்க நன்றி அம்மா தங்களுடைய பாராட்டுக்களுக்கு

    • நன்றிகள் பல அம்மா, கதையைத் தொடர்ந்து படியுங்கள் அடுத்தடுத்த அத்தியாயங்களில் புதிய புதிய திருப்பங்கள் காத்திருக்கிறது

  • Nice story next week waiting for 4th chapter good luck

  • Super keep it up,

  • நெகிழ்வாக உள்ளது நண்பரே ! பாசப் போராட்டம் தொடரட்டும்.

    • நண்பரே தங்கள் வேலையில் என்னுடைய கதையும் கவனிப்பதில் மிக்க நன்றி

  • Super congratulation👏👏👏

  • நண்பரே தங்கள் வேலையில் என்னுடைய கதையும் கவனிப்பதில் மிக்க நன்றி

  • பயணங்கள் முடிவதில்லை. தொடர்கிறது.

  • தொடர்ந்து படியுங்கள் தோழர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...