கீரையின் பயன்கள் !!!

 கீரையின் பயன்கள் !!!

நமக்கு ஒரு பொருள் மலிவாக கிடைத்தால் அதன் சிறப்புகள் பற்றி அதிகமாக கண்டு கொள்ள மாட்டோம்.

அப்படி நாம் உண்ணும் உணவில் பிடிக்காமல், அதிகமாக வீணாக கூடியது கீரை வகைகள் தான்.

பொதுவாக வெளியில் வாங்கும் கீரைகளில் பூச்சிக் கொல்லி உரங்கள் பயன்படுத்தப்படுவதால் அவற்றினால் நமது ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

இதனை தவிர்க்க நமது வீட்டிலேயே இயற்கையான முறையில் கீரைகளை வளர்க்கலாம்.

அப்படி வளர்க்கப்படும் ஆர்கானிக் கீரைகளின் நன்மைகள் பற்றி தெரியுமா?

நம் உணவில் முக்கியமாக சேர்க்க வேண்டிய கீரைகள் பற்றி பார்ப்போம்.

பசலைக் கீரை :
பொதுவாக இது கீரைகளின் அரசன் என அழைக்கப்படுகிறது.

இந்த கீரையை அடிக்கடி சாப்பிடுவதால் சிறுநீரகப் பிரச்சனைகள் வராது.

மேலும் புற்று நோயை தடுக்கும் குணமும் இந்த கீரைக்கு உண்டு.

முருங்கைக் கீரை:
உடல் சூடு, தலைவலி, தோல் சம்பந்தமான வியாதி, பார்வைக் குறைகளை நீக்கி உடலை பலப்படுத்தும்.

மாலைக் கண் நோயாளிகள் இந்த கீரையை சாப்பிட்டு வர விரைவில் நோய் குணமாகும்.

வல்லாரை கீரை :
மூளை வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது. ஞாபக சக்தியை அதிகரிக்கும். சட்னியாக அரைத்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் மூளைச் சோர்வை நீக்கி, ஞாபக மறதியைக் குணமாக்கும்.

புதினாக் கீரை :
இரத்தத்தை சுத்தம் செய்கிறது. சளி பிடிக்காது.

பசி எடுக்காதவர்கள் இந்த கீரையை சாப்பிட்டு வர நல்ல பசி எடுக்கும்.

மணத்தக்காளி கீரை :
வாய், வயிற்றுப்புண் சரியாகும். தேமல் இருப்பவர்கள் இந்த கீரை சாப்பிட்டால் தேமல் காணாமல் போய்விடும்.

வெந்தயக் கீரை :
மலச்சிக்கலை குணப்படுத்தும். மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

அகத்திக் கீரை :
இக்கீரையானது காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை கட்டுப்படுத்தும் இயல்புடையது.

குடல்புண், அரிப்பு, சொறி, சிரங்கு முதலிய தோல் நோய்களை குணப்படுத்தும்.

பொதுவாக இரவு உணவில் கீரைகளைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாம்.

ஏனெனில் கீரைகளில் அதிக நார்சத்து உள்ளதால் செரிமானம் அடைய நேரம் ஆகும்.

எனவே உடல் நலம் பெறவும், பல நோய்களில் இருந்து விடுபடவும் தினமும் உணவில் ஒரு கீரையை சேர்த்துக் கொள்ளுங்கள் !!!

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் அனைவரும் விவசாயத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...