ஊர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றி அரசாணை வெளியீடு

 ஊர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றி அரசாணை வெளியீடு

எழும்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட 1,018 ஊர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றி அரசாணை வெளியீடு

தமிழகத்தில் எழும்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட 1,018 ஊர்களின் ஆங்கிலப் பெயர்களை மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

எழும்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட 1,018 ஊர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றி அரசாணை வெளியீடுமாதிரிப் படம்

2018-2019 ஆம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் க.பாண்டியராஜன், “தமிழகத்தில் உள்ள ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பு போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்கும் வகையில் மாற்றம் செய்யப்படும் என்றும் அதனை செயல்படுத்த 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும்” என்று அறிவித்து இருந்தார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் பரிந்துரையின் அடிப்படையில், முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள 1,018 ஊர்களின் பெயர்களில் தமிழ் உச்சரிப்பில் இருந்து ஆங்கில உச்சரிப்பில் வேறுபாடு உடைய பெயர்களில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

உதாரணமாக, திருவல்லிக்கேணி என்பதை ஆங்கிலத்தில் “Triplicane” என்று உச்சரித்து வந்த நிலையில் இனி அதை “Thiruvallikkeni” என்று உச்ச்ரிக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை என்பதை “Tondiyarpet” என்பதில் இருந்து “Thandaiyaarpettai” என்று திருத்தப்பட்டு உள்ளது. வ.உ.சி நகர் – “V.O.C Nagar” என்பது “VA.OO.SI Nagar” ஆகவும், எழும்பூர் – “Egmore” என்பது “Ezhumboor” ஆகவும் மாற்றப்பட்டு உள்ளது.

இதேபோன்று சென்னையின் பல பகுதியின் பெயர்களும், கடலூர், சிவகங்கை, தர்மபுரி, திருவள்ளூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, திருப்பூர், தூத்துக்குடி, பெரம்பலூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், விருதுநகர், கரூர், விழுப்புரம், சேலம், வேலூர், திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 1,018 ஊர் பெயர்களிலும் திருத்தம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...