இன்றைய தினப்பலன்கள் (11.06.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (11.06.2020) –  ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

எதிர்காலம் சம்பந்தப்பட்ட பணிகளில் புதிய முயற்சிகளை செய்வீர்கள். மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைப்பதற்கான சூழல் ஏற்படும். பணியில் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட தடைகள் நீங்கும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : புத்துணர்ச்சி உண்டாகும்.
பரணி : உதவிகள் கிடைக்கும்.
கிருத்திகை : தடைகள் நீங்கும்.

ரிஷபம் :

உத்தியோகம் தொடர்பான புதிய வாய்ப்புகள் உண்டாகும். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களால் சுப விரயம் உண்டாகும். தொழில் முனைவோர்கள் வேலையாட்களுடன் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். மனதில் இனம் புரியாத கவலைகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.
ரோகிணி : அறிமுகம் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : கவலைகள் தோன்றும்.

மிதுனம் :
தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். மூத்த சகோதரியின் மூலம் சாதகமான சூழல் அமையும். விவசாயிகளுக்கும், தானியங்களை விற்பவர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களால் சேமிப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
திருவாதிரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.

கடகம் :

கடந்த கால நினைவுகள் மனதில் அதிகரிக்கும். கிடைக்கும் சிறு வாய்ப்புகளையும் தகுந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுப்பது நன்மையை பயக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டு கொண்டிருக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : நினைவுகள் அதிகரிக்கும்.
பூசம் : அனுபவம் மேம்படும்.
ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும்.

சிம்மம் :

நண்பர்களுடனான நட்பு நிலை மேலோங்கும். தந்தையின் ஆதரவால் சுப விரயம் ஏற்பட்டு தொழிலில் அபிவிருத்தி செய்வீர்கள். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உண்டாகும். மனை தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : அபிவிருத்தி ஏற்படும்.
பூரம் : தேடல் உண்டாகும்.
உத்திரம் : காரியங்கள் நிறைவேறும்.

கன்னி :

உத்தியோகத்தில் பொறுப்புகள் குறையும். சினம் கொண்ட பேச்சுக்களை தவிர்க்கவும். தேக ஆரோக்கியத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சொத்துக்கள் வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேம்படும். எதிர்காலம் சம்பந்தமான பணிகளை திட்டமிட்டு நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : பொறுப்புகள் குறையும்.
அஸ்தம் : பேச்சுக்களில் நிதானம் தேவை.
சித்திரை : திட்டம் நிறைவேறும்.

துலாம் :

எதிர்பார்த்த தனவரவுகளில் இருந்துவந்த காலதாமதம் அகலும். நீண்ட நாள் பிரச்சனைக்கு சுமூகமான தீர்வை காண முயற்சிப்பீர்கள். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
சித்திரை : காலதாமதம் அகலும்.
சுவாதி : மகிழ்ச்சியான நாள்.
விசாகம் : ஆதாயம் உண்டாகும்.

விருச்சிகம் :

வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கலின் மூலம் இலாபம் உண்டாகும். உறவினர்களிடத்தில் புரிதல் ஏற்படும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தேவையற்ற கோபத்தை குறைப்பது நன்மை அளிக்கும். செயல்பாடுகளின் தன்மை அறிந்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
விசாகம் : இலாபகரமான நாள்.
அனுஷம் : புரிதல் ஏற்படும்.
கேட்டை : ஆதாயம் உண்டாகும்.

தனுசு :

அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் நேரிடலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
மூலம் : ஆதரவு மேம்படும்.
பூராடம் : திருப்திகரமான நாள்.
உத்திராடம் : செலவுகள் நேரிடலாம்.

மகரம் :

உடன்பிறந்தவர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ப புதிய வாய்ப்புகள் உண்டாகும். எந்தவொரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : சுபமான நாள்.
திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அவிட்டம் : உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

கும்பம் :

தொழில் தொடர்பான மனக்குழப்பங்கள் குறையும். பொதுக்காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். மனை வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். மறைமுகப் போட்டிகள் விலகும். தொலைபேசி வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : குழப்பங்கள் குறையும்.
சதயம் : முயற்சிகள் கைகூடும்.
பூரட்டாதி : போட்டிகள் விலகும்.

மீனம் :

நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். பிறருக்கு உதவும்போது நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.
உத்திரட்டாதி : கவலைகள் குறையும்.
ரேவதி : அன்யோன்யம் அதிகரிக்கும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...