கீரை வாழ்க்கையின் நிறை

 கீரை வாழ்க்கையின் நிறை

40 வகை கீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும் :-

  • அகத்திக்கீரை – ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
  • காசினிக்கீரை – சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
  • சிறுபசலைக்கீரை – சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
  • பசலைக்கீரை – தசைகளை பலமடையச் செய்யும்
  • கொடிபசலைக்கீரை – வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
  • மஞ்சள் கரிசலை – கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
  • குப்பைகீரை – பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
  • அரைக்கீரை – ஆண்மையை பெருக்கும்.
  • புளியங்கீரை – சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
  • பிண்ணாருக்குகீரை – வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
  • பரட்டைக்கீரை – பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
  • பொன்னாங்கன்னி கீரை – உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
  • சுக்கா கீரை – ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
  • வெள்ளை கரிசலைக்கீரை – ரத்தசோகையை நீக்கும்.
  • முருங்கைக்கீரை – நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
  • வல்லாரை கீரை – மூளைக்கு பலம் தரும்.
  • முடக்கத்தான்கீரை – கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
  • புண்ணக்கீரை – சிரங்கும், சீதளமும் விலக்கும்.
  • புதினாக்கீரை – ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
  • நஞ்சுமுண்டான் கீரை – விஷம் முறிக்கும்.
  • தும்பைகீரை – அசதி, சோம்பல் நீக்கும்.
  • முரங்கைகீரை – சளி, இருமலை துளைத்தெரியும்.
  • முள்ளங்கிகீரை – நீரடைப்பு நீக்கும்.
  • பருப்புகீரை – பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
  • புளிச்சகீரை – கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
  • மணலிக்கீரை – வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
  • மணத்தக்காளி கீரை – வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
  • முளைக்கீரை – பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
  • சக்கரவர்த்தி கீரை – தாது விருத்தியாகும்.
  • வெந்தயக்கீரை – மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
  • தூதுவலை – ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
  • தவசிக்கீரை – இருமலை போக்கும்.
  • சாணக்கீரை – காயம் ஆற்றும்.
  • வெள்ளைக்கீரை – தாய்பாலை பெருக்கும்.
  • விழுதிக்கீரை – பசியைத்தூண்டும்.
  • கொடிகாசினிகீரை – பித்தம் தணிக்கும்.
  • துயிளிக்கீரை – வெள்ளை வெட்டை விலக்கும்.
  • துத்திக்கீரை – வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
  • காரகொட்டிக்கீரை – மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
  • மூக்கு தட்டைகீரை – சளியை அகற்றும்.
  • நருதாளிகீரை – ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...