10வது தேர்வு இப்போது சரியா?

 10வது தேர்வு இப்போது சரியா?

பத்தாவது தேர்வு இப்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜுன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை. கிட்டத்தட்ட மார்ச் மாதம் முதல் இப்பொழுது வரை அதிகமான 60 நாட்களுக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறோம்.

எல்லா குழந்தைகளும் பள்ளியை மறந்து, நிறைய விளையாட்டுகளிலும் பொழுதுபோக்கு அம்சங்களிலும் திரைப்படங்களிலும் மூழ்கி இருந்திருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் கோடை விடுமுறை என்பதில், தாத்தா வீட்டிற்கு அல்லது பாட்டி வீட்டிற்கு சென்று வருவது Vacation Leave என்று சொல்லக்கூடிய விடுமுறையும் அனுபவித்திருப்பார்கள்.

பிடித்த இடங்களுக்கு சென்று வந்திருப்பார்கள். ஊட்டி கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களையும் பார்த்து வந்திருப்பார்கள். ஆனால் இப்படி எதுவுமே இல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடக்கி போட்டது இந்த கொரானா வைரஸ்.

தற்பொழுது திடீரென நேரடியாக தேர்வு என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஆரம்ப காலகட்டத்தில் 100, 100, 200 பேர் பாதிப்பு என்ற அளவில் இருந்த பொழுதே தேர்வை வைத்துவிட்டு அவர்களை சுதந்திரமாக விட்டு இருக்கலாம். ஆனால் அப்போதெல்லாம் வைக்காமல் இப்பொழுது அதிகபட்சம் இருக்கும்பொழுது தேர்வு என்று அறிவித்திருப்பது, எந்த அளவுக்கு நியாயம் என்று தெரியவில்லை. ஆனால் இது மாணவ-மாணவிகளின் மத்தியில் கிட்டத்தட்ட மனச்சோர்வு ஏற்பட்டிருக்கிறது.

60 நாட்கள் வீட்டில் இருந்து தங்களது சக மாணவ-மாணவிகளை கூட முகம் பார்க்காமல் அலைபேசியில் பேசி ஏதோ சிறிது நேரம் கழித்து இருப்பார்கள். ஆசிரியர்கள் கூட சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கவில்லை. எல்லாம் ஆன்லைனில் பாடம் எடுத்துக் கொள்ளலாம் என்று செய்யப்படுகிறது. ஆனால் எப்பொழுதுமே புத்தகத்தை பார்த்து படித்து மனதில் பதிய வைக்கின்றன அளவிற்கு இணைய வழி கல்வி பலன் கொடுக்குமா என்று நிச்சயம் தெரியவில்லை.

என்ன இருந்தாலும் நேரடியாக ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களையும் மாணவிகளையும் கண்ணோடு கண் நோக்கி சொல்லித்தரும் பாடம் மனதில் பதிவது போல, இணையதளம் வழியாக பாடம் நடத்துவது பதியுமா என்று சந்தேகம்தான். அதனால் கல்வித்துறை இப்பொழுது என்ன செய்யப் போகிறது என்று மாணவர்களும் மாணவிகளும் ஒரு தடுமாற்றமான காலகட்டம்.

தற்பொழுது உடனடியாக தேர்வு என்று அறிவிக்கப்பட்டதால் நேரடியாக தேர்வுக்கு சென்று எழுத முடியுமா? 60 நாட்கள் வீட்டிலேயே தொலைத்துவிட்ட பள்ளியின் தொடர்பு சற்றும் தற்பொழுது இருக்காது.

இதற்கு என்ன தீர்வு?

ஒரு பதினைந்து நாட்கள் பள்ளியை சமூக இடைவெளியுடன் வழக்கம் போல நடத்திவிட்டு, பின்னர் இந்த தேர்வை நடத்தினால், நிச்சயம் அனைவரும் நல்ல மதிப்பெண்களுடன் இந்த தேர்வை சந்திப்பார்கள், என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமில்லை.

முதலில் 60 நாட்கள் வீட்டில் இருந்த மனநிலையை மாற்ற வேண்டும். எந்த ஒரு விஷயமே முதலில் மனோதத்துவ ரீதியாக நாம் அதனை எதிர் கொள்ள வேண்டும். பின்பு தான் அதன் உண்மையான எதிர்கொள்ள முடியும். முதலில் Mind Set என்று சொல்லக்கூடிய மனதால் உணர்ந்து கொள்ள கூடிய அந்த நேரத்தை, அந்த 15 நாட்கள் உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

என்ன ஒரு விஷயம் என்றால், தற்போது பாடதிட்டங்கள் சிபிஎஸ்சி சிலபஸ் என்ற முறையில் மாற்றப்பட்டு விட்டதால் தமிழ் தாள்-1, தாள்-2, ஆங்கிலம் தாள்-1, தாள்-2 என்று இரண்டு தேர்வுகள் இல்லாமல் ஒரே தேர்வாக மாற்றப்பட்டுவிட்டது.

அது மட்டும் இல்லாமல், மற்ற பாடங்களை படித்து புரியவில்லை என்றாலும், மனப்பாடம் செய்து தேர்வு எழுதி விடலாம். ஆனால் கணக்கு அப்படி அல்ல ஒவ்வொரு கணக்கையும் படிப்படியாக போட்டால்தான், அதற்கு சரியான தீர்வு காண முடியும். கொஞ்சம் கடினமான பாடம் என்பது உண்மை.

அதற்கு சிறிது காலம் தேவைப்படும் என்பதால் ஒரு பதினைந்து நாட்கள் பள்ளி வைத்து பின் தேர்வு நடத்தினால் நல்லது என்று தோன்றுகிறது. இது நிச்சயமாக அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் எதிர்நோக்கியிருக்கும் ஒரு சமூகப் பிரச்சனையாகும்.

எல்லாத்துக்கும் வழக்கு போட வேண்டுமென்றால் அதற்கு தீர்வு வராது இது. அந்தந்த துறை சம்பந்தப்பட்டவர்களிடம் அனுபவ ரீதியாக கேட்டறிந்து, இந்த முடிவினை மாற்றி அமைக்க வேண்டும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...