டோல்கின் எழுதிய ‘மிடில் எர்த்’ புத்தகத்தை கையில் வைத்திருந்தான் மாயவன். மாயவனுக்கு வயது முப்பது. நடுவகிடு எடுத்து தலைகேசத்தை வாரியிருந்தான். பால்வழி பிரபஞ்சத்தின் முதுகை தடவி விடும் கண்கள். பௌர்ணமித்த நுனி மூக்கு. மீசையின் இரு நுனிகளும் கீழ் நோக்கி வளைந்திருந்தன. முன்னம் மேல் வரிசை பல்லில் இடைவெளி இருந்தது. மாயவன் புவியியலில் டாக்டரேட் பண்ணியவன் “ஐஸ்கிரீம் சாப்பிடுவோமா இஸபெல்லா?” இஸபெல்லா மாயவனின் காதலி. “இன்னும் நீ குழந்தை பிராயத்திலேயே இருக்கிறாய் மாயா… தினம் ஐஸ்கிரீம் இல்லாது […]Read More
மீனவர்களின் படகில் இருந்து பாயுடன் பறந்த வித்யாதரன் இப்போது மிகவும் வேகமாகப் பறந்து கொண்டிருந்தான். மன்னிக்கவும், அந்தப் பாய் வேகமாகப் பறந்து கொண்டிருக்க, அதன் மீது கவனமாக அமர்ந்து கொண்டிருந்தான். அந்த முன்னூறு காத தொலைவுகளை மிகவும் வேகமாக சில மணிகளில் கடந்து அவனை சுமந்துவந்துவிட்டது அந்த மந்திரப்பாய். வில்லவபுரம் நகரின் மீது மந்திரப்பாய் தாழ்வாகப் பறந்து வரவும் அந்நகர மக்கள் “பாய் பறக்குது! பாய் பறக்குது!” என்று கூச்சலிட்டார்கள்! ”பாய் பறக்குது! அது மேலே ஒரு […]Read More
திருவானைக்காவல் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் பொழிகின்ற துன்பம் புயல் வெள்ளத்தில் நின்கழல் புணைகொண்டு இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான் யான் இடர்க்கடல் வாய்ச் சுழி சென்று மாதர்த்திரை பொரக் காமம் கரவு எறிய அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே -திருவாசகம் இந்த உலகமே பஞ்ச பூதங்களால் ஆனது. அந்த ஐவகை அம்சங்களே மனித உடலில் ஆட்சி செலுத்துகிறது. மனிதனுக்குள் மறைபொருளாக ஈசனே அருள் ஆட்சி செய்கிறான். துன்பம் சூழ்ந்த இந்த மண்ணுலகுக்கு வந்த உயிர்கள் ஈசனின் திருவடி […]Read More
சிவிகையிலிருந்து இறங்கிய அரசரை கண்டதும் தேவி அகிலாண்டேஸ்வரி இருகரம் கூப்பி அவரை வரவேற்றாள். தாயாரைக் கண்டதும், இளவரசர் முத்துவடுகநாதரும் அவரின் கால்களை தொட்டு வணங்கினார். “எழுந்திரு குழந்தாய். வாருங்கள். அனைவரும் நலமாக உள்ளீர்கள் தானே?” என்றாள். “ஆம் தேவி. தற்பொழுது வரை நலமே… அன்னை எப்படி இருக்கிறார்கள்?” “அவர்களுக்கு எப்பொழுதும் குழந்தைகள் நியாபகமும் அந்த ஈசனின் நியாபகமும் தான். நமச்சிவாய மந்திரத்தை ஸ்ரமணம் செய்தபடி இருப்பார்கள். வாருங்கள் அவர்களை காணலாம்” என்று அவர்களை அழைத்துக் கொண்டு குடிலுக்குள் […]Read More
10. அசுரர்களைச் சிக்கவைத்த பூதம்!! நாலு பேர் கொண்ட டார்க் டெமன்ஸ்- குழுவினருக்கு, டிரினிட்டி இந்தியா டிவியில் பணியாற்றவே பிடிக்கவில்லை. என்ன செய்வது..?தேர்தல் முடிவுகள் முழுதாக வெளிவரும் வரையிலும், கருத்துப் பரிமாற்றங்கள், கட்சி அலுவலகத்தில் கொண்டாட்டங்கள், எதிர்க்கட்சி அலுவலகம் வெறிச்சோடி இருப்பது, இனி பழைய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுமா, போன்ற நிகழ்வுகளை ஒளிபரப்ப வேண்டியிருந்ததால், பல்லைக் கடித்துக் கொண்டு காத்தருந்தார்கள். இரவு பத்து மணிக்கு அட்டெண்டர் பஞ்சு ஓடி வந்தான். “சாரே… தெரியுமா..? நாளைக்கு நம்ம டிவி […]Read More
பருந்துவடிவில் இருந்த வித்யாதரன் பறக்கும் பாயின் மீதமர்ந்து பறந்து செல்கையில் தன்னை ஒரு பருந்து துரத்தி வருவதைக் கண்டான். ஒரு நிமிடம் கண்முடி தியானித்தான். அப்போது அவன் கண்களுக்கு துரத்தி வருவது பருந்து இல்லை! ஒரு சூனியக்காரி என்பது தெரிந்துவிட்டது. அவளது நோக்கமும் அவனுக்குப் புரிந்துவிட்டது. தன்னிடம் இருக்கும் இந்த மந்திரப் பாயை பறிக்கத்தான் அவள் துரத்தி வருகின்றாள் என்பதை உணர்ந்த அவன் அந்த சூன்யக்காரிக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் பருந்து […]Read More
திருமுதுகுன்றம் ஸ்ரீ பழமலைநாதர் மானம் அழிந்தோம் மதி மறந்தோம் மங்கை நல்லீர் வானம் தொழும் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம் ஆனந்தம் கூத்தன் அருள் பெறின் நாம் அவ்வண்ணமே ஆனந்தம் ஆகி நின்று ஆடாமோ தோள் நோக்கம். –திருவாசகம் முக்தியை விரும்பாதோர் யார்? அமைதியான, நிம்மதியான மரணமே மனிதர்கள் விரும்புவது. மரணமில்லாப் பெருவாழ்வு என்று கூறுவதும் வாழும் நாள் வரை இறை சிந்தனையில் மூழ்கி, இறை நாமத்துடன் கழித்து, அந்த இறை சக்தியுடனேயே ஒன்றி விடுவது. […]Read More
“பார்த்தால் தெரியாது, பழகினால் தெரியும்.” என்ற சிகப்பி, சலீம் மாலிக்கை கண்களால் எச்சரித்தாள். புரிந்து கொண்ட மாலிக்கும் தனது பேச்சை மாற்றி புத்தி பேதலித்தவன் போல் பிதற்றினான். “ஐம்பது குதிரை… ஐம்பது குதிரை .. ம்ஹா…. ரெண்டு வெள்ளிக் காசு… நீ வெள்ளிக் காசு பார்த்து இருக்கியா? என்கிட்ட நிறைய வெள்ளிக் காசு இருக்கு. அது எல்லாம் பானையில போட்டு கிணற்றுக்குள் போட்டு விட்டேன். ஹஹஹா… நீயும் உன் வெள்ளிக் காசுகளை கிணற்றுக்குள் போடு. எல்லாம் பத்திரமாக […]Read More
9. அசுரர்களுக்கு வீழ்ச்சி டிரினிட்டி இந்தியா டிவியின் கான்ஃரன்ஸ் ரூம் ! தமிழ்நாட்டில் தேர்தல் சூடு பிடித்திருந்த நிலையில், அந்த ஏசி ரூம் குளிரை தாண்டி அனல் பார்வைகளைப் பரிமாறிக்கொண்டிருந்தனர், டார்க் டெமன்சும், கங்கணா மற்றும், சஞ்சனாவும். இன்னும் பிரதீப் நஞ்சுண்டன் தனது இருக்கையில் வந்து அமரவில்லை. ஆனால் ஏற்கனவே அங்கே குழுமியிருந்த ஆறு பேர்களின் அனல் பார்வை, அந்த அறையில் வெப்பத்தை அதிகரித்து, ஓர் இறுக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தி இருந்தது. ”பாய்ஸ்..! வீ ஆர் வின்னிங்..! […]Read More
கரிச்சான் குருவிகளை ஏமாற்றி மலைப்பாம்பு வசிக்கும் குகையை அடைய வழி இருக்கிறதா சொல்லுங்கள்? என்று மாயக்குள்ளன் கேட்டதும் அதற்கு ஓர் வழி இருக்கிறது என்று சொன்ன வித்யாதரனைக் கூர்ந்து நோக்கினான் குள்ளன். ”மாயக் குள்ளரே! நான் விளையாட்டுக்குச்சொல்லவில்லை! கரிச்சான்களை ஏமாற்றி நாம் மலைப்பாம்பின் குகைக்குக் கண்டிப்பாகச் செல்லத்தான் போகிறோம். ஆனால் அது பகல் பொழுதில் அல்ல! இராப்பொழுதில்!” வித்யாதரன் சொல்லி முடிக்கவும் குள்ளன் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. ”அருமையான யோசனை! பொழுது சாய்ந்து இரண்டாம் ஜாமத்தில் நாம் […]Read More
- தம்பதிகள் இணைபிரியாமல் இருக்க ‘அசூன்ய சயன விரதம்’
- எம்சாண்ட் மணலில் கட்டப்படும் கட்டடங்கள் உறுதியாக இருக்குமா?
- மது குடித்து தெருவோரம் மயங்கிக் கிடந்த 3 அரசுப் பள்ளி மாணவிகள்
- ஆன்லைன் சூதாட்டம்- தடை செய்ய ஏன் தாமதம்? – தமிழருவி மணியன்
- பாரதியார் ஏன் பூணூலை கழற்றினார்
- கோமேதகக் கோட்டை | 16 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
- தலம்தோறும் தலைவன் | 14 | ஜி.ஏ.பிரபா
- ஸ்ரீஹயக்ரீவரை வணங்கி செல்வம், கல்வி, ஞானம் பெறுவோம்
- உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள்
- ஓ.டி.டி.யில் நுழைகிறது பிரபல ஏ.வி.எம். நிறுவனம்