நமது இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்று நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் விஷாலும் இந்த கொண்டாட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு காரைக்குடி அருகில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தாமிரபரணி, பூஜை படங்களை தொடர்ந்து இயக்குநர் ஹரி டைரக்ஷனில் விஷால் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. இன்று சுதந்திர தினம் என்பதால் காரைக்குடி அருகில் […]Read More
ஏவிஎம் சரவணன், எஸ்.பி.முத்துராமன், ஆர்.எம்.வீரப்பனிடம் நேரில் ஆசிபெற்று ஜென்டில்மேன்-2 ஆரம்ப விழாவை நடத்துகிறார் மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். தனது வளர்ச்சியில் உறுதுணையாக நின்ற மூத்த ஜாம்பவான்களிடம் நேரில் சந்தித்து ஆசிபெற்று ஜென்டில்மேன்-2 ஆரம்ப விழாவை நடத்த ஆயத்தங்கள் செய்து வருகிறார் மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் இப்போது இவர் பிரமாண்டமாக தயாரிக்கும் ‘ஜென்டில்மேன்-ll’ இப்படத்தின் துவக்க விழா வரும் ஆக-19ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா மண்டபத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது. “நான் பிரபல வினிதோகஸ்தராக கொடிகட்டி […]Read More
“கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு!
இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. திரைப்படத்தின் திரை முன்னோட்டத்தை மேனாள் நீதியரசர் திரு. சந்துரு அவர்கள் இன்று அவரது இல்லத்தில் வெளியிட்டார். இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தை வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. […]Read More
கத்தி வீச்சருவா, சைக்கோ கொலைகாரன், பாலியல் வன்கொடுமை, அறைகுறை ஆடை காட்சிகள், சாதீ, அடக்குமுறை , ஒடுக்குமுறை, வன்மம், தீவிரவாதம் , புரட்சி என ஏதும் இல்லாமல் சாதாரணமாக கொஞ்சம் காமெடி கலந்து ஒரு குடும்ப படத்தை பார்க்கணுமா? அப்ப நீங்க தாராளமாக “ பத்மினி “ படத்தை பார்க்கலாம். இந்த திரைப்படத்தை சென்னா ஹெட்ஜ் என்பவர் இயக்கியுள்ளார். இதில் குஞ்சாகோபோபன், மடோனா செபாஸ்டியன், அபர்ணா பாலமுரளி , வின்ஸி அலோசியஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். எளிய கதைக்கருவினை […]Read More
பிக்பாஸ் சீசன் 7 ப்ரமோ எப்போ தெரியுமா? டிவி ரசிகர்களின் மோஸ்ட் பேவரிட் நிகழ்ச்சி என்றால் அது விஜய் டிவியில் வரக்கூடிய பிக்பாஸ் நிகழ்ச்சிதான்.பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 6 சீசன்களாக உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது 7வது சீசனையும் அவரே தொகுத்து வழங்க உள்ளார். கடந்த ஒரு மாதமாகவே பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி பிக்பாஸ் ரசிக பெருமக்களை பரபரப்பில் ஆழ்த்தி வருகிறது. மேலும் சில வெள்ளித்திரை […]Read More
தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன ” டிரைலரை வெளியிடும் நீதியரசர் சந்துரு!
அழகி, பள்ளிக்கூடம், சொல்ல மறந்த கதை என காலம் கடந்தும் ரசிக்கப்படுகின்ற உணர்வுபூர்வமான படங்களை இயக்கியவர் இயக்குநர் தங்கர் பச்சான். தற்போது கருமேகங்கள் கலைகின்றன படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், நடிகர் யோகிபாபு, அதிதி பாலன் நால்வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இந்தப்படத்தின் டிரைலர் இன்று (ஆக-14) […]Read More
‘ஜென்டில்மேன்-2’ ஆரம்ப விழா – ஆஸ்கர் நாயகன்எம்.எம்.கீரவாணிக்கு பாராட்டு விழா!
மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘ஜென்டில்மேன்-2’ . இப்படத்தை ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார்.ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து இந்தப்படத்தின் பாடல்களை எழுதுகிறார். சமீபத்தில் இந்தப்படத்திற்கான மூன்று பாடல்களுக்கு இசை கோர்ப்பு, கொச்சியில் உள்ள உலகப் புகழ்பெற்ற போல்காட்டி பேலஸில் நடைபெற்றது. இதை அடுத்து, வரும் ஆகஸ்ட்-19ஆம் தேதி சனிக்கிழமை இந்தப்படத்தின் துவக்கவிழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து, ஆஸ்கர் […]Read More
இந்த வாரம் எந்த திரைப்படம் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது என்பது தெரியுமா? அப்ப இதை படித்து தெரிந்து கொள்ளலாமே. திரையரங்கில் ஒடாத பல படங்கள் ஓடிடியில் வரவேற்பு பெறுவதும் உண்டு. வாராவாரம் வெள்ளிக்கிழமை வந்தால் திரையரங்குகள் மட்டுமல்ல, ஓடிடி தளங்களிலும் புது திரைப்படங்கள் களைகட்ட தொடங்கி விடுகின்றது. அண்மையில் வெளியான புதிய திரைப்படங்கள் ஒடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெறுகிறதாம். அந்த வகையில் மாவீரன், போர்தொழில், ஆதி புருஷ் உட்பட, திரையரங்குகளில் எதிர்பார்ப்புகளை உருவாக்கிய […]Read More
கோடை விடுமுறையில் ‘கல்கி 2898 ஏடி’….!
நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகாபடுகோன், திஷா பதானி, பசுபதி நடிக்கும் படம் ‘கல்கி 2898 ஏடி’. பான் இந்தியா முறையில் உருவாகும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்ஷன் படமான இதை வைஜெயந்தி மூவீஸ் தயாரிக்கிறது. மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நிறுத்தப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு இப்போது ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. வரும் 28-ம் தேதி வரை இங்கு படப்பிடிப்பு நடக்க […]Read More
வசூலில் கலக்கிய போர்தொழில் படம் இப்போது சோனி லைவ்வில்….!
அப்பாடா ! கடைசியில் ஒரு வழியாக அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள ‘போர் தொழில்’ சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இத்திரைபடம் பல முறை ஒடிடியில் வெளியாகப்போவதாக தகவல் வந்து பின்னர் கைவிடப்பட்டது. தியேட்டரில் படம் நன்றாக ஒடியதால் ஒடிடி ரிலீஸ் தள்ளி போவதாக தகவல் வெளியானது. விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள படம் ‘போர் தொழில்’. கடந்த ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் இவர்களுடன் நிகிலா விமல், […]Read More
- ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
- சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 4ஆவது பாதை..!
- நடிகர் சல்மான் கானுக்கு, கொலை மிரட்டல்..!
- டில்லியில் தொடர்ந்து 4வது நாளாக காற்று மாசுபாடு தீவிரம்..!
- நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை..!
- அசாம் மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து..!
- தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் இன்று..!
- வரலாற்றில் இன்று (18.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 18 வெள்ளிக்கிழமை 2024 )
- பாம்பன் புதிய ரயில் பாலத்தில்இன்று சோதனை ஓட்டம்..!