“ தலைவர் 170” அதுக்குள்ளயா?

 “ தலைவர் 170” அதுக்குள்ளயா?

ரஜினி பற்றி இணையத்தில் பரவும் தகவல்!

ரஜினி அடுத்ததாக ஞானவேல் ராஜா இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார் என அதிகாரபூர்வமற்ற தகவல் ஒன்று கசிந்து வருகிறது.

இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 170 என பெயர் வைக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தின் பூஜை ஆகஸ்ட் 26ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், படப்பிடிப்பை விறுவிறுப்பாக தொடங்கி, இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், தலைவர் 170 படத்தின் தலைப்பு குறித்த தகவலும் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.

அதாவது இந்த படத்திற்கு வேட்டையன் என பெயரிடப்பட்டுள்ளதாகவும், படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும், தொடர்ந்து ரவுடிகளை வேட்டையாடுவதால் இந்த பெயர் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

இதில் வில்லனாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாகவும் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் பல முக்கிய நடிகர்கள் பலர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...