“கருமேகங்கள் கலைகின்றன “ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு விழா! | தனுஜா ஜெயராமன்

 “கருமேகங்கள் கலைகின்றன “ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு விழா! | தனுஜா ஜெயராமன்

இயக்குனர் பாரதி ராஜா , அருவி படத்தின் நாயகி அதிதி பாலன் ஆகியோர் தங்கர் பச்சான் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் கருமேகங்கள் கலைகின்றன. இப்படத்தில் கௌதம் மேனன், யோகி பாபு , சாரல் உள்ளிட்ட பலர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . மனித உறவுகளை மையமாகக் கொண்ட கதைகளையே தங்கர்பச்சான் திரை மொழி வழக்கமாக மக்கள் முன்னிலையில் படைத்துவரும் நிலையில் , கருமேகங்கள் கலைகின்றன திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த திரைப்படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனத்தின் சார்பில் வீர சக்கரவர்த்தி தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

இந்த திரைபடத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றதுடன்  படத்தின் ட்ரெய்லரும் இன்று வெளியிடப்பட்டது. கருமேகங்கள் கலைகின்றன பட விழா நிகழ்வில் அதிதி பாலன் , பாரதிராஜா, ஆர்வி உதயகுமார், கௌதம்மேன்ன், தங்கர் பச்சன், ப்ரமிட் நடராஜன் ஆகிய திரைபிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...