விஜய் டிவி சீரியலில் நடிக்கும் இளையராஜாவின் மருமகள்!

 விஜய் டிவி சீரியலில் நடிக்கும் இளையராஜாவின் மருமகள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல். இதில் மகாநதி கெஸ்ட் ரோலில் இசையமைப்பாளர் இளையராஜாவின் மருமகளும் சீரியல் நடிகையுமான “நடிகை ஹாசினி” அறிமுகமாகி இருக்கிறார். பாரதி கண்ணம்மா சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட் தான் இந்த சீரியலையும் இயக்கி வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியலாக இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கி ஒரு சில மாதங்கள் தான் ஆகிறது.

தற்போது 100 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் எதிர்ப்பாராத டுவிஸ்ட் நிகழப் போகிறது.

அப்பா இறந்த நான்கு பெண்களின் கதையை மையமாகக் கொண்டு இந்த கதை நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் காவிரியிடம் நிவின் நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாமா? என்று கேட்க அதற்கு பதில் சொல்லாமல் காவிரி முறைத்தபடி இருக்கிறார்.

இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் கல்யாணம் நடக்குமா? இல்லையா? என்று பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

அதே நேரத்தில் தற்போது சில புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் இந்த சீரியலில் இசையமைப்பாளர் இளையராஜாவின் மருமகளும் சீரியல் நடிகையுமான ஹாசினி போலீஸ் உடையில் அறிமுகமாகிறார்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...