69 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா !
டெல்லியில் 69 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் தற்போது வழங்கப்பட்டது
இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருது வழங்கபட்டது.
சிறந்த படத்துக்கான விருதை ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ வென்றுள்ளது
இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரிப்பில் வெளியான ‘கடைசி விவசாயி’ திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2021-ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் திரைப்படமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த நடிகராக அல்லு அர்ஜூன் புஷ்பா திரைப்படத்திற்காகவும் சிறந்த நடிகையாக ஆலியா பட் கங்குபாய் காத்தியவாடி படத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
69வது தேசிய திரைப்பட விழாவில் ஆறு தேசிய விருதுகளை தட்டித்தூக்கி மாஸ் காட்டியுள்ளது ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்.
சிறந்த பின்னணி இசைக்காக ஆர்.ஆர்.ஆர். படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணிக்கு விருது அறிவிப்பு
சிறந்த நடன அமைப்புக்காக ஆர்.ஆர்.ஆர். படத்தின் நடன பயிற்சியாளர் பிரேன் ராஜ்ஷிதிற்கு விருது அறிவிப்பு
சிறந்த சண்டை பயிற்சிக்காக ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சாலமனிற்கு விருது அறிப்பு
சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்காக ஆர்.ஆர்.ஆ. படத்தின் ஸ்ரீனிவாஸ் மோகனிற்கு விருது அறிவிப்பு
சிறந்த ஆண் பாடகருக்காக ஆர்.ஆர்.ஆர். படத்தின் தெலுங்கு பாடல்( கொமுரன் பீமுடோ) பாடலை பாடியுள்ள கால பைரவாவிற்கு விருது அறிவிப்பு
சிறந்த பொழுதுபோக்கு படத்திற்காக ஆர்.ஆர். ஆர். படத்திற்கு தேசிய விருது அறிவிப்பு
மேலும் ‘கருவறை’ ஆவணப் படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏக்காகவுன் திரைப்படத்திற்காக பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த பின்னணி பாடகியாக ஸ்ரேயா கோஷல் ‘மாயவா சாயவா’ (இரவின் நிழல்) படத்திற்காக தேர்வாகியிருக்கிறார்