இந்த வாரம் திரையரங்கம் மற்றும் OTT-யில் ரிலீஸாகவுள்ள தமிழ் படங்களின் குறித்து தெரியுமா?

 இந்த வாரம் திரையரங்கம் மற்றும் OTT-யில் ரிலீஸாகவுள்ள தமிழ் படங்களின் குறித்து தெரியுமா?

‘கிங் ஆஃப் கோதா’ :

மலையாள சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய கேங்ஸ்டர் படமான ‘கிங் ஆஃப் கோதா’ .

இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஷபீர், பிரசன்னா, நைலா உஷா, செம்பன் வினோத், கோகுல் சுரேஷ், சம்மி திலகன், ஷாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இன்று (ஆகஸ்ட் 24-ஆம் தேதி) மலையாளம் மொழி மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

‘இன்ஃபினிட்டி’:

பிரபல நடிகர் நட்டி ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘இன்ஃபினிட்டி’. இந்த படத்தை இயக்குநர் சாய் கார்த்திக் இயக்கியுள்ளார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் வித்யா பிரதீப், முனிஷ்காந்த், சார்லஸ் வினோத், முருகானந்தம், வினோத் சாகர், ஜீவா ரவி, ஆதவன், சிந்துஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை இந்த வாரம் பிரபல OTT தளமான ‘சிம்ப்ளி சவுத்’ல் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

‘பீட்சா 3’:

அஷ்வின் ககுமானு ஹீரோவாக நடித்திருக்கும் ஹாரர் ஜானர் படம் ‘பீட்சா 3’.

இந்த படத்தை இயக்குநர் மோகன் கோவிந்த் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் பவித்ரா மாரிமுத்து, கெளரவ் நாராயணன், அபிஷேக் ஷங்கர், காளி வெங்கட், அனுபமா குமார், ரவீனா தாஹா, சுபிக்ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை நாளை (ஆகஸ்ட் 24-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘சிம்ப்ளி சவுத்’ல் ரிலீஸ் செய்யப்படுகிறதாம்.

பிளாக் & வொயிட்’:

கார்த்திக் ராஜ் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘பிளாக் & வொயிட்’. இந்த படத்தை இயக்குநர் எஸ்.தீக்ஷி இயக்கியுள்ளார்.

இதில் கார்த்திக் ராஜுக்கு ஜோடியாக தீபா நடித்துள்ளார். இதற்கு குணா பாலசுப்ரமணியம் இசையமைத்துள்ளார், ஃபரூக்.ஜே.பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், தமிழரசன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இப்படத்தை வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘ஜீ5’ ல் ரிலீஸ் செய்ய ப் பட இருக்கிறது .

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...