மேக்னஸ் கார்ல்செனுடன் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் பிரக்ஞானந்தா இறுதி யுத்தம்!
இன்று நம் இளம் சேஸ் வீர்ர் பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்செனுடன் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் இறுதி யுத்தம் நடத்துகிறார்.
மேக்னஸ் கார்ல்சென் – பிரக்ஞானந்தா இடையே நடைபெற்ற
உலக செஸ் சாம்பின்ஷிப் இறுதிப் போட்டியில் நேற்று நடந்த முதல் சுற்று டிராவில் முடிந்தது. இன்று நடைபெறவுள்ள 2 ஆவது இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார்கள்.
இதில் ஒரு நகர்த்தலுக்காக நார்வேயின் மேக்னஸ் கார்ல்சென் 27 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார். இதன் மூலம் சென்னையின் பிரக்ஞானந்தா எந்த அளவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார் என்று விளையாட்டு விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அசர்பைஜான் நாட்டின் பாகு நகரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டிக்கு சென்னையை சேர்ந்த 18 வயதாகும் பிரக்ஞானந்தாவும், நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனும் தகுதி பெற்றனர். இறுதிப் போட்டி 2 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.
நேற்று நடந்த முதல் சுற்றில் ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது. நேற்று மாலை 4.30க்கு தொடங்கிய இந்த ஆட்டம் இரவு 7.22 மணி வரை நீடித்தது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்செனுக்கு இணையாக பிரக்ஞானந்தா விளையாடினார்.
இரு சுற்று ஆட்டத்தையும் சேர்த்து 1-1 என்று சமநிலையில் உள்ளனர். இரண்டாவது சுற்று ஆட்டமும் டிரா ஆன காரணத்தால் டை பிரேக்கர் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். டை பிரேக்கர் ஆட்டத்தில் இருவரும் அதிவேகமாக காய்களை நகர்த்த வேண்டும். இந்த ஆட்டம் இன்று நடைபெறுகிறது.