“பெருமைக்குரிய தேசிய விருது”, நடிகர் இயக்குநர் பார்த்திபன் நெகிழ்ச்சி..!
நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்திருந்த இரவின் நிழல் படத்தில் வரும் மாயாவா தூயவா பாடலுக்கு தேசிய விருது கிடைத்துள்ளதற்கு பார்த்திபன் தன்னுடைய பாணியில் நன்றி தெரிவித்துள்ளார். இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. இரவின் நிழல் அதில் பார்த்திபன் இயக்கி நடித்த மாயவா தூயவா என்ற பாடல் பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு விருது அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கே உரிய பாணியில் வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், வணக்கம் நான் பார்த்திபன் மகிழ்வுடன், நிலவில் சந்திரயான் இறங்கும் போது விஞ்ஞானிகள் மட்டும் அல்ல, அந்த கட்டிடத்தில் பணிபுரியும் அனைவருமே, மகிழ்ந்திருப்பார்கள். பெருமை பட்டிருப்பார்கள். அப்படி பெருமைக்குரிய தேசிய விருது, இரவின் நிழல் படத்தில் ஸ்ரேயா கோஷல் பாடிய மாயாவா தூயவா என்கிற பாடலுக்கு அறிவிக்கப்பட்ட போது, இதற்க்கு முழு முதல் காரணமான ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான நன்றி.
இஸ்ரோவில் பணிபுரிந்த நிறைய ஊழியர்களில் ஒருவன் போல, அந்த படத்திற்காக உழைத்த ஊழியர்களில் ஒருவனாக, நானும் மகிழ்கிறேன், பெருமை கொள்கிறேன். ஏ.ஆர்.ரகுமானுடன் ஒரு படமாவது பண்ண வேண்டும் என்பது என்னுடைய நீண்ட காத்திருப்பு, அதன் பலனாக எனக்கு இரவின் நிழலில் கிடைத்த மரியாதை கிட்ட தட்ட 120 சர்வதேச விருதுகள் எல்லாமே கிடைத்தும் கூட, நம் தேசிய விருது என்கிற போது அதன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
அதில் என்னுடைய படத்தின் பெயர் இருப்பது மகிழ்ச்சி. அதில் என் பெயர் இருப்பதும் மகிழ்ச்சி. இதற்க்கு காரணமான ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கும், ஸ்ரேயா கோஷல் அவர்களுக்கும் இப்படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. மேலும், படத்தின் காரண கர்த்த அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டேன். ஆனால், படத்தின் மூலக கர்த்தாவான என்றுடைய இனிய நண்பர்கள் அமெரிக்க வாழ் தமிழர்கள் என பார்த்திபன் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.