விண்வெளியில் சஞ்சரித்த லைக்கா எனும் நாய் பற்றி எழுதியுள்ளேன். ரஷ்யாவைப் பற்றி எதிர்மறை விமர்சனம் வரும் இந்நாட்களில் இக் கட்டுரை இந்திய – ரஷ்ய உறவில் ஒரு புதுத்தென்றலை வீசிச்செல்லும் என்பது என் எண்ணம். பக்கச் சார்பற்று இக்கட்டுரையைப் புனைந் துள்ளேன். விண்வெளி ஆதிக்கத்திற்கு ரஷ்யா செய்த சேவை உலகு மறக்க முடியாதது. கட்டுரையை மேலே படியுங்கள். 1957ம் ஆண்டு….. அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் விண்ணாதிக்கத்தில் போட்டிப் போட்ட காலம் அது. இரு வல்லரசுகளும் விண்ணை ஆள […]Read More
வாழ்க்கையில என்ன கஷ்டம் வந்தாலும் துன்பம் வந்தாலும் நாம கும்பிடுற கடவுள் நம்மைக் காப் பாத்துவார்’னு என் அம்மா, அப்பா இருவரும் அவர்கள் உயிரோடிருந்தவரை அடிக்கடிச் சொல் வார்கள். அந்த வார்த்தைகள் மந்திரச்சொல் மாதிரி என் மனத்தில் தங்கிவிட்டன.ஒரு நெருக்கடியான நேரம்… எனக்கு இரண்டா வது குழந்தை பிரசவத்தின் போது வலி பொறுக்க முடியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்தேன். டாக்டர் என்னைப் பரிசோ தித்துவிட்டு, “இன்னும் 24 மணி நேரம் ஆகும்” என்றார் எனக்கோ மிகுந்த வலி. […]Read More
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஸவை நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரி வவுனியா பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப் பட்டது. நேற்று (05.04.2022) காலை வவுனியா, மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகாவித்தியால யத் திற்கு முன்பாக ஆரம்பித்த ஆர்ப்பாட்ட பேரணியானது கண்டி வீதியை அடைந்து, ஹொரவப்பொத்தானை வீதியூடாக பஜார் வீதி சென்று பழைய பேரூந்து நிலையத்தை அடைந் தது.இதன்போது மணிக்கூட்டு கோபுர சந்தி மற்றும் பழைய பேருந்து நிலையம் என்பவற்றுக்கு முன் னால் வீதியை […]Read More
உலோகப் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதும் மண் பாண்டங்கள் அருகிப் போய்விட்டன. அதை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக் கிறார் வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர் லோகேஷ். இவர் சென்னை லயோலா கல்லூரியில் ஊடகக்கலைகள் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். அதே கல்லூரியில், காட்சித் தகவலியல் துறை பட்டயப் படிப்பில் சிறந்த மாணவன் விருதையும் வென்றவர். தமிழில் வெளிவந்த அணு உலை குறித்த ஒரே ஆவணப்படமான உயிர் உலை’யின் இயக்குநர் இவர்தான். தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று ஓவியப் புத்தகமான ‘ஈழம்-87’புத்தகத்தையும் இவர்தான் பதிப்பித்திருக்கிறார். சாலை விபத்தில் மறைந்த நிருபர் ஷாலினியின் கவிதைகளைத் தொகுத்து ‘பாரதி யாழ்’ என்ற அவரது புனைபெயரிலேயே வெளியிட்டுள் ளார். பன்முகத்திறமை கொண்ட இளைஞரான லோகேஷை சந்தித்துப் பேசினோம். “மண் பாண்டம் உள்பட மரபுத் தொழில்களை மீட்க பிரத்யேகமான கல்வி முறை, வியாபார யுக்திகள் தேவைப்படுகிறது. மண்பாண்டத் தொழிலை பயிற்றுவிப்பதில் ஒரு சிக்கல் உள்ளது. மண்பாண்டம் உள்ளிட்ட அனைத்து மரபுத் தொழில்களுமே ஏதோ ஒரு சாதிய அடிப்படையி லான தொழிலாக இருக்கும். குறிப்பாக மண்பாண்டத் தொழிலை குயவர் கள் அல்லது குலாலர் என்கிற இனத்தவர் செய்து வருகின்றனர். மண் பாண்டத் தொழிலை பிற சாதியினர் கற்பதில் மனத்தடை இந்தக் காலத்தி லும் இருக்கிறது. மனித நாகரிகத்தின் தொட்டில்களில் வளர்ந்த கலை, இன்று சாதிய வேறு பாடுகளால் அழியும் நிலைக்குப் போய்விட்டது. சாதியைக் கடந்த தொழில்களே நிறுவனமயமாக்கப்பட்டு சிறப்பான வளர்ச்சிகளைப் பெற்றிருக்கிறது என்பது யதார்த்தம். மண்பாண்டத் தொழிலும் இத்தகைய வளர்ச்சியை எட்ட வேண்டுமானால் இந்த மனத்தடை முற்றிலுமாக ஒழிய வேண்டும். இப்போது மண் பாண்டக் […]Read More
ஜெமினி கணேசன் நடித்த பூவும் பொட்டும் படத்தில் நாதஸ்வர ஓசையிலே… ஜெயசங்கர் நடித்த பட்டணத்தில் பூதம் படத்தில் அந்த சிவகாமி மகனிடம்… ஆகிய பிரபலமான பாடல்களை இசையமைத்தவர் ஆர். கோவர்த்தனம். தெலுங்கைத் தாய்மொழியாக கொண்டவர் கோவர்த்தனம். பெங்களூரில் வசித்து வந்தார். தந்தை பெயர் இராமச்சந்திர செட்டியார். பிரபலமான இசையமைப்பாளர் கோவர்த்தனத்தின் சகோதரர் ஆர். சுதர்சனம் . தந்தையும் கர்நாடக இசை அறிந்தவர். தந்தையிடமும், சகோதரரிடமும் கோவர்த்தனம் கர்நாடக இசையைப் பயின்றார். சென்னைக்கு வந்து தமிழும் கற்றுக் கொண்டார். […]Read More
உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங், 76-வது வயதில் (மார்ச்14) காலமானார். அவர் பற்றிய செய்தி.ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற ஒப்பற்ற விஞ்ஞானிகளுக்கு நிகராக புகழப் பெற்ற ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை ஆரம்பம் முதலே முள் படுக்கையாகவே இருந்தது. நரம்பியல் நோயால் உடல் அளவில் முடங்கினாலும், உள்ளத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருந்து ஒட்டுமொத்த விஞ்ஞான உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தவர் ஸ்டீபன் ஹாக்கிங். “கை கால்கள் செயல்படாது. சக்கர நாற்காலியிலேயே வாழ வேண்டும். விரைவில் மரணம் ஏற்படும்” ஸ்டீபன் […]Read More
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒருவர் எப்படி அறிமுகம் ஆகிவிடுகிறார் களோ அந்த கேரக்டர் ரசிகர்கள் மனதில் பதிந்துவிடும். அப்படித்தான் சில்க் ஸ்மிதாவும் தமிழ் ரசிகர்கள் மனதில் பதிந்து போனார். அவரது உடல் வனப்பும் கவர்ச்சியும் போதைக் கண்களும் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தவர்களுக்கு சில்க் ஸ்மிதாவின் ஈர மனசும், தங்க குணமும் தெரிந்திருக்க நியாயமில்லைதான்! விஜயலட்சுமி என்கிற சில்க்கின் இளம் வயதிலேயே வீட்டில் வறுமை வந்து உட்கார்ந்து கொண்டது. பசி ஒரு பக்கம், மாமியார் கொடுமை ஒரு பக்கம் […]Read More
சென்னை வெள்ளம் வந்தபோது வீடிழந்த மக்களுக்கு சில நல்ல உள்ளங்களால் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டதைப் பார்த்தோம். பிறகு தமிழகப் புயல் நிகழ்ந்தபோதும் பார்த்தோம். அப்போதெல்லாம் யாரோ எவரோ உணவு தந்து பசி யாற்றினார்கள். கடந்த ஆண்டு கொரோனா கோரத் தாண்ட வத்தில் வேலை இல்லாமல் உணவு இல்லாமல் தவித்தவர்களுக்கும் உதவிக் கரங் களை நீட்டிய வர்களைப் பார்த்திருக்கிறோம். தற்போது ரசியா-உக்ரைன் போரின்போது உணவு கிடைக்காமல் தவித்தவர் களுக்கு கஞ்சி உணவு வழங்கப்படுவதைக் கேள்விப்படுகிறோம். ஆனால் தமிழகத்தில் நிகழ்ந்த […]Read More
அன்றைய தென்னாற்காடு மாவட்டம் கடலூரில் முது நகரில் சுண்ணாம்புக்கார தெருவில் 1890ம் ஆண்டு பிறந்தவர் அஞ்சலை. இவருடைய பெற்றோர் முத்துமணிபடையாட்சி- அம்மாக்கண்ணு. லாடம் கட்டுவது, குதிரை வண்டிகளை வாடகைக்கு விடுவது ஆகியவை முத்துமணியின் தொழில். நடுத்தரமான சொத்துக்களை கொண்டிருந்த முத்துமணி தம்மிடம் லாடம் கட்டுவது உள்ளிட்டவை மூலம் பழகிய வெள்ளைக்காரர்களிடம் இருந்து ஆங்கிலம் பேசுவதற்கு பழகி இருந்தார். இவருடைய முதல் மகன் ராஜி, இரண்டாவது மகள் அஞ்சலை, மூன்றாவது ராமசாமி, நான்காவது மகன் பெயர் தெரியவில்லை. […]Read More
திரைப்பட, கர்நாடக இசைப் பாடகர் சித் ஶ்ரீராம் இந்தியாவில் பிறந்து அமெரிக்கா விலுள்ள கலிபோர்னியாவில் வளர்ந்தவர். இவருக்கு ஒரு வயதாக இருந்த பொழுது இவரது பெற்றோர் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதிக்குச் சென்றனர். ப்ரிமவுண்ட்டில் வளர்ந்த இவரின் இசைத்திறமை இவரது தாயாரால் பேணி வளர்க்கப்பட்டது. இவரது தாயார் லதா ஸ்ரீராம் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் ஒரு கர்நாடக இசை ஆசிரியர். இவர் அதே நேரத்தில் ரிதம் அண்ட் புளூஸ் உடன் இணைந்து பணியாற்றி வந்தார். 2008ஆம் […]Read More
- ஹாக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவில் இன்றுதுவக்கம்..!
- 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் தகனம்..!
- குற்றால அருவியில் குளிக்க அனுமதி..!
- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 30-ந் தேதி தொடக்கம்..!
- தடையை மீறி தேமுதிகவினர் அமைதி பேரணி..!
- விஜயகாந்தின் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த காவல்துறையினர் அனுமதி மறுப்பு..!
- மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
- வரலாற்றில் இன்று (28.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 28 சனிக்கிழமை 2024 )
- திருப்பாவை பாசுரம் 13