வரலாற்றில் இன்று (பிப்ரவரி 07)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

பெப்ரவரி 7 (February 7) கிரிகோரியன் ஆண்டின் 38 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 327 (நெட்டாண்டுகளில் 328) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

457 – பைசாந்தியப் பேரரசராக முதலாம் லியோ பதவியேற்றார்.[1]

1301 – எட்வர்டு (பின்னர் இங்கிலாந்தின் இரண்டாம் எட்வர்டு மன்னர்) முதலாவது ஆங்கிலேய வேல்சு இளவரசரானார்.[2]

1807 – நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் உருசிய மற்றும் புருசியப் படைகளின் மீது போலந்தில் தாக்குதலைத் தொடங்கின.

1812 – அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் நியூ மாட்ரிட் என்ற இடத்தில் பெரும் நிலநடுக்கம் தாக்கியது.

1819 – சேர் இசுடாம்போர்டு இராஃபிள்சு சிங்கப்பூரை வில்லியம் பார்க்கூகார் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறினார்.

1845 – இலங்கை அரச ஆசியர் சமூகத்தின் இலங்கைக் கிளை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.[3]

1863 – நியூசிலாந்து, ஆக்லாந்து நகர்க் கரையில் ஓர்ஃபியசு என்ற கப்பல் மூழ்கியதில் 189 பேர் உயிரிழந்தனர்.

1904 – அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலம், பால்ட்டிமோரில் பரவிய தீயினால் 1,500 கட்டடங்கள் 30 மணி நேரத்தில் தீக்கிரையாகின.[4]

1944 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி, அன்சியோ நகரில், செருமனியப் படைகள் கூட்டுப் படைகளின் சிங்கிள் நடவடிக்கைக்கு எதிரான தாக்குதலை ஆரம்பித்தன.

1951 – கொரியப் போர்: 700 இற்கும் அதிகமான கம்யூனிச ஆதரவாளர்கள் தென்கொரியப் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

1962 – கியூபாவுடனான ஏற்றுமதி, இறக்குமதித் தடைகளை ஐக்கிய அமெரிக்கா கொண்டு வந்தது.

1967 – அலபாமாவில் உணவகம் ஒன்றில் பரவிய தீயினால் 25 பேர் உயிரிழந்தனர்.

1967 – ஆத்திரேலியா, தாசுமேனியாவில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 62 பேர் உயிரிழந்தனர்.

1971 – சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.

1974 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கிரெனடா விடுதலை பெற்றது.

1977 – சோவியத் ஒன்றியம் சோயுஸ் 24 விண்கலத்தை இரண்டு விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு ஏவியது.

1979 – புளூட்டோ நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது.

1986 – எயிட்டியில் 28 ஆண்டுகள் குடும்ப ஆட்சி நடத்திய அரசுத்தலைவர் ஜீன்-குளோட் டுவாலியர் நாட்டில் இருந்து வெளியேறினார்.

1990 – சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழு கட்சியின் தனி ஆதிக்கத்தை கைவிட இணங்கியது.

1991 – எயிட்டியில் முதல் முறையாக மக்களாட்சி முறை மூலம் தெரிவான அரசுத்தலைவர் சான்-பெர்ட்ரண்ட் அரிசுடைடு பதவியேற்றார்.

1991 – ஐரிஷ் குடியரசு இராணுவம் லண்டனில் 10 டவுனிங் தெருவில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்ற போது அங்கு குண்டுத் தாக்குதலை நடத்தியது.

1992 – ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1999 – உலகத் தமிழிணைய மாநாடு சென்னையில் ஆரம்பமானது.

2005 – விடுதலைப் புலிகளின் மட்டு – அம்பாறை அரசியற்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் உட்பட 4 விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

2009 – ஆத்திரேலியாவின் வரலாற்றில் மிகப்பெரும் இயற்கை அனர்த்தமான விக்டோரியா மாநில காட்டுத்தீயினால் 173 பேர் உயிரிழந்தனர்.

2012 – மாலைத்தீவுகளில் 23 நாட்கள் இடம்பெற்ற அரச-எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து அரசுத்தலைவர் முகம்மது நசீது பதவியில் இருந்து விலகினார்.

2013 – அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலம் அடிமை முறையை ஒழிக்கும் சட்டத்தை அமுல் படுத்தியது.

பிறப்புகள்

1478 – தாமஸ் மோர், ஐக்கிய இராச்சியத்தின் உயராட்சித் தலைவர் (இ. 1535)

1766 – பிரடெரிக் நோர்த், பிரித்தானிய குடியேற்றவாத நிருவாகி, இலங்கையின் 1வது தேசாதிபதி (இ. 1827)

1812 – சார்லஸ் டிக்கின்ஸ், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1870)

1824 – வில்லியம் ஹக்கின்ஸ், ஆங்கிலேய வானியலாளர் (இ. 1910)

1850 – ஜான் பிரவுன் பிரான்சிஸ் எர்ரெசாஃப், அமெரிக்க வேதியலாளர் (இ. 1932)

1864 – சர் பி. எஸ். சிவசுவாமி, இந்திய வழக்கறிஞர், நிருவாகி, அரசியல்வாதி (இ. 1946)

1870 – ஆல்பிரெட் ஆட்லர், ஆசுத்திரியயைசுக்காட்லாந்து உளவியலாளர் (பி. 1937)

1877 – ஜி. எச். ஹார்டி, ஆங்கிலேயக் கணிதவியலாளர் (இ. 1947)

1885 – சிங்ளேர் லுயிஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1951)

1902 – தேவநேயப் பாவாணர், தமிழறிஞர் (இ. 1981)

1933 – கே. என். சொக்சி, இலங்கை அரசியல்வாதி (இ. 2015)

1934 – ஆ. மாதவன், கேரளத் தமிழ் எழுத்தாளர் (இ. 2021)

1940 – டோனி டேன் கெங் யம், சிங்கப்பூரின் 7வது குடியரசுத் தலைவர்

1949 – இராசமனோகரி புலேந்திரன், இலங்கை அரசியல்வாதி (இ. 2014)

1965 – கிரிசு ரொக், அமெரிக்க நடிகர், இயக்குநர்

1978 – ஆஷ்டன் குட்சர், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர், தொழிலதிபர்

1979 – தவக்குல் கர்மான், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற யேமன் ஊடகவியலாளர்.

இறப்புகள்

1878 – ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1792)

1935 – டேவிட் வைட், அமெரிக்கப் புவியியலாளர் (பி. 1862)

1937 – சுவாமி அகண்டானந்தர், சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (பி. 1864)

1986 – ஏ. ஜி. சுப்புராமன், தமிழக அரசியல்வாதி (பி. 1930)

2001 – பகீரதன், தமிழக எழுத்தாளர்

2008 – குணால், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

சிறப்பு நாள்

விடுதலை நாள் (கிரெனடா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1974)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!