வரலாற்றில் இன்று (பிப்ரவரி 04)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

பெப்ரவரி 4 கிரிகோரியன் ஆண்டின் 35 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 330 (நெட்டாண்டுகளில் 331) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1783 – ஐக்கிய அமெரிக்கா மீது தனது அனைத்துத் தாக்குதல்களையும் நிறுத்துவதாக ஐக்கிய இராச்சியம் அறிவித்தது.
1789 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அதிபராக ஜார்ஜ் வாஷிங்டன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
1794 – பிரெஞ்சுக் குடியரசு முழுவதும் அடிமைத் தொழில் சட்டவிரோதமாக்கப்பட்டது.
1810 – கரிபியன் தீவுகளான குவாட்லூப் (Guadeloupe) பிரித்தானியக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
1834 – இலங்கையின் ஆங்கிலப் பத்திரிகை சிலோன் ஒப்சேர்வர் முதன் முதலாக வெளியிடப்பட்டது.
1859 – கிரேக்க பைபிளின் 4ம் நூற்றாண்டுக் கையெழுத்துப்படி ஒன்று எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
1899 – பிலிப்பீன்ஸ்-அமெரிக்கப் போர் ஆரம்பமானது.
1932 – இரண்டாம் உலகப் போர்: சீனாவின் ஹார்பின் நகரை ஜப்பான் பிடித்தது.
1936 – முதற்தடவையாக ரேடியம் E என்ற செயற்கைக் கதிரியக்க மூலகம் உருவாக்கப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போர் முடிவுக்கு வந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில், ரஷ்யத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் உக்ரேனில் யால்ட்டா மாநாட்டில் சந்தித்தனர்.
1948 – இலங்கை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1957 – திருகோணமலையில் கறுப்புக் கொடியைக் கட்ட முயன்ற திருமலை நடராசன் போலீசாரினால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்.
1966 – ஜப்பான் போயிங் விமானம் டோக்கியோவில் வீழ்ந்ததில் 133 பேர் கொல்லப்பட்டனர்.
1969 – பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவராக யாசர் அரபாத் பதவியேற்றார்.
1976 – குவாத்தமாலா மற்றும் ஹொண்டுராஸ் நிலநடுக்கத்தில் 22,000 பேர் இறந்தனர்.
1978 – இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிபராக ஜே. ஆர். ஜெயவர்த்தனா பதவியேற்றார்.
1997 – இஸ்ரேலில் இரண்டு உலங்குவானூர்திகள் வானில் மோதியதில் 73 பேர் கொல்லப்பட்டனர்.
1998 – ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற 6.1 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 5,000 பேர் கொல்லப்பட்டனர்.
2003 – யூகொஸ்லாவியா அதிகாரபூர்வமாக “சேர்பியா மற்றும் மொண்டெனேகுரோ” எனப் பெயர் மாற்றம் பெற்றது.
2007 – ஒலியை மிஞ்சிய வேகத்தில் செல்லும் ரஷ்ய-இந்திய “பிரமாஸ்” ஏவுகணை ஒரிசா ஏவு தளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
2007 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற உலகின் மிகப் பெரிய கூட்டுப் பிரார்த்தனையில் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
2015 – டிரான்சுஆசியா ஏர்வேசு பறப்பு 235 தாய்வானில் கீலுங் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

பிறப்புகள்

1811 – பீட்டர் ஜூலியன் ஐமார்ட், பிரான்சிய கத்தோலிக்க குரு, புனிதர் (இ. 1868)

1875 – லுட்விக் பிராண்டில், செருமானிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1953)

1891 – மடபூஷிய அனந்தசயனம் அய்யங்கர், இந்திய அரசியல்வாதி, 2வது இந்திய மக்களவைத் தலைவர் (இ. 1978)

1893 – ரேமாண்ட் டார்ட், ஆத்திரேலியத் தொல்லியலாளர். புதை படிவ ஆய்வாளர், உடற்கூறியலாளர் (இ. 1988)

1895 – பி. ஏ. சுப்பையா பிள்ளை, தமிழக நாடக, திரைப்பட நடிகர்

1906 – கிளைட் டோம்பா, புளூட்டோவைக் கண்டுபிடித்த அமெரிக்க வானியலாளர் (இ. 1997)

1913 – றோசா பாக்ஸ், அமெரிக்க மனித உரிமை செயற்பாட்டாளர் (இ. 2005)

1921 – பெட்டி ஃப்ரீடன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2006)

1922 – பீம்சென் ஜோஷி, இந்துஸ்தானி இசைப் பாடகர் (இ. 2011)

1943 – பத்மா சுப்ரமணியம், தமிழக பரத நாட்டியக் கலைஞர்

1943 – கென் தாம்ப்சன், பி நிரலாக்க மொழியைக் கண்டுபிடித்த அமெரிக்கர்

1948 – ராம் பரன் யாதவ், நேபாளத்தின் 1வது குடியரசுத் தலைவர்

1962 – ராஜசேகர், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

1971 – ரோப் கோர்ட்றி, அமெரிக்க நடிகர்

1974 – ஊர்மிளா மடோண்த்கர், இந்திய நடிகை

இறப்புகள்

1693 – ஜான் டி பிரிட்டோ, போர்த்துக்கீச இயேசு சபை குரு (பி. 1647)

1747 – வீரமாமுனிவர், இத்தாலியத் தமிழறிஞர், கிறித்தவ மதப் பரப்புனர் (பி. 1680)

1817 – இமாம் ஷாமில், செச்சினிய முஸ்லிம் அரசியல், சமயத் தலைவர் (பி. 1797)

1894 – அடோல்ப் சக்ஸ், சாக்சபோனைக் கண்டுபிடித்த பெல்ஜியர் (பி. 1814)

1928 – என்ட்ரிக் லொரன்சு, நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (பி. 1853)

1934 – மதுசூதன் தாசு, ஒடிசா கவிஞர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1848)

1946 – எர்பெர்ட்டு பேக்கர், தென்னாப்பிரிக்க கட்டிடக் கலைஞர் (பி. 1862)

1957 – பெரி. சுந்தரம், இலங்கை மலையக அரசியல்வாதி, கல்வியாளர், தொழிற்சங்கத் தலைவர் (பி. 1890)

1974 – சத்தியேந்திர நாத் போசு, இந்திய இயற்பியலாளர், கணிதவியலாளர் (பி. 1894)

1985 – மே. வீ. வேணுகோபாலன், தமிழகப் பதிப்பாசிரியர், நூலாசிரியர் (பி. 1896)

1987 – கார்ல் ரோஜர்ஸ், அமெரிக்க உளவியலாளர் (பி. 1902)

2006 – பெட்டி ஃப்ரீடன், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1921)

2007 – புளியங்குடி க. பழனிச்சாமி, தமிழக அரசியல்வாதி, பேச்சாளர் (பி. 1938)

2014 – அனிருத் லால் நகர், இந்திய பொருளியலாளர் (பி. 1930)

2015 – சின்னமணி, ஈழத்து வில்லிசைக் கலைஞர் (பி. 1936)

2023 – வாணி ஜெயராம், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி (பி. 1945)

சிறப்பு நாள்

விடுதலை நாள் (இலங்கை)

உலகப் புற்றுநோய் நாள்

ஆயுதப் போராட்ட நாள் (அங்கோலா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!