இதுகாதல்மாதம்💞
ரோஸ்டே கொண்டாட்டம்
நல்லறம் என்னும் தூரிகையில்
இல்லறமதை கவிதையாய் தொடுத்து,
வாழ்வெனும் நீள் பாதை பயணத்தில்,
ஒருவர் கரம் ஒருவர் இறுக பிடித்து,
பெண்மை என்னும் புது கவிதை,
தாயெனும் மரபு கவிதையாய் துளிர்த்து,
பூ மழலையொன்று புதிதாய் சேரும் எங்கள் பூ மலர் சோலையிலே
அந்த சோலையில் என்றுமில்லை
இலையுதிர் காலம்
மஞ்சுளாயுகேஷ்

