1 min read

இன்று 7-வது மொபைல் மாநாடு பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைக்கப்பட உள்ளார்…

7-வது இந்திய மொபைல் மாநாடு 2023 (7th Edition of the India Mobile Congress (IMC) 2023) இன்று பிரதமர் மோடியால் டெல்லியில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில், கல்வி நிறுவனங்களுக்கு 100 ‘5ஜி பயன்பாட்டு ஆய்வகங்களை பிரதமர் மோடி வழங்குகிறார். டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று காலை 9:45 மணிக்கு 7 வது இந்திய மொபைல் மாநாடு 2023-ஐ பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், […]

1 min read

டி.சி.எஸ். நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய மகாராஷ்டிரா அரசு! | தனுஜா ஜெயராமன்

சமீபத்தில் டி.சி.எஸ். நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா அரசு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. இது ஐ.டி. துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாடா குழுமத்துக்கு சொந்தமான நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ். நாட்டின் மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான டி.சி.எஸ். நிறுவனத்தில் லட்சக்கணக்கான பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த செப்டம்பர் காலாண்டு இறுதி நிலவரப்படி, டி.சி.எஸ். நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 6.08 லட்சமாக உள்ளது. டி. சி.எஸ். நிறுவனம் தனது தேவைக்கு ஏற்ப தற்போது வேலைக்கு ஆட்களை எடுத்து […]

1 min read

உலக கோப்பை கிரிக்கெட்டில் அரையிறுதிக்கு முன்னேறுமா பாக் அணி ! | தனுஜா ஜெயராமன்

உலகக்கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளனர். வெற்றி பெறும் முனைப்புடன் பாகிஸ்தான் அணி இன்று களமிறங்குகிறது. ஏனெனில் பாகிஸ்தான் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க முடியும். எனவே இன்றைய போட்டி பாகிஸ்தான் அணிக்கு வாழ்வா சாவா ஆட்டம் என்பதில் எந்த சந்தேகமில்லை. களத்தில் பாக் அணி ஆக்ரோஷமாக விளையாடும் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் மிக பலமான அணியாக சிற்ப்பாக விளையாடி வருகிறது தென் ஆப்ரிக்கா . […]

1 min read

சில நிமிடங்களில் ரூ.6 லட்சம் கோடி இழந்த முதலீட்டாளர்கள் ஆடிப்போன இந்திய பங்குச் சந்தைகள்…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் வர்த்தகத்தின் இடையே 900 புள்ளிகள் குறைந்தது. இஸ்ரேல்-ஹமாஸ் போரால் இந்திய பங்குச் சந்தைகள் கடந்த 5 வர்த்தக தினங்களாக சரிவை சந்தித்தது. இன்றும் காலையில் பங்குச் சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் பெரிதாக வெடிக்கும் அபாயம், அமெரிக்க கருவூல பத்திரங்கள் வருவாய் குறித்த கவலை போன்றவை இந்திய பங்குச் சந்தையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தின. இந்திய பங்குச் சந்தைகள் இன்று […]

1 min read

வரலாற்றில் இன்று (26.10.2023)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  […]

1 min read

விண்ணில் பாய்ந்தது ககன்யான் சோதனை ராக்கெட்..!

மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனை இன்று வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து அடுத்தடுத்த சோதனைகளுக்கு இஸ்ரோ தயாராகி வருகிறது. இந்தியா சொந்தமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப வேண்டும் என்று தொடர்ந்து முயன்று வருகிறது. இந்த கனவை சாத்தியப்படுத்த தயாரிக்கப்பட்டதுதான் ககன்யான் திட்டம். எதிர்வரும் காலங்களில் சர்வதேச விண்வெளி நிலையம் கலைந்து போக இருக்கிறது. ரஷ்யாவும், சீனாவும் தங்களுக்கு என தனியான விண்வெளி மையத்தை உருவாக்க இருக்கிறார்கள். விண்வெளி துறையை பொறுத்த அளவில் ரஷ்யா, […]

1 min read

மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யலாமா? | தனுஜா ஜெயராமன்

சிறு முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் பண்டுகள் ஏற்றது. மியூச்சுவல் பண்டுகள் எளிமை, மலிவு மற்றும் பல்வகைப்படுத்தல் ஆகியவற்றை வழங்குகின்றன. மியூச்சுவல் பண்டு என்பது ஒரு முதலீட்டு குழுவினர் பல முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டிய பணத்தை ஒன்றாக சேர்த்து பல வகையான பங்குகள், பாண்டுகள், பணச் சந்தை பத்திரங்களில் முதலீடு செய்வார்கள். இந்தப் பணத்தை தொழில்முறை பண்டு மேனேஜர் ஒருவர் நிர்வகிப்பார். இந்த பண்டின் நோக்கத்தைப் பொறுத்து அவர் முதலீடுகளை கவனித்து வருவார். இதனால் முதலீடுகளின் நீண்ட கால வளர்ச்சிக்கு […]

1 min read

ரோல்ஸ் ராய்ஸ்க்கே இந்த நிலையா? |தனுஜா ஜெயராமன்

ரோல்ஸ் ராய்ஸ் ஹோல்டிங்ஸ் அதன் புதிய தலைமை நிர்வாகியின் கீழ் இந்நிறுவனம் செலவின குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக விரைவில் சுமார் 2,500 ஊழியர்களை பணிநீக்க செய்ய உள்ளது என ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது. இந்த பணிநீக்கம் மூலம் நூற்றுக்கணக்கான இங்கிலாந்து ஊழியர்களை பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. உலகின் ஆடம்பர கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாக விளங்கும் ரோல்ஸ் ராய்ஸ், கடந்த சில வருடங்களாக டெஸ்லா-வின் வெற்றியை தொடர்ந்து எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் […]

1 min read

பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா! | தனுஜா ஜெயராமன்

உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடிய வார்னர் 163 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவர் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் இரட்டை சதம் அடிக்க வாய்ப்பிறந்தது. அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொதப்பலாக விளையாடினர். இதனால் 400 ரன்கள் குவிக்க வேண்டிய ஆஸ்திரேலியா 367 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி 5 விக்கெட்டுகளையும் […]

1 min read

ஒரே வாரத்தில் இழுத்து மூடப்பட்ட தமிழ்நாடு- இலங்கை கப்பல் போக்குவரத்து…

தமிழ்நாடு – இலங்கை இடையே தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து ஒரே வாரத்தில் நிறுத்தப்பட்டுவிட்டது. வடகிழக்கு பருவமழை முடிவடைந்த பின்னர் ஜனவரி மாதம்தான் மீண்டும் இந்த பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து “கூப்பிடு” தொலைவில்தான் இலங்கையின் தமிழர் பகுதிகள் உள்ளன. 40,50 ஆண்டுகளுக்கு முன்னர் இரு நிலப்பரப்புகளுக்கு இடையே கடல்சார் வர்த்தகம், பயணிகள் போக்குவரத்து இயல்பானதாக இருந்தது. இலங்கை ராணுவத்துக்கும் ஈழத் தமிழருக்கும் இடையேயான உள்நாட்டு யுத்தம் ஒட்டுமொத்தமாக அத்தனையையும் தலைகீழாகப் […]