மஹாராஷ்டிராவுக்கு கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்..!
வளர்ச்சி திட்டங்களுக்காக மஹாராஷ்டிராவுக்கு ரூ.1,595 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக இன்று மாலை பதவியேற்க இருக்கிறார்.
இந்த நிலையில், மஹாராஷ்டிராவுக்கு ரூ.1,595 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. பின்தங்கிய மாவட்டங்கள் உள்பட மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக இந்த நிதி ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், அரசின் ஆன்லைன் சேவைகளை மேம்படுத்துவதன் மூலம், சுற்றுலா மற்றும் தொழில்துறையில் தனியாரின் பங்களிப்பு அதிகரிக்க வழிவகை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்காக உலக வங்கியால் வழங்கப்படும் இந்தக் கடனை செலுத்துவதற்கான கால அவகாசம் 15 ஆண்டுகளாகும். 5 ஆண்டுகள் கருணை காலம் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.