நெல் திருவிழா கண்ட நெல் ஜெயராமன் அவர்களின் நினைவு தினம்..

 நெல் திருவிழா கண்ட நெல் ஜெயராமன் அவர்களின் நினைவு தினம்..

நெல் திருவிழா கண்ட நெல் ஜெயராமன் அவர்களின் நினைவு தினம்..

திருத்துறைப்பூண்டி, கட்டிமேடு ஆதிரெங்கத்தை சேர்ந்தவர் ஜெயராமன் என்ற விவசாயி.நஞ்சில்லா உணவை தரவேண்டும் என்ற எண்ணம் தோன்ற அய்யா நம்மாழ்வாரை சந்தித்து இருக்கிறார்.அதையடுத்து நஞ்சில்லா உணவை மக்களுக்கு வழங்குவதற்கான செயல்பாட்டில் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்.

ஒரு முறை நம்மாழ்வார் அய்யாவோடு, பூம்புகாரிலிருந்து கல்லணை செல்லும் வழியில் வடுகுர் கிராமத்தில் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் திரு. ராமகிருஷணன் அவர்கள்‌ வீட்டிற்கு சென்று இருக்கிறார் ஜெயராமன் .விடைபெறும்போது, ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு‌ மஞ்சள் பையை கொடுத்திருக்கிறார்,திறந்து பார்த்தால் காட்டு ஆனம் விதை நெல்.

தான் பாரம்பரியமாக காட்டு ஆனம் பயிர் செய்வதாகவும், அறுவடையின் போது நீர் நிறைந்து விட்டால், படகில் சென்று அறுவடை செய்வோம் என்றும், எப்படியாவது இந்நெல்லை வருங்கால சந்ததியினருக்கு சேர்த்துவிட வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.அன்றே, தொடர்ந்த பயணத்தில் மேலும் ஏழு வகையான பாரம்பரிய விதை நெல் கிடைத்திருக்கின்றன.அப்போது, நம்மாழ்வார் அய்யா, ஜெயராமன் அவர்களைப் பார்த்து இன்று முதல் பாரம்பரிய நெல்லை மீட்கும் பணியை நீங்கள் செய்யுங்கள் என்றும் 🌾நெல் ஜெயராமன்🌾என்று அழைக்கப்படுவீர்கள், என்றும் கூறி வாழ்த்தி இருக்கிறார்.

அன்று முதல் பாரம்பரிய நெல் விதைகளை சேகரிப்பதோடு, அதன் பயன்கள், தன்மைகளை கேட்டறிந்ததோடு, பரிசோதனை மூலம் உறுதி செய்து, தானே அந்நெல் வகைகளை சாகுபடி செய்து, மகசூல் எவ்வளவு என்பது வரை உறுதி செய்த பின்னரே விதை நெல்லாக, ஆண்டுதோறும் ஆதிரெங்கத்தில் நடைபெறும் 🌾நெல் திருவிழா🌾வில் விவாசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வந்தார்.

சுமார் 170 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்துள்ளார்.

  1. 🌾அன்னமழகி
  2. 🌾அறுபதாங்குறுவை
  3. 🌾பூங்கார்
  4. 🌾கேரளா ரகம்
  5. 🌾குழியடிச்சான் (குழி வெடிச்சான்)
  6. 🌾குள்ளங்கார்
  7. 🌾மைசூர்மல்லி
  8. 🌾குடவாழை
  9. 🌾காட்டுயானம்
  10. 🌾காட்டுப்பொன்னி
  11. 🌾வெள்ளைக்கார்
  12. 🌾மஞ்சள் பொன்னி
  13. 🌾கருப்புச் சீரகச்சம்பா
  14. 🌾கட்டிச்சம்பா
  15. 🌾குருவிக்கார்
  16. 🌾வரப்புக் குடைஞ்சான்
  17. 🌾குறுவைக் களஞ்சியம்
  18. 🌾கம்பஞ்சம்பா
  19. 🌾பொம்மி
  20. 🌾காலா நமக்
  21. 🌾திருப்பதிசாரம்
  22. 🌾அனந்தனூர் சன்னம்
  23. 🌾பிசினி
  24. 🌾வெள்ளைக் குருவிக்கார்
  25. 🌾விஷ்ணுபோகம்[19]
  26. 🌾மொழிக்கருப்புச் சம்பா
  27. 🌾காட்டுச் சம்பா
  28. 🌾கருங்குறுவை
  29. 🌾தேங்காய்ப்பூச்சம்பா
  30. 🌾காட்டுக் குத்தாளம்
  31. 🌾சேலம் சம்பா
  32. 🌾பாசுமதி
  33. 🌾புழுதிச் சம்பா
  34. 🌾பால் குடவாழை
  35. 🌾வாசனை சீரகச்சம்பா
  36. 🌾கொசுவக் குத்தாளை
  37. 🌾இலுப்பைப்பூச்சம்பா
  38. 🌾துளசிவாச சீரகச்சம்பா
  39. 🌾சின்னப்பொன்னி
  40. 🌾வெள்ளைப்பொன்னி
  41. 🌾சிகப்புக் கவுனி
  42. 🌾கொட்டாரச் சம்பா
  43. 🌾சீரகச்சம்பா
  44. 🌾கைவிரச்சம்பா
  45. 🌾கந்தசாலா
  46. 🌾பனங்காட்டுக் குடவாழை
  47. 🌾சன்னச் சம்பா
  48. 🌾இறவைப் பாண்டி
  49. 🌾செம்பிளிச் சம்பா
  50. 🌾நவரா
  51. 🌾கருத்தக்கார்
  52. 🌾கிச்சிலிச் சம்பா
  53. 🌾கைவரச் சம்பா
  54. 🌾சேலம் சன்னா
  55. 🌾தூயமல்லி
  56. 🌾வாழைப்பூச் சம்பா
  57. 🌾ஆற்காடு கிச்சலி
  58. 🌾தங்கச்சம்பா
  59. 🌾நீலச்சம்பா
  60. 🌾மணல்வாரி
  61. 🌾கருடன் சம்பா
  62. 🌾கட்டைச் சம்பா
  63. 🌾ஆத்தூர் கிச்சிலி
  64. 🌾குந்தாவி
  65. 🌾சிகப்புக் குருவிக்கார்
  66. 🌾கூம்பாளை
  67. 🌾வல்லரகன்
  68. 🌾கௌனி
  69. 🌾பூவன் சம்பா
  70. 🌾முற்றின சன்னம்
  71. 🌾சண்டிக்கார் (சண்டிகார்)
  72. 🌾கருப்புக் கவுனி
  73. 🌾மாப்பிள்ளைச் சம்பா
  74. 🌾மடுமுழுங்கி
  75. 🌾ஒட்டடம்
  76. 🌾வாடன் சம்பா
  77. 🌾சம்பா மோசனம்
  78. 🌾கண்டவாரிச் சம்பா
  79. 🌾வெள்ளை மிளகுச் சம்பா
  80. 🌾காடைக் கழுத்தான்
  81. 🌾நீலஞ்சம்பா
  82. 🌾ஜவ்வாதுமலை நெல்
  83. 🌾வைகுண்டா
  84. 🌾கப்பக்கார்
  85. 🌾கலியன் சம்பா
  86. 🌾அடுக்கு நெல்
  87. 🌾செங்கார்
  88. 🌾ராஜமன்னார்
  89. 🌾முருகன் கார்
  90. 🌾சொர்ணவாரி
  91. 🌾சூரக்குறுவை
  92. 🌾வெள்ளைக் குடவாழை
  93. 🌾சூலக்குணுவை
  94. 🌾நொறுங்கன்
  95. 🌾பெருங்கார்
  96. 🌾பூம்பாளை
  97. 🌾வாலான்
  98. 🌾கொத்தமல்லிச் சம்பா
  99. 🌾சொர்ணமசூரி
    100.🌾பயகுண்டா
    101.🌾பச்சைப் பெருமாள்
    102.🌾வசரமுண்டான்
    103.🌾கோணக்குறுவை
    104.🌾புழுதிக்கார்
    105.🌾கருப்புப் பாசுமதி
    106.🌾வீதிவடங்கான்
    107.🌾கண்டசாலி
    108.🌾அம்யோ மோகர்
    109.🌾கொள்ளிக்கார்
    110.🌾ராஜபோகம்
  100. 🌾செம்பினிப் பொன்னி
  101. 🌾பெரும் கூம்பாழை
  102. 🌾டெல்லி போகலு
  103. 🌾கச்சக் கூம்பாழை
  104. 🌾மதிமுனி
  105. 🌾கல்லுருண்டையான் (கல்லுருண்டை)
  106. 🌾ரசகடம்
  107. 🌾கம்பம் சம்பா
  108. 🌾கொச்சின் சம்பா
  109. 🌾செம்பாளை
  110. 🌾வெளியான்
  111. 🌾ராஜமுடி
  112. 🌾அறுபதாம் சம்பா
  113. 🌾காட்டு வாணிபம்
  114. 🌾சடைக்கார்
  115. 🌾சம்யா
  116. 🌾மரநெல்
  117. 🌾கல்லுண்டை
  118. 🌾செம்பினிப் பிரியன்
  119. 🌾காஷ்மீர் டால்
  120. 🌾கார் நெல்
  121. 🌾மொட்டக்கூர்
  122. 🌾ராமகல்லி
  123. 🌾ஜீரா
  124. 🌾சுடர்ஹால்
  125. 🌾பதரியா
  126. 🌾சுதர்
  127. 🌾திமாரி கமோடு
  128. 🌾ஜல்ஜிரா
  129. 🌾மல் காமோடு
  130. 🌾ரட்னசுடி
  131. 🌾ஹாலு உப்பலு
  132. 🌾சித்த சன்னா
  133. 🌾வரேடப்பன சேன்
  134. 🌾சிட்டிகா நெல்
  135. 🌾கரிகஜவலி
  136. 🌾கரிஜாடி
  137. 🌾சன்னக்கி நெல்
  138. 🌾கட்கா
  139. 🌾சிங்கினிகார்
  140. 🌾செம்பாலை
  141. 🌾மிளகி
  142. 🌾வால் சிவப்பு
  143. 🌾சித்திரை கார்
  144. 🌾சிவப்பு சித்திரை கார்
  145. 🌾முருங்கைக் கார்
  146. 🌾நூற்றிப் பத்து
  147. 🌾கள்ளிமடையான்
  148. 🌾குதிரைவால் சம்பா
  149. 🌾சின்னச் சம்பா
  150. 🌾பிச்சாவரை
  151. 🌾வெள்ளை குறுவை கார்
  152. 🌾சூரன் குறுவை
  153. 🌾சூலை குறுவை
  154. 🌾சிவப்புக் கவுணி
  155. 🌾மிளகுச் சம்பா
  156. 🌾கார்
  157. 🌾உவர்முண்டான்
  158. 🌾ஒட்டடையான்
  159. 🌾களர் பாலை
  160. 🌾கூம்வாளை
  161. 🌾முட்டைக்கார் (முட்டக்கார்)
  162. 🌾பெருங்கார்.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...