நெல்சன் மண்டேலா காலமான நாளின்று!

 நெல்சன் மண்டேலா காலமான நாளின்று!

நெல்சன் மண்டேலா காலமான நாளின்று!

தென்-ஆபிரிக்காவில் பிறந்து அப்போது அந்நாட்டை ஆண்ட வெள்ளையர்-மட்டும் என்ற ஆட்சிக்கு எதிராக அகிம்சை முறையில் போராடி 27 வருடங்கள் சிறை சென்று இறுதியில் அந்நாட்டின் ஜனாதிபதியான நெல்சன் மண்டேலா தனது 95 ஆவது வயதில் இதே டிசம்பர் 5ல் காலமானார்.

1918 ஆம் ஆண்டு July 18 ஆம் தேதி பிரித்தானியர் ஆட்சியின் கீழ் பிறந்த இவர் 1962 இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தே போராட்டத்தில் ஈடுபட்ட இவர், விடுதலை செய்யப்பட்டு 1994 ஆம் ஆண்டில் அந்நாட்டின் முதலாவது கருப்பு இன ஜனாதிபதியானார்.

இவருக்கு 1993 ஆம் ஆண்டில் சமாதானத்துக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டிருந்தது.

உலகெங்கும் 50 இக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவ பட்டங்களை வழங்கியுள்ளன.🦉

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...