13. தேரும் காஞ்சியும் தொண்டை மண்டலத்தின் காஞ்சி நகர் விழாக்கோலம் பூண்டிருந்தது. நகரம் முழுவதும் உள்ள வீடுகள், மாளிகைகள், அரண்மனை போன்ற அனைத்து இடங்களிலும் தோரணங்கள் மாவிலைகள், நறுமணம் கமழும் மலர் மாலைகள், வாயிலில் மாட்டுச் சாணம் தெளித்து அழகிய பெரும் கோலங்கள் என காட்சியளிக்க மேலும் சில பெண்கள் ஈரத்தலையுடன் கோலம் போட்டபடி ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக காணப்பட்டார்கள். வீதிகள் எங்கும் இருபுறமும் பாண்டியர்களின் கயல் கொடிகளுடன் சோடர்களின் கொடிகள் பல நட்டு வைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலும் […]Read More
Tags :வில்லரசன்
12. விடைபெற்றனர் முடிந்தளவு முத்தக் கடலில் நீந்தி நனைந்து காதல் தீவில் கரை ஒதுங்கி படுத்துக் கிடந்தார்கள் மின்னவனும் பொற்கயலும். இரவு முழுவதும் துணையாக இருந்த இருள் மெல்ல மெல்ல விலகி இவர்கள் இருப்பைக் காட்டிக் கொடுக்க முயன்று கொண்டிருந்தான். அதற்கு ஏற்ப பனிப்பகையனும் வீறுகொண்டு எழுந்தவண்ணம் இருந்தான். அதை உணர்ந்த மின்னவன் தன் வலக்கையைத் தலையணையாகக் கொண்டு படுத்துக்கிடக்கும் பொற்கயலிடம், “பொழுது விடிந்துவிட்டது முத்தே!” எனச் சொல்லிவிட்டு பொற்கயலின் தலையை வருடிக் கொண்டிருந்தவன் தன் விரல்களை […]Read More
11. பொலிவிழந்த பொன்மான் வழக்கமாக அந்த நந்தவனத்தில் பொற்கயல் காத்துக்கிடப்பதையே கண்டு பழக்கப்பட்டிருந்த குளத்தின் வண்ண மீன்கள், வண்ணக் கோழிகள், ஆந்தைகள், பூக்கொடிகள் போன்றவை அங்கு வழக்கத்திற்கு மாறாக மின்னவன் வானைப் பார்த்தபடி படுத்துக் கிடப்பதைப் கண்டு ஒன்றுக்கு ஒன்று கிசுகிசுக்கத் தொடங்கின. “என்ன அதிசயமாக இருக்கிறது? இவன் எப்பொழுதும் தாமதமாக வருபவன் ஆயிற்றே! இன்று பொழுது சாய்ந்ததும் முதலாக வந்து அவளுக்காக காத்திருக்கிறான்!” “அதுதான் எனக்கும் புரியவில்லை! பொறு அவள் வரட்டும்! என்னவென்று பார்ப்போம்” என்று […]Read More
10. குலசேகரனின் குறுவாட்கள் மீன் வடிவ கைப்பிடியைக் கொண்ட தன் இரும்பு வளரிகளைத் தலைகீழாகப் பிடித்து முழங்கையில் ஒட்டி உறுதியாகவும் திடமாகவும் எதிரிலிருக்கும் பயிற்சி கட்டையைத் தாக்கிக் கொண்டிருந்தான் மின்னவன். ஒரு மனிதனின் உயரத்தை ஒத்த அந்தப் பயிற்சி கட்டையில் மின்னவனின் வசி மிகுந்த வளரிகள் மரங்கொத்தியைப் போல் பல பொத்தல்களை ஏற்படுத்தின. பெரும்பாலும் பல வீரர்கள் தங்கள் வளரிகளை எறி ஆயுதமாக எறிவதற்கு பயன்படுத்தும் நிலையில் மின்னவன் அவற்றை எறி ஆயுதமாக மட்டுமில்லாமல் பிடி ஆயுதமாகவும் […]Read More
9. விழா அழைப்பு சோழ மன்னனைச் சந்திக்க வேண்டி புறப்பட்ட வளவன், அரண்மனை வீதியை அடைந்ததும் அவன் கண்களுக்கு யாரோ ஒருவன் இருளில் பதுங்கிப் பதுங்கி செல்வதைப் போல் தெரியவே, சத்தமிடாமல் அந்த உருவத்தைப் பின் தொடர்ந்து சென்றான். இரண்டு மூன்று வலது இடது வளைவுகளைக் கடந்த பிறகு அந்த உருவம் அரண்மனையை அடைந்தது. இதற்குமேல் அவ்வுருவத்தை அரண்மனைக்குள் அனுமதிப்பது ஆபத்தாகிவிடும் என உணர்ந்த வளவன் விரைந்து சென்று அந்த உருவத்தைத் தன் கம்பளிப் போர்வையால் போர்த்தி […]Read More
8. வளவனின் வருத்தம் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தான் சோழநாட்டின் படைத்தலைவன் வளவன். பேயறைந்தது போல் திகிலுடன் காணப்பட்ட அவன் முகத்தில் வியர்வைத் துளிகள் முத்து முத்தாய் நிறைந்திருந்தன. மூச்சுக்காற்று முழுவதுமாய் வாய் மற்றும் நாசி வழியே பயணிக்க முடியாத வண்ணம் வேகமெடுத்ததால் வளவனுக்கு மேலும் ஒரு நாசி தேவைப்பட்டது. காணக்கூடாத கனவுகள் எதையும் அவன் கண்டிடவில்லை. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து திடீரென ஒரு விழிப்பு வந்துவிட்டது. ஏன் விழித்தோம் எதற்காக விழித்தோம் என வளவனுக்குப் புரியவில்லை. மூச்சுக்காற்று […]Read More
7. பெருவுடையாரே! நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை நகரமானது இரவு ஏறிவிட்ட காரணத்தால் தன் குடிகளுக்குத் தாலாட்டு பாடி உறங்க வைத்துக்கொண்டிருந்தது. பகல் பொழுதெல்லாம் பலதரப்பட்ட தொழில்களில்…. பெரும்பாலும் விவசாய நிலங்களில் கடினமான உழைப்பைச் சிந்தும் அந்த தஞ்சை வாழ் மக்கள் வெய்யோன் விழுந்ததுமே வயிற்றுக்குச் சிறிது கருணை காட்டி விட்டு நித்திரையை நாடத் தொடங்கினார்கள். இயற்கைத் தாயின் மடியில் தவழ்ந்து விளையாடும் குழந்தைகள் அல்லவா நம் விவசாயக் குடிமக்கள்..? தாயான நிலத்துடன் விளையாடி முடித்த […]Read More
6. யார் குற்றம்..? சூறாவளியாக மதுரைக் கோட்டைக்குள் தனது புரவியை செலுத்தினான் இராவுத்தன். வளர்ந்த உடலும், சிவந்த மேனியுமாய் மீசையின்றி அடர்ந்த பிடரியை வைத்திருந்த இராவுத்தன் தங்களை நோக்கி அதிவேகத்தில் புரவியில் வருவதைக்கண்ட மதுரைவாசிகள் அனைவரும் திடுக்கிட்டு வழி கொடுத்து நகர்ந்தனர். மணல் புழுதியை கிளப்பிவிட்டு கடந்து செல்லும் அவனை, “அடேய்! அப்படி என்ன அவசரம் உனக்கு..?” என்று வீதியின் ஓரம் பணியாரம் விற்கும் கிழவி ஒருத்தி கடிந்து கொள்ளவும் செய்தாள். கண்மூடித்தனமாகக் கடிவாளம் இருந்தும் இல்லாதது […]Read More
5. வைகை அம்மன் “தந்தையே, பார்த்து பொறுமையாக வாருங்கள்!” எனத் தன் தந்தையை அணைத்துப் பிடித்து தாங்கிக் கொண்டு மதுரைக் கோட்டையின் புறநகர் தெருவில் நடந்தாள் மாதங்கி. மாதங்கி ஓர் அழகிய பெண். ஏழ்மையானவள். நேர்மையானவள். இந்த இளம் வயதிலும், உடம்பிற்கு முடியாத தன் தந்தையைக் காப்பாற்ற மதுரைக் கோட்டைக்குள் காய்கனிகளை விற்று, அதில் ஈட்டும் பணத்தில் தந்தையையும் தன்னையும் பார்த்துக் கொள்கிறாள். மதுரையில் யாரைக் கேட்டாலும் மாதங்கியைப் பற்றி இப்படித்தான் சொல்வார்கள். மதுரைக் கோட்டைக்கு வடக்கே […]Read More
4. மாவலிவாணராயன் பாண்டியர்களின் மதுரை நகரம் தான் இப்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் தலைநகரம். சோழர்களும், சேரர்களும் பாண்டியப் பேரரசின் கீழ் அடிபணிந்து விட்டதின் விளைவுதான் ஒட்டுமொத்த தமிழகத்தின் தலைநகரமாக மதுரைக்கு முடி சூட்டியது. அதுமட்டுமின்றி பழம்பெரும் பாரம்பரியத்தைக் கொண்ட பாண்டியர்களது மதுரை நகரமானது தமிழகத்தின் பெரும் வாணிபத் தளமாகவும் செயல்பட்ட வண்ணம் இருந்தது. அல்லங்காடி, பகலங்காடி என இடைவிடாமல் வணிகம் நடந்து கொண்டிருப்பதால் பல நாட்டவரும் மதுரை வீதிகளில் பொருட்களை விற்பது, வாங்குவது எனக் கூட்டம் கூட்டமாகக் […]Read More