திரு பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் கதைப்போம் 2025 வாசகர்கள் விழா, மற்றும் PKP அவர்களின் புத்தகங்கள் வெளியீடு CUM PKP அவர்களின் தாய் தந்தையர் பெயரில் அறிவித்த சிறுகதைப் போட்டி பரிசுகள் வழங்கிய விழா!
சிறப்பு நிகழ்வுகள்
விழா அழைப்பில் காலைல 9.30மணிக்கு என்று போட்டிருந்ததால் வீட்டிலிருந்து 7.45 க்கு கிளம்பல். அரங்கில் நுழையும் போதே மத்தியமர் நண்பர்கள் ரத்தினவேல் பாண்டியன், கொளரிசங்கர், அனந்த்ரவி ஆகியோரின் உற்சாக வரவேற்பு. கூடவே அனந்த்ரவி அவர்கள் தான் கொண்டு வந்த பிளாஸ்க் கிலிருந்து சுவையான வீட்டு காபி. உள்ளே செல்லும் போது விழா ஏற்பாடுகள் பர பர வென்று போய்க்கொண்டு இருந்தது.
கணேஷ் பாலா, இங்க வாங்க…இந்த ஸ்டிக்கரை பிரித்து கொடுங்கள் விருந்தினர் பெயர்களை இந்த இருக்கை களில் ஒட்டலாம் என்றார்.
இங்கே நாங்கள் ஸ்டிக்கர் பெயர்களை ஒட்ட, அந்த பக்கம் அரங்கின் சுவர்களில் PKP யின் நண்பர்கள் போஸ்டர்களை ஒட்ட, புஸ்தகா ராஜேஷ் உடன் வந்திருந்த அலுவலர் கள் புஸ்தகங்களை அடுக்க, நண்பர் கவிஞர், பேச்சாளர் தயாளன் லேப்டாப் மூலம் ஒளி ஒலி களை சிதறவிட்டு ஒத்திகை பார்க்க..,
பத்து பர பர நிமிடங்களில் அரங்கம் தயாரானது.
பண்பாளர் உதயம் ராம் அவர்கள் மைக் பிடித்து நிகழ்ச்சி ஆரம்பத்தை அறிவித்தார்.
ஆரம்பத்திலேயே அரங்கு நிரம்பி விட்டது. திருமதி சாந்தி பிரபாகர் நீராரும் கடலுடுத்ததமிழ் அன்னையை வாழ்தினார். பின்னர்,காஷ்மீர் பஹல்காம் பகுதியில் கொலையுண்ட 26 பேருக்கு மௌனஅஞ்சலி செலுத்தி தேசாஞ்சலி செய்யப்பட்டது

PKP அறிமுக உரையில்தன் தாய் தந்தை பெயரில்
சிறுகதை தொடங்க காரணம் அவர் தந்தை அந்த காலத்திலே வீடு நிறைய வாங்கி வைத்த சஞ்ஜிகைகள் மூலம் தான் வாசிக்கும் பழக்கம் கொண்டு இன்று இந்த நிலைக்கு வந்ததை குறிப்பிட்டார்.
இது முதல் வருட நிகழ்ச்சி என்றும், சிறுகதைகள் மட்டுமல்லாமல் வெவ்வேறு ஜோனார்களில் பல போட்டிகள் நடத்தி பலரை யும் அடுத்தக்கட்டநகர்வுக்கு கொண்டு செல்லவிருப்பதை சொன்னார்.
சாகித்திய ஆகாடமியிலும் கதை மட்டுமல்லாமல் பிற இலக்கியங்களுக்கும் விருது வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேடையில் இருந்த நபர்களைப் பற்றிய அறிமுக உரையில்,
சுபா (சுரேஷ் பாலா) பன்முகத் தன்மையாளர்கள், சைலண்ட் பவர் உள்ளவர்கள் என்று புகழாரம்சூட்டிவிட்டு, வேதாகோபாலன் அவர்கள் ஆரம்ப காலத்திலிருந்தே சிறந்த தோழி என்றும் சொன்னார்.
பாக்கெட் நாவல் அசோகன் தம்முடன் வலுவான நட்புடன் இருப்பதை சொல்லி தனக்காக ‘நாவல் டைம்’ கொண்டு வந்ததை சொல்லி பாராட்டினார்.
எழுத்தாளர் ரவி பிரகாஷ்.. அவர்களை வணங்குகிறேன் என்று சொல்லி, சாவி, ஆனந்த விகடன் பாலசுப்ரமணியன் ஆகியோரின் ரெப்ரசென்டேடிவ்வாக அவரை பார்க்கிறேன் என்றார்.
புஸ்தகா ராஜேஷ் அவர்களை சமீபத்திய சாதனையாளர் என்றும் பல மொழிகளில் பல வடிவங்களில் இலக்கியத்தை கொண்டு செல்லும் வித்தகர் என்று பாராட்டினார்.
பலமுக்கிய இலக்கிய ஆளுமைகளை அறிமுக படுத்திய லேனா அவர்கள் எனக்கும் ஒரு ஆசான் போன்றவர் என்று கூறி கல்கண்டில் அவர் வெளியிட்டகட்டுரைகள் அதன் வீச்சு கதைகளைக் காட்டிலும் சிறப்பானது என்றார்.
அறிமுக உரை யை தொடர்ந்துபுத்தக வெளியீடு நடந்தேரியது. அனைவருக்கும் மணி மாலைகளும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சயின் ஊடே கவிஞர் தயாளன் சில அதிரடி இசையை ஒலித்து நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார்.
கணேஷ் பாலா…கேள்வி பதில் பற்றி பேசும் போது பத்திரிகை களில் கேள்வி பதில் பகுதியில் எழுதுபவர்கள் தராசு, கடுகு, உப்பு, உளுத்தம் பருப்பு என்ற பெயர் களில் எழுதுவது ஏதாவது தவறான சூழ்நிலை வரும் போது நானில்லை என்று தப்பிக்க ஒரு வழி என்று நகைச்சுவை யுடன் சொன்னார்.

இந்த கேள்வி பதில் பகுதியால் வாசகர்களுக்கு என்ன சுவை கிடைக்கிறது, ஏன் எழுதுகிறார்கள்…… ஒருவேளை பதிலில் ஒரே அலை வரிசையில் வாசகரும் பயணிக்கிறார் என்று அவர்கள் சந்தோஷிக்கலாம் என்றார்.
ஒரு முறை ராஜேஷ் குமார் ஒரு வாசகரை பார்த்து ஒரு கார்ட்டில் 25 கேள்வி…கேட்டவர்தானே என்று நினைவு கூர்ந்ததை சொன்னார் கணேஷ் பாலா ‘பதில் மரியாதை’ நல்லதலைப்பு என்றும் பாராட்டினார்.
அடுத்தது மெயின் நிகழ்ச்சி.
பத்தமினி பட்டாபிராம் அவர்கள் முதல், இரண்டு,மூன்று பரிசுகளை வழங்கினார். இடையே அவையோர் கலைந்து விடாமல் இருக்க இறுதியில் பேச விருக்கும் நட்சத்திரப் பேச்சாளர் லேனா பேச்சிலிருந்து வினா கேட்கப்பட்டு பரிசு வழங்கப்படும் என்று உதயம் ராம் அவையோருக்கு தூண்டில் போட்டார். தேர்வு குழுவினர் சிறந்த கதைகளை வெவ்வேறு கதை களங்களில் தேர்ந்தெடுத்த விவரங்களை PKP சொன்னார். வந்த 734 கதைகளில் 15 தேர்ந்தெடுக்க ஒரு டீம் சேர்த்து அதில் வாசகர்கள் எட்டுபேரும் எழுத்தாளர்கள் நான்குமாக 12 பேர் செயல் பட்டதையும்இறுதியில் 4 மணி நேரம் பரிசு குழு வெகு ஈடுபாட்டுட்டன்செயல் பட்டதையும் பாராட்டினார் PKP.
எழுத்தாளர் மோகன் தாஸ் அவர்கள் தேர்வு குழுவினருக்கு பரிசளித்தார். PKP மோகன் தாஸ் அவர்களுக்கு நினைவு பரிசளித்து கொளரவித்தார். சிறப்பு விருந்தினராக வந்திருந்த இயக்குனர் SP முத்துராமன் அவர்களும் வெற்றியாளர்களுக்கு மாலை அணிவித்தார். பரிசு பெற்றவர்களில் இயக்குனர்மணி பாரதி குறிப்பிடத் தக்கவர். ரவி பிரகாஷ் தன் உரை யில் புதிய எழுத்தாளர்களுக்கு பல எழுத்து உத்திகளை சொல்லிக் கொடுத்தார். எழுதிய உடனே அனுப்பக்கூடாது என்றார்.
ஸ்ரீ வேணுகோபாலன் அவர்கள்யார் வந்து கதை கேட்டாலும், வந்தவர் எந்த பத்திரிகை எந்த கதை அதன் கடைசி பேரா என்ன வென்று கேட்டு அடுத்த பத்து பதினைந்து நிமிடங்களில் கதையை டிக்டேட் செய்து விடுவார் என்றும், ஒரு ரோபோ போல செயல் பட்டார் என்பதையும் சொல்லி, அவரது எழுத்து அனுபவம் அத்தகைய திறமையை அவருக்கு கொடுத்தது என்றார்.

புதியதாக எழுதுபவர்களும் சரி, சில பத்திரிகை யில் பணி புரிந்து எழுதுபவர்களும் சரி வாக்கியங்களையும், வார்த்தைகளையும் சரியாக உபயோகிக்கதெரியாமல் அனர்த்தம்வரும் படி எழுது வதை சொல்லி வருத்தப்பட்டார்.
வேதா மேடம் அவர்கள் நிறுத்தி நிதானமாக குழந்தைகளுக்கு பாடம் எடுக்கும் டீச்சர் போன்று பணிவுடன் பேசி அனைவருக்கும் தன் மரியாதை கலந்த நட்பை சொன்னார். எழுதுபவர்கள் அரை புள்ளி காற் புள்ளி வைத்து எழுதுவதற்கு பயிற்சி எடுக்க வேண்டும் என்றார்.
சுரேஷ் பாலா.. இருவரும் கதாசிரியர், கதை இரண்டையும் பிரிக்க முடியாது..என்றும் கதையில் சுவாரசியம் தான் வேண்டும் என்றும் நெருக்கமா இருப்பவரின் அனுபவங்கள் கதைகளில் வந்தால் சில சிக்கல் வரும் எனவே வெளி அனுபவங்களில் நிறைய கதை கிடைக்கும் என்றார்கள்.
புத்தகா ராஜேஷ் அற்புதமான தகவல்கள் சொன்னார். பழைய தலைமுறைகளை பற்றிஆரம்பித்து ஜெனெரேஷன் ஆல்பா பீட்டா வரை சொல்லி, இன்றைய தலைமுறை யினர் எப்படி பட்ட வகை படிப்பாளர்கள் என்றும் 80 % புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளவர்களாக அவர்கள் இருப்பதையும் சொன்னார். புத்தகவிற்பனை அதிகமாக இருப்பதை புள்ளி விவரத்துடன் சொன்னார். E commerce book விற்பனையில் இன்றைய தலைமுறை க்கு புத்தகம் சீக்கிரம் கிடைக்கின்றன. ONLINE விற்பனையும் வேகமாக வளருகிறது என்றார். 2029 ல் 50% புத்தகங்கள் விற்பனை கண்டிப்பாக கூடும் என்றார்.

லேனா இது ஒரு இலக்கிய காலை என்று ஆரம்பித்தார். இன்றைய எழுத்தாளர் களிடயே சிறு சிறு சண்டைகள் கூட வரலாம் ஆன பொறாமை போட்டி எல்லாம் கிடையாது. நல்ல ஒற்றுமை இருக்கு என்று பாராட்டினார். கட்டுரை களும் விளைவுகளும் பற்றி சொல்லும் போது நாவல், கவிதை எல்லாம் தாம் ஆரம்பத்தில் முயற்சி செய்ததையும் பிறகு பயணகட்டுரை, வாழ்வியல் சிந்தனை கட்டுரைகள் எழுதி வெற்றி பெற்றதைச் சொல்லி கட்டுரைகள் எளிதாக வாசகர்களை அடைகிறது என்றார். 1550 வாரம் தொடர்ந்து கட்டுரை எழுத முடிகிறது கட்டுரை எழுதியே 20 ஆண்டுகள் பயணம் செய்து இருக்கிறேன் என்றார். தனது ஒரு பக்க கட்டுரை எல்லை தாண்டி டெல்லி, மும்பை வரை சென்றது என்றார் வாசகரின் தற்கொலை எண்ணத்தை தவிர்க்க வைத்தது தம் கட்டுரை என்றார். நடிகர் ராஜேஷ், மூப்பானார், குன்றக்குடி அடிகள்,பெரியார் தாசன் சத்யராஜ் ஆகியோர்தம் கட்டுரையை பாராட்டியதையும் சொன்னார்.
லேனா அவர்களின் பேச்சிலிருந்து கேட்ட கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான விடை அளித்தவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு கள் வழங்கினார்கள்.
வந்திருந்த அவையோருக்கு அதிர்ஷ்ட பரிசாக மணி, ருக்மணி ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
நீண்டதொரு நிகழ்ச்சி இனிமையாக இரண்டு மணி அளவில் முடிந்தது. அவையோர்களுக்கு ஸ்னாக்ஸ் bag வழங்கப் பட்டும், அவைக்குள் சாப்பிடக்கூடாது என்று நூலகத்திலிருந்து ஒருவர் அவ்வப்போது வந்து குரல் கொடுத்து விட்டு சென்றதால்…..
செவிக்கு உணவு கிடைத்த போதும்…… வயிற்றுக்கும் வேண்டி இருந்தது அனைவர்க்கும்.
நிகழ்ச்சிக்கு வந்த அனைவருமே முக்கிய நபர்கள் பெயர் பட்டியல் நீளும்.
